தம்பதிகளுக்குள் அன்யோன்யத்தை அதிகரிக்கும் ரகசியம்
8 மாசி 2016 திங்கள் 10:12 | பார்வைகள் : 8588
தம்பதிகளுக்கு இடையேயான அன்யோன்யத்தை அதிகரிப்பதற்கான அத்தியாவசியமான மூலக்கூறைப் பற்றி அறிய சமீபத்திய ஆராய்ச்சி முடிவு உதவியதாக தெரியவந்துள்ளது.
சுமார் ஆயிரத்து இருநூற்று இருபத்தெட்டு ஜெர்மன் நாட்டுத் தம்பதிகளை தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு ஆய்வில் உட்படுத்தியதன் மூலமாக மனைவியுடன் வீட்டு வேலைகளை பகிர்ந்துகொள்ளும் கணவர்களுக்கு மிகச் சிறந்த தாம்பத்திய வாய்ப்பு கிடைப்பதாக தெரியவந்துள்ளது.
இந்தத் தம்பதியரிடம், அவர்களது துணை செய்யும் எவ்விதப் பணிகள் இனிய தாம்பத்தியத்திற்கு வழிவகுக்கின்றது என கேள்வியெழுப்பப்பட்டது. இதில் பெரும்பாலான தம்பதிகளின் அன்யோன்யத்துக்கு வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்ளும் கணவன்மார்களே காரணம் என தெரியவந்தது.
இந்த ஆய்வை மேற்கொண்ட மருத்துவர் ஜான்சன் இது தொடர்பாக பேசும்போது, ‘எவ்வித உறவும் மேம்படுவதற்கு வீட்டுப் பணிகளை பகிர்ந்துகொள்வது அவசியம். அதிலும், திருமண வாழ்க்கை என்று வரும்போது, சமையலறையிலும், வீட்டின் மற்ற பணிகளிலும் மனைவிக்கு துணைபுரியும் கணவர்கள் மனைவியரின் மனதை வெல்வதுடன், இனிமையான தாம்பத்தியம் அமையவும் வழிவகுக்கின்றனர்’ என குறிப்பிட்டுள்ளார்.