Paristamil Navigation Paristamil advert login

காம உணர்வுகள் சரியா தவறா?

காம உணர்வுகள் சரியா  தவறா?

27 தை 2016 புதன் 08:05 | பார்வைகள் : 14171


 உணர்வுகள் நல்லதா அல்லது கெட்டதா எனச் சிலருக்குச் சந்தேகம் வரும்.

அதை முழுமையாக இல்லாவிட்டாலும், சிறிய அளவு தெரிந்து கொள்வோம்.
காம உணர்வு என்பது உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்துக்கும் இயல்பாகவே இருக்கக் கூடியதாகும். 
 
யாரும் சொல்லித்தராமலே, பறவைகள் முட்டை இடுகின்றன.விலங்குகள் குட்டி போடுகின்றன. மனிதன் இனப் பெருக்கம் செய்கிறான். இவைகளுக்கு மூல காரணம் காமம் தான் என்கிறனர் ஆராய்ச்சி நிபுணர்கள்.
 
 
இதில், மனிதர்களுக்கு உணர்வு அளிக்கும் உறுப்புகளாக அமைந்திருப்பவை ஐம்புலன்கள் தான். அவை, பார்த்தல், கேட்டல், ருசித்தல், வாசனை அறிதல், தொட்டு உணர்தல் ஆகியவை ஆகும்.
 
இந்த ஐம்புலன்கள் நுகர்வால் இன்பம் அனுபவிக்க உண்டாகும் ஆசையே காமம். மற்ற இன்பங்களைக் காட்டிலும் தொடு உணர்வால் ஏற்படும் இன்பம்தான் மிகச்சிறந்த இன்பமாம். மனிதனுக்குக் காம உணர்வின்றி நிச்சயம் இருக்க முடியாது.
 
உறுதியாகக் காம உணர்வு இருக்கும். அந்த உணர்வு அளவோடு இருக்க வேண்டும்.
விலங்குகள் மற்றும் பிற உயிரினங்கள் எல்லாம் இன விருத்திக்காகதான், அதற்கான பருவத்தில் மட்டுமே ஒன்று சேர்கின்றன. 
 
ஆனால், மனிதன் தான், எல்லாக் காலத்திலும், பல இடத்திலும் செக்ஸ்-ஐ மிகச் சிறப்பாக உயர்வாக அனுபவிக்கிறான்.ஆணும் பெண்ணும் இருவருமே செக்ஸ்-ஐ விரும்புவதால், அவர்களுக்குள் சில நியாயமான விதிமுறைகளை வகுத்துக் கொண்டு செயல்படுகின்றனர்.
இது தான் அவர்களை விலங்குகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டி உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.
 
 
மேலும், எந்த உயரினமும் செக்ஸ்ல் முழு திருப்தி அடைவதில்லை. அது போல நிரந்தர உறவும் வைத்துக் கொள்வதில்லை.ஆனால், மனிதன் செக்ஸ்ல் பூரண இன்பம் பெறுகிறான். ஆக, மனிதன் செக்ஸ்ல் கொடுத்துவைத்தவன்.
 
காம உணர்வுகள் அடுத்தவர்களுக்குத் தொல்லை கொடுக்காமல், நமது கலாச்சாரத்திற்கு ஏற்ற வகையில்,  நியாயமானதாக இருக்க வேண்டும்.இல்லை எனில் நம்மை சட்ட சிக்கலில் சிக்கிக் கொள்ள வைத்துவிடும். இதனால் தான் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று அன்றே ஒரு பழமொழியை நமது முன்னோர்கள் சொல்லிவைத்துள்ளார்கள்.காம உணர்வு அளவோடு இருந்தால் எந்தப் பாதிப்பும் இல்லை.

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்