திருமணம் செய்துகொள்வதால் ஏற்படும் 5 ஆச்சரியமூட்டும் நன்மைகள்
20 தை 2016 புதன் 10:15 | பார்வைகள் : 8531
எத்தனை பேருக்கு தெரியும் திருமணம் செய்து கொள்வதால் வரும் நன்மைகளைப் பற்றி…. பெரும்பாலும் திருமணம் என்பது கொடுமையானது, அந்த குழியில் விழுந்துவிட வேண்டாம் என்று நமது நெருங்கிய நண்பர்களே ஆயிரம் முறை அறிவுரை கூறியிருப்பார்கள். ஆனால், அப்படி கூறுபவர்கள் யாரும், கொடுமையாக இருக்கிறது என்று விவாகரத்து செய்துகொள்வது இல்லையே.
திருமணத்தால் விளையும் நன்மைகள்:
மனம், உடல், இல்வாழ்க்கை, எதிர்காலம், பொருளாதாரம் என அனைத்து வகையிலும் உங்களுக்கு நன்மைகள் ஏற்படும். புதிய வீடு, புதிய உறவுகள் ஒருவிதமான புது மகிழ்ச்சியை அளிக்கும். இது ஆண், பெண் இருவர் மத்தியிலும் இருக்கும்.
வேறு ஜாதியில் திருமணம் செய்யும் போது ஆச்சரியம், இரட்டிப்பு மடங்காக இருக்கும். நாம் இதுவரை அறியாத சடங்குகள், சம்பிரதாயங்கள் குடும்ப பழக்க வழக்கங்கள் எல்லாம் புது உணர்வை அளிக்கும்.
பொருளாதாரம் உயரும். இருவரின் ஊதியம் குடும்பத்தை நல்ல முறையில் நடத்த உதவும். ஆனால் இதற்கு திட்டமிடுதல் மிகவும் அவசியம்.உங்கள் வாழ்க்கை முழுதும் உங்களுக்கு நம்பகமாகவும், நம்பிக்கையாகவும் இருக்க ஒரு நபர் இருக்கிறார் என்று நீங்கள் உறுதியாக இருக்கலாம்.
உங்கள் எதிர்காலத்தையும் சேர்த்து காதலிக்க, அதற்காக உழைக்க, உறுதுணையாக இருக்க ஒருவர் இருப்பார். இது உங்களுக்கு உத்வேகம் அளிக்கும்.