இருபது முதல் அறுபது வரை இல்வாழ்க்கை சுப(க)மாக இருக்க வேண்டுமா???
11 தை 2016 திங்கள் 10:45 | பார்வைகள் : 8762
உங்கள் திருமண வாழ்க்கை நீண்ட காலம் நிலைத்து நிற்க, மகிழ்ச்சியாக அமைய வேண்டும் எனில் கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் நேர்மையாக இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் இருவரும் சிறந்த நண்பர்களாக இருக்க வேண்டும்.
சண்டை சச்சரவு இல்லாத இல்லறமே இல்லை, அதில் யார் ஒருவர் விட்டுக் கொடுத்து போகிறார்களோ அந்த வீடுகளில் தான் நல்லறமாக திகழ்கிறது. யார் யாருக்கோ விட்டுக் கொடுத்து போகும் நாம், வீட்டில் இருக்கும், கணவன், மனைவியிடம் விட்டுக்கொடுத்து போவதில் எந்த தவறும் இல்லை.
எவ்வளவு சம்பளம், எவ்வளவு செலவு என்பதனை, ஒரு ரூபாயாக இருந்தாலும் கூட கணவன், மனைவி மத்தியில் பொருளாதாரம் என்ற விஷயத்தில் ஒளிவிமறைவு இல்லாமல் இருக்க வேண்டும்.
மாமன், மச்சான், நாத்தனார் என உறவுகள் அனைவருடன் ஒன்றி வாழ்வது. உறவுகள் இல்லாத குடும்பம், தோரணம் அற்ற திருவிழா போல, வண்ணமயமாக காட்சியளிக்காது என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.
இருபதாக இருந்தாலும் சரி, அறுபதாக இருந்தாலும் சரி ரொமான்ஸ்க்கு குறைச்சல் இருக்க கூடாது. உடல்கள் இரண்டு இணைவது மட்டுமே ரொமான்ஸ் அல்ல. மனது இரண்டும் பிரியாமல் இருப்பது தான் ரொமான்ஸ். அதில் விரிசல் விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் இல்வாழ்க்கை என்றும் இனிக்கும்.
கணவன் மனைவி இருவரும் திருமணம் நடந்த புதிதில் பேசிக் கொண்டே இருப்பார்கள். போக, போக நாளடைவில் இது குறைய ஆரம்பிக்கும். இது நடக்க கூடாது, என்ன தான் வேலை பளுவாக இருந்தாலும் உங்கள் இருவரின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் செயல்கள் அனைத்தும் இருவரும் பகிர்ந்துக் கொள்ள வேண்டும். இது தான் உங்க இருவரையும் பிரியாமல் இணைக்கும் பாலம்