ஆண் அறிந்து கொள்ள பெண் புரிந்துகொள்ள

6 தை 2016 புதன் 10:24 | பார்வைகள் : 12659
ஆண் இன்றி பெண்ணும், பெண் இன்றி ஆணும் உறவு அமையாது. ஒவ் வொரு
ஆணின் வாழ்க்கையிலும் பெண் என்பவள் பல பாத்திரங்கள்கொண்டு பயணிக்கிறாள். அதில், தாய், தங்கை, தோழி, காதலி, மனைவி, மகள் போன்ற பாத்திரங்கள் தான் ஆணின் வாழ்கை யை முழுமைப்படுத்துகிறது.
இவர்கள் ஓர் ஆணின் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமாக இருக்கிறார்கள் இவர்களது பங்கு ஆணின் வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பார்க்கலாம்..
* தாயாக ஓர் ஆணின் வாழ்கையில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறாள். இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்துவது மட்டு மின்றி, இவள் மூலமாகதான் உறவுகளும் நமக்கு அறி முகம் ஆகிறது.
* ஓர் ஆண் முதன் முதலாக காவலனாக இருப்பது அவன து சகோதரிக்கு தான். ஒவ்வொரு மகளின்முதல் ஹீரோ அப்பா என்றால், முதல் காவலன் அவளது சகோதரனாக தான் இருக்க முடியும்.
*உறவினர், தாய், சகோதரிக்குபிறகு ஓர் ஆணுக் கு கிடைக்கும் முதல் வெளியுலக பெண் உறவு, தோழி தான். ஓர் உண்மையான தோழியுடன் ஆண் தன் வாழ்க்கையின் அனைத்து சுக, துக்க ங்களையும் பகிர்ந்துக் கொள்கிறான். ஏனெனில், அந்த ஒரு தோழியினால் தான் அவனது துக்கத்தை குறைக்கவும் சுகத்தை பெருக்கவும்முடியும்.
*சிலருக்கு காதலி மனைவியாக அமைகிறார்கள், சிலரு க்கு மனைவி தான் காதலியாக அமைகிறார்கள். ஏதோ ஓர் வகையில் அனைவருக்கும் ஓர் காதலில் கிடைத்து விடுகிறாள். ஒவ்வொரு ஆண்மகனின் பருவவயது ஏக்கம் காதல். ஆனால் அது பதின் வயதை தாண்டியும் நிலைத்து நின்றால் மட்டுமே புனிதம் ஆகிறது. காதல் என்பது ஓர் ஆணின் வாழ்க்கையை சொர்க்கமாக்குகிறது
* தன் பதியை நம்பி உடல்பொருள், ஆவியில் பாதி அங்கம் கொடுப்பவள் மனைவி. மனைவி தவறு செய்யும் போது கணவன் கண்டிப்பான், அதே கணவன் தவறு செய்யும் போது மனைவி திருத்துவாள். இதுதான் கணவன், மனைவிக்கு இடையில் இருக்கும் வித்தியாசம். உண்மையி லேயே மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் தான்.
* ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையிலும், பெண்ணுடனான உறவு என்பது, ஓர்பெண்ணின் கருவறையில்தொடங்கி, மற்றொரு பெண்ணின் கருவறையில் முடிவடைகிறது. தாயின் கருவறையில் இருந்து இவ்வுலகில் தொடங்கி, மனைவியின் கருவில் இருந்து உதித்த மகள் எனும் புதிய உலகம் என ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையிலும் இரண்டு உலகங்கள் இருக்கின்றன.
,*முதுமை எட்டியபிறகு ஓர் ஆண் அதிகம்மனம் மகிழ்ந்து புன்னகைக்கிறான் எனில் அதற்கு முக்கிய காரணம் அவனது உயிரில் இருந்து ஜனித்த உயிரின் உயிராக தான் இருக்க முடியு ம். தாத்தா ஆரம்பித்து பேத்தி கேட்கும் விடைக ளுக்கு ஏதேனும் ஓர் பதிலை அவன் கொடுத் துக் கொண்டே தான் இருக்கிறான்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1