Paristamil Navigation Paristamil advert login

கல்யாண வாழ்க்கையில் புரிந்து கொள்ளும் 5 கட்டங்கள்....

கல்யாண வாழ்க்கையில் புரிந்து கொள்ளும்   5 கட்டங்கள்....

21 மாசி 2015 சனி 07:20 | பார்வைகள் : 9208


 வாழ்க்கையில் உங்களை உற்சாகப்படுத்த ஒருவர் தேவைப்படுகிறார்கள். ஊக்கப்படுத்தவும் உற்சாகம் அளிக்கவும் அப்படி ஒருவர் இல்லாத போது, உறவில் ஒருவித வெறுமை தலைதூக்குகிறது. காதலிக்கும் போதும் சரி... கல்யாணமான ஆரம்ப நாட்களிலும் சரி... கணவன்-மனைவி  இருவரின் எண்ணம், செயல், சிந்தனை எல்லாம் தன் துணையை உற்சாகப்படுத்துவதிலும், கவனம் ஈர்ப்பதிலும்தான் இருக்கும். 

 
தனது அருகாமை தன்  துணைக்கு மகிழ்ச்சியான உற்சாகத்தைக் கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்கள். திருமணம் முடிந்த சில தினங்களில் இது தலைகீழாக  மாறி விடுவதைப் பார்க்கலாம். துணையின் மீது ஒருவித அலட்சியம் தலைதூக்கும். துணைக்கு நாம் செய்ய வேண்டிய வேறு எந்த வேலையை வேண்டுமானாலும் யாரிடமும் ஒப்படைக்கலாம். 
 
ஆனால், துணையை உற்சாகப்படுத்துகிற  ‘சியர் லீடர்’ வேலையை அப்படி யாரிடமும் மாற்றி விட முடியாது. தன்னை உற்சாகப்படுத்துகிற, ஊக்கப்படுத்துகிற, குறிப்பாக... பாராட்டுகிற  நபரைத்தான் யாருக்குமே பிடிக்கும். வாழ்க்கைத் துணைவர் அந்த வேலையைச் செய்யத் தவறுகிற பட்சத்தில், சம்பந்தமில்லாமல் அதைச் செய்கிற  இன்னொரு நபரிடம் ஈர்ப்பு உண்டாவது இயற்கையே. 
 
துணையை உற்சாகப்படுத்தி மகிழ்விப்பதன் அவசியம் உணராததாலேயே, பல தம்பதியரின் உறவு திசை மாறி நகர்கிறது. விமானத்தில் ‘ஆட்டோ பைலட் மோடு’ என்று ஒன்று உண்டு. விமானியின் உதவியின்றி விமானம் தானாகச் செல்ல  இது உதவும். பலரும் வாழ்க்கை என்கிற விமானத்தை அப்படித்தான் ஆட்டோ பைலட் மோடில் போட்டுவிட்டு அலட்சியமாக இருந்து விடுகிறார்கள். 
 
அதன்  பின்னணியில் மறைந்திருக்கும் ஆபத்தை உணராதவர்கள் அவர்கள். திருமண உறவில் 5 முக்கிய கட்டங்கள் உண்டு. அழகான நிலையில் இருந்து  ஆபத்தான நிலை நோக்கி, ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மிக இயல்பாக உறவு நகர்வதை பெரும்பாலான தம்பதியர் அறிந்திருப்பதில்லை. 
 
முதல் கட்டம் :
 
குதூகலமான, கொண்டாட்டமான காலம் இது. திருமணத்துக்கு முந்தைய அல்லது திருமணமான முதல் சில நாட்களை உள்ளடக்கிய இந்தக்  காலம் தற்காலிகமானது. கணவன்-மனைவி இருவருமே சியர் லீடர்களாக இருக்கும் காலமும்கூட. வாழ்க்கை முழுக்க இந்த கட்டத்திலேயே இருந்து  விட்டால் பிரச்சனைகளுக்கே இடமில்லை. ஆனாலும், அது சாத்தியமே இல்லை. 
 
இரண்டாவது கட்டம் :
 
திருமணமாகி, வாழ்க்கையில் ஓரளவுக்கு செட்டிலான காலம் இது. ஒருவர் மீது ஒருவர் கொண்ட த்ரில் சற்றே குறைந்திருக்கும்.  ஆனாலும், பரஸ்பர பாராட்டு இருக்கும். சியர் லீடராக இருப்பதிலிருந்து விலக ஆரம்பிப்பார்கள். இருவருக்கும் இடையில் நெருக்கம் அப்படியே  இருக்கும். ஒருவரின் தவறுகளை இன்னொருவர் மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்கிற மனநிலையில் இருப்பார். திருமண உறவிலேயே மிகவும்  சிறந்த கட்டம் இது என்றாலும், இந்த நிலையிலும் பெரும்பாலான தம்பதியரால் தொடர்ந்து இருக்க முடிவதில்லை. 
 
மூன்றாவது கட்டம் :
 
துணையின்  மீதான த்ரில் இன்னும் கொஞ்சம் குறைந்திருக்கும். துணையின் பாசிட்டிவ் பக்கங்களை மட்டுமே பார்த்த நிலை மாறி, நெகட்டிவ் பக்கமும் தெரிய  ஆரம்பிக்கும். துணையை உற்சாகப்படுத்துகிற சியர் லீடர் மனப்பான்மை முற்றிலும் காலியாகியிருக்கும். பரஸ்பர பாராட்டு அறவே இருக்காது.  தவறுகளைக் கண்டுபிடிக்கத் தொடங்கி இருப்பார்கள். சின்னச் சின்ன விஷயங்களைக் கூட விமர்சிக்க ஆரம்பித்திருப்பார்கள். 
 
நான்காவது கட்டத்தில் நாம் தேர்ந்தெடுத்த துணை நமக்குக் கொஞ்சமும் பொருத்தமற்றவரோ... அவசரப்பட்டு தவறான முடிவெடுத்து விட்டோமோ என  நினைக்க வைக்கிற கட்டம் இது. துணையிடமிருந்து விலகியிருக்கத் தோன்றும். துணையிடம் நிறைகளைவிட, குறைகளே அதிகம் என நினைக்க  வைக்கும். 
 
ஐந்தாவது கட்டம் :
 
முந்தைய ஸோனில் தவறான துணையைத் தேர்ந்தெடுத்து விட்டோமோ எனக் குழம்ப வைத்தது மாறி, தவறான  துணைதான் என முடிவே செய்யவைக்கிற கட்டம் இது. துணையிடம் நெகட்டிவ் விஷயங்கள் மட்டுமே உள்ளதென நினைக்கச் செய்யும். அப்படியொரு  துணையுடன் வாழவே முடியாதென்கிற மனநிலைக்குத் தள்ளும். நிச்சயம் பிரிவை நோக்கி முன்னேற வைக்கும் 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்