Paristamil Navigation Paristamil advert login

க‌ணவரை முந்தானையில் முடிந்து கொள்ள‍ ஆலோசனைகள்....

க‌ணவரை முந்தானையில் முடிந்து கொள்ள‍  ஆலோசனைகள்....

19 மாசி 2015 வியாழன் 07:09 | பார்வைகள் : 8999


 த‌னது கணவனுக்கு தான் எப்ப‍டி நடந்துகொள்ள‍ வேண்டும், எப்ப‍டி நடந்தால் தன்னை தனது கணவன் நேசிப்பான் என்றெல்லாம் ஆராய்ந்து பார்த்து, அதன் படி கணவனுக்குப் பிடித்த‍த மனைவி செய்து, அவனது மனதில் நீங்கா இடம்பிடிக்க வேண்டும். 

 
அப்போது தான் அவனது மனதில் ஆஹா, தனக்காக அவளையே மாற்றிக்கொண்டு வாழ்கிறாளே! என்று  உங்கள் மீது ஒரு மதிப்புத் தோன்றும் அந்த மதிப்பு நாளடைவில் மரியாதையாக மாறி உங்களது வார்த்தைகளுக்கு கட்டுப்படுவார். உங்களுடன் வண்டியில் போகும் போது உங்களுக்குத் தெரிந்தே மற்ற பெண்களை சைட் அடிக்கிறாரா? உங்களுக்குத் தெரியாமல் தனது வண்டியில் பெண்களுக்கு லிஃப்ட் தருகிறாரா? அதையெல்லாம் பெரிதுபடுத்தாதீர்கள். 
 
மன்னித்து, மறந்துவிடுங்கள். ஏதேனும் முக்கியமான பிரச்சனை குறித்து விவாதிக்கிறீர்களா? பேச்சு சண்டையில் முடியும் போலத் தெரிகிறதா? சட்டென்று பேச்சை நிறுத்திக் கொள்ளுங்கள் அல்லது வேறு விஷயத்திற்குத் தாவி விடுங்கள்.   அவரைப் பார்த்துப் பொறாமைப்படுங்கள். அது ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும். கட்டுப்பாட்டிற்குள் இருக்கவேண்டும். 
 
பைசா பெறாத விஷயத்திற்குக் கூடத்தானே முடிவெடுக்க வேண்டும் என்று நினைப்பவரா? போகட்டும், விட்டுவிடுங்கள். அந்த முடிவு பாதக விளைவுகளைத் தரும்போது நாசுக்காய் சுட்டிக் காட்டுங்கள். உங்களுக்குள் என்னதான் கருத்து வேறுபாடு இருந்தாலும் அவற்றையெல்லாம் பெட்ரூமுக்கு உள்ளே வர அனுமதிக்காதீர்கள். 
 
உங்கள் உடல், மனநிலைக்கேற்ப அடிக்கடி செக்ஸ் உறவில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். அவரது அம்மாவை கொஞ்சம் நேசியுங்கள். பிறகென்ன, மனிதர் உங்களைத் தலையில் வைத்துக்கொண்டாட ஆரம்பித்து விடுவார். உங்களை எங்கேயாவது அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லி விட்டு, சொன்ன வார்த்தையைக் காப்பாற்றத் தவறி விடுகிறாரா? ஆளைப்பார்த்தும் ஆத்திரமாகக் கத்தாதீர்கள். 
 
ஏமாற்றத்தை வார்த்தைகளிலோ, முகத்திலோ காட்டிக்கொள்ளாதீர்கள். அவரது செயல் உங்களை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை என்கிறபடி உங்கள் நடவடிக்கை இருக்கட்டும். மனிதர் தானாக வழிக்கு வருவார். அடுத்தமுறை அதே தவறைச் செய்யத் தயங்குவார். அவரது நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரிடமு ம் நன்றாகப் பேசிப் பழகுங்கள். 
 
யார் மீதாவது உங்களுக்கு வெறுப்பு இருந்தாலும் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாதீர்கள். உங்களவருக்கு நெருங்கிய நண்பர்களாவோ, உறவினர்களாகவோ இருந்தாலும் கூட மூன்றாம் நபருக்கு எதிரில் அவரை விட்டுக் கொடுத்துப் பேசாதீர்கள். எக்காரணம் கொண்டும் உங்களவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள். இந்த விஷயத்தில் பெரும்பாலான ஆண்களுக்குப் பரந்த மனப்பான்மை கிடையாது. 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்