Paristamil Navigation Paristamil advert login

விவாகரத்து அதிகரிப்பதற்கான காரணங்கள்

விவாகரத்து அதிகரிப்பதற்கான காரணங்கள்

2 மாசி 2017 வியாழன் 14:24 | பார்வைகள் : 9081


 குருவி கூட தனக்கான ஒரு கூட்டை ஒரே நாளில் கட்டிக்கொள்வதில்லை. பல நாட்கள் போராடி தான் தனக்கான பாதுகாப்பான கூட்டை அமைத்து கொள்கிறது. சில சமயம் குருவியே தான் கட்டிய கூட்டை அழித்து விட்டு பின்னர் அவதிப்படும். அதுபோல் தான் திருமண பந்தமும். சமீபகாலமாக திருமணத்திற்கு பின்னர் மனமுறிவு ஏற்பட்டு கணவன்-மனைவி பந்தத்தை சிதைத்துக்கொள்ள நீதிமன்ற வாசலில் ஆண்டு கணக்கில் தவம் கிடக்கும் தம்பதிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. 

 
மாறி வரும் வாழ்க்கை சூழல் தான் இதுபோன்ற அவலங்களுக்கு காரணம். இயந்தரத்தனமான வாழ்க்கையில் கூட்டு குடும்பமாக இருப்பது கஷ்டமாக தெரிகிறது. தற்போது, கணவன்-மனைவி சண்டையில் மூக்கை நுழைக்க கூட யாரும் முன்வருவதில்லை. இதனால் சாதாரண சம்பவங்கள் கூட கடைசியில் மனமுறிவு ஏற்பட்டு விவகாரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு செல்கிறது. தற்போதைய பொருளாதார சூழலில் கணவன், மனைவி இருவரும் சம்பாதிக்க வேண்டிய பொருளாதார நெருக்கடியில் உள்ளனர்.
 
குடும்ப பிரச்னைகள் கூட மனம் விட்டு பேசிக்கொள்ளும் தன்மை இல்லாததாலும் குடும்பங்கள் சிதைந்து விடுகின்றன. மூன்றாம் நபர்களிடம் குடும்ப விஷயங்களை, விருப்பங்களை பகிர்ந்து கொள்வதாலும் கணவன், மனைவி இடையே விரிசல் ஏற்பட்டு, சந்தேகம் வலுத்து விவாகரத்தில் முடிகிறது. எனவே பிறரிடம் குடும்ப உறவுகளை பற்றி வெளிப்படுத்துவதை இருபாலாரும் தவிர்க்க வேண்டும். தற்போது ஆடம்பர மோகம், பெருநகர கலாசாரமும் விவாகரத்துக்கு ஒரு முக்கிய காரணி.
 
கணவன், மனைவி இடையே தாம்பத்திய உறவு குறையும் போது வெவ்வேறு ரூபங்களில் வெளிப்படுகிறது. குடிப்பழக்கம், மனைவி, குழந்தைளை கவனிக்காதது, புறக்கணிப்பும் விவாகரத்தை அதிகரிக்க காரணம். குழந்தைகளை நல்லொழுக்கத்துடன் வளர்ப்பது இக்கால கட்டத்தில் சிரமமாக இருக்கும் போது, பிளவு பட்ட குடும்பத்தில் வளரும் குழந்தை மனதளவில் தாழ்வு மனப்பான்மையுடன் சமுதாயத்தை நேர் கொள்ள முடியாத நிலை உள்ளது.
 
எதிர்மறை எண்ணங்கள் கொண்ட குழந்தைகள் உள்ள சமுதாயம் ஆரோக்கியமானதாக இருக்க வாய்ப்பில்லை. விவாகரத்து பெற்றால் உறவு மதிக்காதே என்ற பயம் முன்பு இருந்தது. அவசரப்பட்டு விவாகரத்து பெறுவோர், இன்னொரு வாழ்வை அமைத்து கொண்டாலும், வெற்றிகாரமாக ஒரு சிலரால் மட்டுமே முடிகிறது. இயலாத சிலர், வாழ்வு அதன் போக்கில் போகிறது மன உறுதியுடன் இருப்போர் மட்டுமே லட்சியத்துடன் முறைப்படி வாழ்வை கொண்டு செல்கின்றனர். குழந்தைகளின் நலன் கருதியாவது விவாகரத்தற்ற இனிய குடும்பங்கள் சேர்ந்த சமூக அமைப்போம் என ஒவ்வொரு பெற்றோரும் எண்ணினால் நிச்சயம் நடக்கும்.
 
கூட்டு குடும்ப முறை நமது பண்பாட்டின் அடையாளம். ஆனால் தற்போது கூட்டு குடும்ப முறை மிகவும் அரிதாகி விட்டது. அக்காலங்களில் கணவன், மனைவி இடையே மனத்தாங்கள் ஏற்பட்டால், ஆரம்பத்திலேயே பெரியவர்கள் பிரச்னையை பெரிதாக விடாமல் தீர்த்து வைத்து விடுவார்கள். தற்போது கணவன், மனைவி இடையே பிரச்சனை உருவான உடனே பொறுமையின்றி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு செல்வதால் வாழ்க்கையே உடைந்த கண்ணாடியாகிறது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்