காதலை ஏற்பதா? வேண்டாமா?
22 தை 2017 ஞாயிறு 11:03 | பார்வைகள் : 9232
காதலில் பெண்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். பழகும் நபர் அல்லது காதலை வெளிப்படுத்தும் நபர் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொண்டுதான் காதலை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டு அவஸ்தைபட்டுவிடக்கூடாது.
பழகும் ஆண் நண்பரின் நடவடிக்கைகள் என்ன? அவர் நல்லவரா, கெட்டவரா? காதலை ஏற்கவா, வேண்டாமா? என்ற குழப்பத்தில் தவித்தால் நீங்கள் தெளிவான முடிவினை அதிரடியாக எடுக்க இந்த பரிசோதனை வழிகாட்டும்!
கீழ்க்காணும் கேள்விகளுக்கு நிதானமாக பதில் அளியுங்கள்.
1. நீங்களும், அவரும் சந்திக்கும் இடங்களை முடிவு செய்வது நீங்கள்தானா?
2. அவரை நினைக்கும்போது மனதில் உற்சாகம் பீறிடுகிறதா?
3. மற்றவர்களைவிட அவரிடம்தான் அதிக நெருக்கம் காட்டுகிறீர்களா?
4. உங்கள் மீது அதிக அன்பைப் பொழிவது அவர்தானா?
5. உங்கள் துயரத்தை போக்குவதற்கு அவரே சரியான நபரா? அவரது ஆறுதலே உங்களை கவலையில் இருந்து வெளிக் கொண்டு வருகிறதா?
6. வெளிப்படையாக பேசுகிறாரா? அவரைப் பற்றிய விஷயங்கள் பெரும்பாலும் உங்களுக்கு அத்துப்படியா?
7. அவரது ஒழுக்கம் உங்களுக்கும், சுற்றியிருப்பவர்களுக்கும் திருப்தியளிப்பதாக உணர்கிறீர்களா?
8. அவருடனான பிரிவு வாட்டுகிறதா?
9. தன் தகுதியைத் தாண்டியும் உங்கள் தேவையை நிறைவேற்ற போராடுகிறாரா?
10. நீங்கள் ஏதாவது பிரச்சினையில் சிக்கியபோது முதல் ஆளாக வந்து உதவினாரா?
11. ரகசிய சந்திப்புகளுக்கு அழைக்கிறாரா? தொட்டுத் தொட்டுப் பேசுவதை விரும்புகிறாரா?
12. அவருடன் எல்லாவற்றிலும் சற்று இடைவெளி அவசியம் என நினைக்கிறீர்களா?
13. வேறு பெண்களுடனும் நெருக்கம் காட்டுகிறார் என நினைக்கிறீர்களா?
14. நிறைய விஷயங்களில் ரகசியம் பின்பற்றுபவர் என கருதுகிறீர்களா?
15. சந்திப்பின்போது செக்ஸ் உறவு பற்றிய பேச்சுகள் மிகுதியாக இருக்கிறதா?
16. அவரை ஏற்றுக் கொள்ள மனம் தயங்குகிறதா?
17. திருமண பேச்சை எடுத்தால் மழுப்புகிறாரா?
18. நண்பர்கள், தோழிகள் அவரது பின்புலத்தை சந்தேகிக்கிறார்களா?
19. காதலுக்கு தடையாக இருக்கும் விஷயங்களை கண்டு நடுங்குகிறாரா?
20. கலந்துரையாடும்போது அவரது முடிவுக்கு கட்டுப் படும்படி உங்களை நிர்பந்திக்கிறாரா?
இந்த கேள்விகளுக்கு ஆம்/இல்லை என்று பதில் அளியுங்கள். முதல் 10 கேள்விகளுக்கு ஆம் என்ற பதிலுக்கு 10 மதிப்பெண்களும், 11 முதல் 20 வரையுள்ள கேள்விகளுக்கு இல்லை என்ற பதிலுக்கு 10 மதிப்பெண்களும் கொடுங்கள். அதேபோல முதல் 10 கேள்விகளுக்கு ‘இல்லை’ என்ற பதிலுக்கு 5 மதிப்பெண்களும், 11 முதல் 20 வரையுள்ள கேள்விகளுக்கு ‘ஆம்’ என்ற பதிலுக்கு 5 மதிப்பெண்களும் கொடுங்கள்.