பெண்கள் தாம்பத்திய உறவில் ஈடுபட தடங்கலாக இருக்கும் காலகட்டங்கள்
26 ஆடி 2016 செவ்வாய் 13:30 | பார்வைகள் : 8742
குழந்தைப் பெற்ற பிறகு பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதற்கு தடங்கலாக இருக்கும். இந்த மாற்றம் ஒருசில மாதங்களில் சரியாகிவிடும். ஆனால், அதுவரை ஆண்கள் காத்திருக்க வேண்டும்.
குழந்தை பெற்ற பிறகு ஆறேழு வாரத்திற்கு பெண்களுக்கு இரத்தப்போக்கு அடிக்கடி ஏற்படலாம். இதற்கு பிரசவத்தின் போது அவர்களுக்கு பிறப்புறுப்பில் ஏற்பட்ட கிழிசல் காரணமாக இருக்கின்றது. எனவே, இந்த நேரத்தில் நீங்கள் அவர்களுக்கு அரவணைப்பாக இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும்.
முதல் முறை குழந்தை பெற்ற பிறகு தான் பெண்களுக்கு மார்பகத்தில் பால் சுரக்க ஆரம்பிக்கும். சிலருக்கு அளவிற்கு அதிகமாக பால் சுரக்கும். சிலருக்கு குறைவாக பால் சுரக்கும். எனவே, இதனால் சிலர் அசௌகரியமாகவும், சிலர் சற்று கடினமாக / வலியுடன் காணப்படுவர்.
அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு அடிவயிற்றில் அந்த காயம் ஆறுவதற்கு ஆறு மாதங்கள் வரை எடுத்துக் கொள்ளும். எனவே, இந்த ஆறு மாதங்களும் நீங்கள் அவர்களை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
குழந்தை பிறந்த பிறகு பெண்களின் உடல்வாகு சற்று மாறும். முக்கியமாக வயிறு பகுதி சற்று தொளதொளவென்று இருக்கும். இந்த உடல்வாகு மாறும் வரை அல்லது சற்று பழைய நிலைக்கு ஃபிட் ஆகும் வரை பெண்கள் உடலுறவில் ஈடுபட தயங்குவார்கள்.
சுகப்பிரசவம் ஆன பெண்களுக்கு பிறப்புறுப்பு சற்று விரிவடைந்திருக்கும். இது, பழைய நிலைக்கு திரும்ப நான்கைந்து மாதங்கள் எடுத்துக் கொள்ளும். எனவே, அதுவரை தாம்பத்தியத்தில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்வது நல்லது.
குழந்தை பெற்ற பிறகு, பெண்களின் உடலில் சில ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். இதனால், தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது அவர்கள் சற்று வலியுடன் உணர்வார்கள். இதை, கணவன்மார்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். மாறாக அவர்களை வற்புறுத்துவது, உடல் ரீதியாக வலியை தாங்கிக் கொண்டிருக்கும் அவர்களுக்கு மன ரீதியான வலியும் சேரும்படி ஆகிவிடும்.