ஆண்கள் பெண்களிடம் விரும்பாத சில விஷயங்கள்!!!

11 ஐப்பசி 2014 சனி 12:15 | பார்வைகள் : 13321
பெண்கள் மற்றும் ஆண்களின் விருப்பு வெறுப்புகள் பெரும்பாலும் வேறுபட்டே காணப்படுகின்றன. நீங்கள் சரி என்று மிகவும் விரும்பும் விஷயங்கள், உங்கள் எதிர்பாலினத்தவரை கோபப்படுத்தவோ அல்லது வெறுப்படையவோ செய்யலாம். அதிலும் பெண்கள் செய்யும் சில விஷயங்கள் ஆண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. மேலும் சிலர் வெளிப்படையாக சொல்லவும் மாட்டார்கள்.
ஆகவே பெண்களே! உங்கள் துணை உங்களிடம் சொல்லாத ஆனால் அவர் நீங்கள் செய்வதை விரும்பாத சில விஷயங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து உங்களிடம் அவர் விரும்பாத சில விஷயங்களை தெரிந்து கொண்டு, அதனைத் தவிர்த்து அவரை மகிழ்விக்க முயற்சி செய்யுங்கள்.
உங்களது உறவு புதியதாக இருந்த போது, நேரம் கடந்த போன் பேச்சுக்கள் வேடிக்கையாகவும், சிறப்பானதாகவும் அமைந்திருக்கும். ஆனால் தற்போது அதற்கான காலம் கடந்து விட்டது. மேலும் தற்போது ஒரு மணிநேரம் பதினைந்து நிமிடங்களுக்கு மேலாக போனில் பேசிக் கொண்டிருப்பதில் உண்மையில் எந்த வித பயனுமில்லை. ஆழ்ந்த அன்பு கொண்ட இரு நபர்களுக்கிடையேயான உள்நாட்டு டெலிபோன் அதிகபட்சம் ஐந்து நிமிடங்களுக்கு நீடிக்கலாம் அல்லது வாழ்கையின் மிக முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்படலாம். எனினும் நீண்ட நேர பேச்சுகளை ஆண்கள் விரும்புவதில்லை. அவர்கள் உங்களிடம் இதை தெரிவிக்காவிடினும் இதுவே உண்மை.
அதிகம் சம்பாதிக்க வேண்டும், நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்ப்பது மற்றும் டிவி ரிமோட்டை எடுத்து கொள்வது போன்ற அனைத்து விஷயங்களிலும் ஆண்கள் உங்களை திருப்திப்படுத்த முடியாத வரை நிச்சயம் அது பெரிய அளவிலான கஷ்டமே! பொதுவாகவே ஆண்கள் பெண்களை அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்றோ, அதிகம் படித்திருக்க வேண்டும் என்றோ, சிறப்பான தோற்றம் பெற்றிருக்க வேண்டும் என்றோ அறிவுறுத்துவது இல்லை. ஆனால் பெரும்பாலான நேரங்களில் பெண்கள் அளவுக்கு அதிகமாக அதிகாரம் செய்வது உறவு முறிய காரணமாக அமைகின்றன.
பெரும்பாலான ஆண்கள் ஒரு பொன்னான விதியை பின்பற்றுகின்றனர். "உறவு முறிந்து விட்டால், அதனை நீட்டிக்க தேவையில்லை". எனவே உங்கள் வாழ்வில் நீங்கள் விரும்பும் ஆண்களை, அவர்கள் வாழ்கையில் அவர்கள் விரும்பும் விஷயங்களுடன் ஏற்று கொள்ள பழகுங்கள். அவர் சம்பந்தப்பட்ட விஷயங்களை மாற்ற முயற்சிப்பதில் எந்த விதமான பயனுமில்லை. இசை, உடை, உணவு, நண்பர்கள் ஆகிய விஷயங்களில் அவரது ரசனைகள் அவரது வாழ்வின் ஒரு பகுதியாகும். எனவே தனது சொர்க்கத்தில் உள்ள அந்த விஷயங்களை சிறிதளவு கூட மாற்றி கொள்ள ஆண்கள் விரும்புவதில்லை.
ஆண்களுக்கு அடிக்கடி நச்சரித்துக் கொண்டே இருந்தால் பிடிக்காது. மேலும் அப்படி நச்சரிக்கும் பெண்களிடமிருந்து ஆண்கள் தப்பித்து செல்லத் தான் முயற்சிப்பார்கள். ஆனால் ஆண்களை நச்சரிக்காமல் அவர்களின் போக்குபடியே நடத்தினால், அவர்கள் உங்கள் மீது மிகுந்த அன்புடன் இருப்பார்கள். எனவே எப்போதும் எதையாவது சொல்லி நச்சரிப்பதை தவிர்த்திடுங்கள்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1