திருமண வாழ்வில் பிரிந்து வாழ்கிறீர்களா? இதையும் தெரிந்து கொண்டு வாழுங்கள்...
5 ஐப்பசி 2014 ஞாயிறு 18:11 | பார்வைகள் : 8966
வாழையடி வாழையாக வாழ வேண்டும் என்றறு மூன்று முடிச்சு போட்ட திருமண பந்தம் கசந்து விட்டதா? இப்பொழுதே பிரிந்து விட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? எந்தவித திருமண உறவிலும் ஏற்படும் சாதாரண அனுபவமாகவே இந்த எண்ணம் உள்ளது. திருமண உறவுக்கென தனியான நன்மைகளும், தீமைகளும் உள்ளன. சில நேரங்களில் பிரிந்து வாழ வேண்டியது மட்டுமே கடைசி வாய்ப்பாக உங்களுக்கு அமைந்திருக்கும், அதற்காக என்ன செய்து விட முடியும் என்று பார்ப்போமா?
சரியாக புரிந்து கொள்ளாததாலும் மற்றும் தவறாக புரிந்து கொள்வதாலும் தான் திருமணமான தம்பதிகளுக்கிடையில் சச்சரவுகள் தலைதூக்குகின்றன. சில நேரங்களில், இந்த சச்சரவுகளில் எந்த வகையிலும் உங்களுக்கு தொடர்பு இல்லையென்றாலும், அதன் பலன்களை நீங்கள் அனுபவிப்பீர்கள். எனினும், விவாகரத்து செய்து கொள்வதும் அல்லது நீண்ட காலத்திற்கு பிரிந்து வாழ்வதும் தான் இந்த புனிதமான திருமண உறவின் இறுதிப் படிகளா?
ஒவ்வொரு நாட்டின் சட்டப்படியும் நீதிமன்றம் முடிவு செய்யும் விஷயமாகவே பிரிந்து வாழச் செய்வது உள்ளது. நீங்கள் ஏன் பிரிந்து வாழ விரும்புகிறீர்கள் என்று விளக்கம் தர வேண்டியிருக்கும் மற்றும் தகுந்த காரணங்களின் பேரில் மட்டுமே பிரிந்து வாழ்வதற்கு அனுமதியும் கிடைக்கும். ஒரே ஒரு சண்டையின் காரணமாக நீங்கள் பிரிந்து வாழ நினைத்தால், அது நடவாத காரியம்.
விவாகரத்து பெறுவதற்காக பதிவு செய்யும் முன், அதன் நன்மை தீமைகளை ஒருமுறை அலசி ஆராய்ந்து கொள்வது நலம். இதோ திருமண பந்தத்தில் பிரிந்து வாழ்வதால் ஏற்படும் நன்மை, தீமைகளைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
விவாகரத்து பெறும் போது, துணையின் சலுகைகளை உங்களால் பெற முடியாது. அதாவது, முக்கியமான சலுகைகளான ஹெல்த் இன்சூரன்ஸ், மெடிக்கல் இன்சூரன்ஸ் ஆகியவை துணையின் சலுகைகளுடன் சேர்க்கப்பட்டுள்ளன. நீங்கள் விவாகரத்து பெற முனைந்தால், இந்த சலுகைகளை உங்களால் பெற இயலாது. விவாகரத்து பெற நினைப்பவர்கள் கண்டிப்பாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய நன்மை-தீமைகளில் ஒன்றாக இந்த விஷயம் உள்ளது.
தம்பதியரில் யாராவது ஒருவர், மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், அதற்கு சட்டப்படியாக பிரிந்து செல்வது விடையாக இருப்பதில்லை. திருமண உறவில் சட்டப்படியாக பிரிந்து வாழும் போது, நீங்கள் திருமணமானவர் தான், ஆனால் தனியாக வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். இதன் மூலம், நீங்கள் மீண்டும் வேறொரு திருமணம் செய்ய முனைந்தால், அந்த விஷயத்திற்கு இதுவே முட்டுக்கட்டையாக இருக்கும். ஏற்கனவே செய்து கொண்ட திருமணம் செல்லுபடியாகும் வரையிலும் மீண்டும் திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால், நீங்கள் விவாகரத்து செய்து கொண்டால், உங்களால் மீண்டும் ஒரு திருமணத்தை சட்டப்பூர்வமாகவே செய்து கொள்ள முடியும்.
திருமண பந்தத்தை சட்டப்படியாக பிரிந்து வாழும் போது, அந்த திருமண உறவைப் பற்றி மீண்டும் ஒருமுறை யோசித்துப் பார்க்க உங்களுக்கு நேரம் கிடைக்கும். உண்மையிலேயே உங்களுக்கு இந்த திருமணம் தேவையில்லையா அல்லது இடைப்பட்ட காலத்தில் உங்களுடைய சிந்தனையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா? உங்களுடைய பிரச்னைகளை நீங்கள் நன்றாக புரிந்து கொள்வதற்கான நேரத்தை, பிரிந்து வாழும் சூழல் கொடுக்கும் என்பது நன்மை தான்.
திருமண உறவில் பிரிந்து வாழ்வதால் சில தீமைகளும் உள்ளன. இதில் ஒரு முக்கியமான விஷயமாக கடன் உள்ளது. நீங்கள் இருவரும் பிரிந்து வாழும் நேரத்தில், உங்களுடைய துணைவர்ஃதுணைவி ஒரு பொருளை கடனாக வாங்க முற்படுகிறார். இப்பொழுது, அந்த கடன் தீருமண தம்பதிகளுக்கான கடனாகவே இருக்கும். அதாவது அந்த கடன் சுமை உங்கள் இருவருக்குமே சேரும். நீங்கள் பண விஷயத்தில் சரியான நிலையில் இல்லாத போது இதைவிட பெரிய தீமை வேறெதுவும் இருக்காது. பெரும்பாலான தம்பதிகள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்னைகளில் ஒன்றாக கடன் உள்ளது.
நீங்கள் இருவருமே விவாகரத்து தான் தீர்வு என்று முடிவு செய்து விட்டீர்கள் என்று எடுத்துக் கொள்வோம்! இப்பொழுது, அதாவது பிரிந்து வாழ்ந்த காலத்தில் நீங்கள் சில சொத்துக்களை வாங்கி, நல்ல நிலைக்கு வந்து விட்டீர்கள் என்றும் எடுத்துக் கொள்வோம். இந்த நிலையில் விவாகரத்து பெற நினைத்தால், சிறப்பான நிதி நிலையை கொண்டிருப்பவர், மற்ற துணைவருக்கு ஜீவனாம்சத்தை வழங்க வேண்டும். இந்த சூழலில் உங்களுடைய பணம் கரைந்து செல்வதற்கான வழியை விவாகரத்து கொண்டு வந்து சேர்க்கும். விவாகரத்து பெற வேண்டும் என்று முடிவு செய்யும் தம்பதியினர், எதிர்கொள்ளும் பிரச்னைகளில் ஒன்றாக ஜீவனாம்சம் உள்ளது என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.