21 ஆவணி 2014 வியாழன் 08:06                            | பார்வைகள் : 13922                        
                        
                        
                             உறவு என்று எடுத்துக் கொண்டால், நாம் அவர்களிடம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வது தானே நல்லது! ஆனாலும் இப்போதெல்லாம் தன் பாய் ஃபிரண்டுகிட்ட இருந்து பெண்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் ரொம்பவே அதிகம். அதுவும் நகர்களிலும் மாநகர்களிலும் உள்ள பெண்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். பெரும்பாலான நகரத்துப் பெண்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதை விரும்பவில்லை. திருமணத்திற்குப் பிறகும் கூட தனக்கென ஒரு வேலை, சம்பாத்தியம், சுய மரியாதை என்று அவர்கள் நினைக்கத் தொடங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. குழந்தை பெற்றுக் கொள்வதைக் கூட தட்டிக் கழிக்கும் அளவுக்கு சமுதாயம் அவர்களை மாற்றியுள்ளது என்றே கூறலாம்.
 
பொதுவாக பெண்களின் கவனம் பசங்களோட பாக்கெட்டில் மட்டும் தான் இருக்கும் என்று சொல்வதுண்டு. அப்படியெல்லாம் கிடையாது. ஒரு பையன் உண்மையிலேயே தன்னை நேசிக்கிறானா, கடைசி வரை தன்னை நன்றாகப் பார்த்துக் கொள்வானா, ஈகோ எதுவும் இல்லாமல் தன்னிடம் நடந்து கொள்கிறானா, திருமணத்தின் போது வரதட்சணை வாங்குவானா... இப்படித் தான் பெண்களின் நினைவுப் பட்டியல் நீளும்.
 
இருந்தாலும் பல காதல் திருமணங்களில் கூட மறைமுகமாக வரதட்சணை பிரச்சனை இருந்து கொண்டு தான் உள்ளது. அந்தப் பெண்ணால் தனக்கு தன் சேமிப்பு அல்லது செலவு எந்த அளவுக்கு எகிறும் என்பதையும் சில ஆண்கள் கணக்குப் போட்டுக் கொண்டிருப்பதும் உண்மை. நகரத்துப் பெண்கள் தன் துணையிடம் பெரிதும் விரும்புபவை என்ன? இப்போது பார்க்கலாம்.
 
நீங்கள் ஒரு நகரத்துப் பெண்ணைத் திருமணம் செய்ய விரும்பினால், வரதட்சணை எண்ணத்தை மூட்டை கட்டிப் போட்டு விடுங்கள். பெண்களுக்கு அந்த வார்த்தையே தற்காலத்தில் முற்றிலும் பிடிக்காமல் போய்விட்டது. இரு வீட்டாரும் சேர்ந்து செலவு செய்து திருமணத்தை முடிப்பதும் இந்தக் கால ட்ரெண்ட் தான்.
 
காதலிக்கும்போது சின்னச் சின்ன ஆச்சரியங்களையும், பரிசுகளையும் கொடுத்து அசத்துகிறீர்களா? திருமணத்திற்குப் பிறகும் அதைத் தொடருங்கள். உங்கள் மனைவி மனப்பூர்வமாக அதை ஆமோதித்து மகிழ்வாள்.
 
தங்கத்தை விரும்பாத பெண்களே இருக்க முடியாது. எந்த நிகழ்ந்சி வந்தாலும் தங்கத்தை பரிசளிக்க மறந்து விடாதீர்கள். அப்போது அவர்கள் முகத்தில் தோன்றும் பிரகாசத்திற்கு ஈடு இணை எதுவும் இருக்காது.
 
உங்கள் காதலி/மனைவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை எப்போதும் மறந்து விடாதீர்கள். அவர்களை அவள் நேசிப்பதை விட, நீங்கள் அவர்களிடம் அன்பாக இருப்பதை அவள் அதிகம் விரும்புவாள். கொஞ்சம் கஷ்டம் தான், ஆனாலும் முயற்சி செய்யுங்கள்.
 
எல்லாப் பெண்களுக்கும் தன் திருமணத்தைப் பற்றிய ஒரு கனவு இருக்கும். அவள் கனவு நிறைவேற உறுதுணையாக இருங்கள். வாழ்க்கை முழுவதும் மறக்க மாட்டாள்.
 
தன்னை வேலைக்குச் செல்ல அனுமதிக்கும் துணையை நகரத்தில் இருக்கும் பெண் நிச்சயம் விரும்புவாள். ஆனால் முடிவு அவள் கையில் இருக்கட்டும். அவள் இந்த வேலைக்குத் தான் போக வேண்டும் என்றும் நீங்கள் எதிர்பார்க்காதீர்கள்.
 
திருமணம் முடிந்த உடனேயே குழந்தை பெற்றுக் கொள்வதைப் பெரும்பாலான நகரத்துப் பெண்கள் விரும்புவதில்லை. கொஞ்ச நாள் தன் துணையுடன் வாழ்க்கையை சந்தோஷமாகக் கழித்து விட்டு, அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று தான் அவர்கள் நினைக்கிறார்கள்.
 
உங்கள் ஈகோவை நகரத்துப் பெண்களிடம் வைத்துக் கொள்ளாதீர்கள். ஈகோவை விட்டொழிக்காவிட்டால், அது உங்கள் வாழ்க்கையையே சிக்கலாக்கிவிடும். உஷார்!
 
உங்கள் காதலி/மனைவி செய்யும் எந்த செயலிலும் நீங்களும் பங்கு போட்டுக் கொள்ளுங்கள். அவள் தான் காபி போடணும், அவள் தான் துணிகளைத் துவைக்கணும் என்ற எண்ணங்களையெல்லாம் தூக்கிப் போடுங்கள். அவளுடைய எல்லா வீட்டு வேலைகளிலும் கூட இருந்து உதவுங்கள்.
 
உங்கள் நகரத்துக் காதலியுடன் டேட்டிங்கில் இருக்கும் போதோ அல்லது உங்கள் நகரத்து மனைவியுடன் இல்லறத்தில் இருக்கும் போதோ... எப்போதுமே சோம்பேறியாக இருந்து விடாதீர்கள்.