ஆண்களும், பெண்களும் ஏன் ஏமாற்றிக் கொள்கிறார்கள்?
18 ஆவணி 2014 திங்கள் 08:00 | பார்வைகள் : 9137
ஒரு உறவில் ஒருவரையொருவர் ஏமாற்றுவது அந்த உறவையே பாதித்துவிடும். தவறுகள் அனைத்தையும் எளிதில் மறந்து விடலாம் என்று இதற்கு அர்த்தமல்ல. ஆனால், ஏமாற்றிக் கொள்வதால் உறவின் ஆழம் வெகு மோசமாக பாதிக்கப்பட்டு, சிக்கலாகிவிடும். ஆண்களை கணக்கில் எடுத்துக் கொண்டு கேட்டால், ஆண்களை பெண்கள் ஏமாற்றும் காரணங்களைப் போலவே, பெண்களை ஆண்கள் ஏமாற்றும் காரணங்களும் கடினமானவை என்கிறார்கள்.
ஆனால், இந்த விவாதத்தில் ஒரு விஷயம் மட்டும் தெள்ளத் தெளிவாக உள்ளது. ஆண்கள் பெண்களை ஏமாற்றும் காரணங்களிலிருந்து, பெண்கள் ஆண்களை ஏமாற்றுவதற்கான காரணங்கள் மாறுபட்டவை என்பது தான் அந்த முக்கியமான விஷயம். எனவே, ஒருவரையொருவர் ஏமாற்றிக் கொள்வதில் பாலின வேறுபாடுகளும் கூட பங்கு வகிக்கின்றன. எந்தவொரு பாலினமும் மற்றொரு பாலினத்தை ஏன் ஏமாற்றுகிறார்கள் என்று புரிந்து கொள்வது எளிதான விஷயம் கிடையாது. ஒவ்வொருவரின் கருத்தையும் புரிந்து கொள்ளும் விதமாக அவர்கள் மற்றவர்களை நெருங்கி வருகிறார்கள் - மெதுவாக!
ஆண் அல்லது பெண் என யாராக இருந்தாலும், ஒரு உறவில் ஏமாற்றுவதென்பது அந்த உறவை அழிக்கும் விஷயமாகவே இருக்கும். ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தன்னுடைய துணையை ஏமாற்றுவது என்றென்றும் ஒரு நல்ல விஷயமாக கருதப்படுவதில்லை. எனினும், நீங்கள் செய்யும் தவறுகளை மறைக்கும் விதமாகவே முதலில் ஏமாற்றத் துவங்குவீர்கள். இதை புரிந்து கொள்ள ஆணும், பெண்ணும் தங்களைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
செக்ஸுக்காக ஆண்கள் மட்டுமே அதிகமாக ஏமாற்றுகிறார்கள் என்பது பரவலாக இருக்கும் கருத்தாகும். ஆனால், பெண்களும் கூட தங்களுடைய உடல் சுகத்திற்காக ஏமாற்றுவார்கள் என்பது அறியத் தகுந்த உண்மை.
அதிகமாக பணம் வைத்திருக்கும் வேறொரு நபரின் பொருட்டாக பெண்கள் தங்களுடைய துணையை வெளியேற்றுவது நடந்திருக்கும். ஆனால், ஆண்கள் பணத்திற்காக இவ்வாறு செய்வது மிகவும் அரிதான செயல்.
ஏமாற்றும் பெண்ணை மன்னிப்பதில் ஆண்கள் மிகவும் தாராளமாகவே நடந்து கொள்கிறார்கள். ஆனால், பெண்கள் தங்களுடய துணைகளின் தவறுகளை மன்னிக்க நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறார்கள் மற்றும் தங்களை ஏமாற்றுவது அவமானப்படுத்தும் செயலாகக் கருதுகிறார்கள்.
உறவு முறை மிகவும் போரடிக்கும் சமயங்களில் பெண்கள் ஏமாற்ற முனைவார்கள். இதற்கு மேல் வேறு எதுவும் செய்ய முடியாது என்ற நிலையிலும் கூட, ஆண்கள் ஏமாற்றுவதைப் பற்றி நினைப்பதில்லை.
தன்னுடைய துணையானவள் தன்னை ஏமாற்றியதற்காக, அவளை பழி வாங்கும் பொருட்டாக ஆண்கள் ஏமாற்ற முனைவார்கள். இவ்வாறு பழி வாங்கும் குணம் பெண்களிடமும் இருந்தாலும், ஆண்கள் இதில் விஞ்சி நிற்கிறார்கள்.
தங்களுடைய துணைவரின் மீது உணர்வுப் பூர்வமாக ஏமாற்றத் துணிபவள் பெண். அதாவது, மற்றவருடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளாமல், உணர்வுப் பூர்வமாக வேறொருவர் மீது அன்பை வைத்து தங்களுடைய துணைவரை ஏமாற்றும் செயலை செய்வார்கள்.
ஏமாற்றுவதை ஆண்கள் விரும்புவதில்லை வேறொருவருடன் தொடர்பு வைத்திருப்பதை பெண்கள் எந்த அளவிற்கு அவமானமான விஷயமாக நினைத்திருக்கிறார்களோ, அதே அளவிற்கு ஆண்களும் அந்த விஷயத்தை விரும்ப மாட்டார்கள். ஏனெனில், தாங்கள் மன்னிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பதை ஆண்கள் அறிவார்கள். Show Thumbnail
பெண்கள் ஆண்களை விட்டு விலகிச் செல்வதற்கு கள்ளத்தொடர்பு வைத்திருப்பதை ஒரு காரணமாக சொல்கிறார்கள். ஏனெனில், கள்ள உறவுகளை பெண்கள் முதன்மையான உறவுகளாகக் கருதி, தற்பொழுது இருக்கும் உறவை விட்டு விடத் துணிகிறார்கள்.
சுறுசுறுப்பான பெண்ணுடன் ஒரு ஆணுக்கு தொடர்பு வைத்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் போது, அவன் ஏமாற்றத் துணிகிறான். இப்படிப்பட்ட நபருடன் இருக்கும் போது ஆண்களுக்கு தங்களுடைய ஆண்மைத்தனத்தின் மீது நம்பிக்கை ஏற்படுகிறது.
பெண்கள் ஏமாற்றப்படும் போது, அவர்கள் சாய்ந்து அழுவதற்கு ஒரு தோள் தேவைப்படுகிறது. ஒரு பெண்ணை உடல் ரீதியாகவோ அல்லது உணர்வு ரீதியாகவோ ஒரு உறவில் ஏமாற்றும் போது, அதிலிருந்து மீண்டு செல்லத் தேவையான துணிவு அவளுக்கு இருப்பதில்லை; எனவே உணர்வுப் பூர்வமாக தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு, ஆதரவைப் பெறுவதற்காக அவள் ஏமாற்றத் துணிகிறாள்!