Paristamil Navigation Paristamil advert login

காதல் உங்களை எப்படியெல்லாம் முட்டாளாக்குது தெரியுமா...?

காதல் உங்களை எப்படியெல்லாம் முட்டாளாக்குது தெரியுமா...?

21 ஆடி 2014 திங்கள் 10:45 | பார்வைகள் : 8741


 நீங்கள் காதலில் இருக்கும் போது காற்றில் மிதந்து கொண்டிருப்பீர்கள். அப்படிப்பட்ட நேரத்தில் காதல் உங்களை சில காரியங்களை செய்ய வைக்கும். பைத்தியகாரத்தனமான முட்டாள்தனமான விஷயங்களை எல்லாம் செய்யவும் பேசவும் வைக்கும். ஏன் உங்களை பைத்தியமாக்கும் நிலைக்கு கூட தள்ளி விடும். காதலித்து கொண்டிருக்கும் பல ஜோடிகள் தாங்கள் சேர்ந்து செய்த செயல்களை பற்றி பேசுவார்கள். அது அவர்களை முட்டாள்களாக உணர வைக்கும். சரி, அது எப்படி காதல் முட்டாள் என்ற உணர்வை எங்களுக்குள் ஏற்படுத்தும் என்று தானே கேட்கிறீர்கள்? இதோ அதை தான் கூற போகிறோம். 

 
நீண்ட காலமாக ஒன்றாக இருக்கும் காதல் ஜோடிகளுக்கு தெரியும், எப்படி மற்றவரை பைத்தியமாக ஆக்குவது என்று. உதாரணத்திற்கு, உங்கள் காதலனை முட்டாளாக உணர வைக்க வேண்டுமானால் அவரிடம் சமரசம் செய்வதை பற்றி பேசுங்கள். பொதுவாக ஆண்களுக்கு சமரசம் என்றால் ஒத்து வருவதில்லை; அதற்கு காரணம் பெண்கள் தானே எப்போதும் சமரசத்தில் இறங்குகின்றனர். ஜோடிகளுக்கு இடையே நடைபெறும் எண்ணிலடங்கா தவறுகளும் லட்சக்கணக்கான மன்னிப்புகள் என அனைத்துமே பைத்தியகாரத்தனமாக தான் பார்க்கப்படுகிறது. காதல் பற்றிய சில உண்மைகள்!!! 
 
நீங்கள் ஒரு உறவில் இருந்தால், இதோ உங்களுக்கு ஒரு கேள்வி. நீங்கள் கடைசியாக உங்கள் காதலன் அல்லது காதலியுடன் சேர்ந்து பைத்தியகாரத்தனமான செய்த காரியம் நினைவு இருக்கிறதா? அப்படி உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்த பைத்தியகாரத்தனமான, பகிர்ந்து கொள்ள கூடிய விஷயங்கள் இருந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் தானே. சரி, காதல் எப்படி உங்களை பைத்தியகாரத்தனமாக ஆக்குகிறது என்பதை இப்போது பார்க்கலாமா... 
 
காதல் உங்களை முட்டாளாக காட்டும் வழிகளில் இதுவும் ஒன்றாகும். ஒரு உறவில் ஆரம்ப கட்டத்திலேயே படுக்கைக்கு சென்றால், உங்கள் இருவருக்குமிடையே உள்ள இணைப்பை அது வெகுவாக பாதித்துவிடும்.
 
காதல் உங்களுக்கு என்ன செய்தது என வியப்பாக உள்ளதா - இதோ உங்களுக்காக! உங்களை எண்ணிலடங்கா தவறுகளையும், குற்றங்களையும் செய்ய வைத்து பின் அதற்காக மன்னிப்பு கேட்கவும் வைக்கும்.
 
உங்கள் பெற்றோர்களுக்கு உங்கள் காதலை பற்றி தெரியவில்லை என்றாலோ அல்லது உங்கள் காதல் மீது விருப்பம் இல்லை என்றாலோ, வீட்டை விட்டு ஓடி போக நினைப்பது காதலர்களின் வழக்கமாகும். காதலின் பேரை சொல்லி இப்படி ஓட வைக்கும் இந்த ஐடியா உங்களை முட்டாளாக காட்டும். 
 
காதல் வந்தால் வலியை உணர முடியாது. அதற்கு காரணம் வலியை லேசாக எடுத்துக் கொள்ளும் பக்குவம் வந்துவிடும். எப்படி என கேட்கிறீர்களா? பின்ன என்ன காதலில் விழுவதே செலவே இல்லாமல் தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்டு வலியை பெறுவது தானே.
 
காதல் உங்களுக்கு என்ன செய்தது என ஏற்கனவே கேட்டோம். இதோ இன்னொரு பதில் - இந்த உறவை மீறி உங்களுக்கென ஒரு வாழ்க்கை உள்ளதென்பதை அது மறக்க வைக்கும். உங்களுக்கு குடும்பம் மற்றும் நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதையும், அவர்களுக்கு உங்களுடன் நேரம் செலவிட வேண்டும் என்பதையும் அது மறக்கடிக்கும்.
 
என்ன தான் முயற்சி செய்தாலும் கூட சில காதலர்கள் தங்களின் காதலன் அல்லது காதலி மீது மனதார கோபமே படமாட்டார்கள். சரியான நபரை காதலிப்பதால் கிடைக்கும் பெரிய பலன் இது.
 
உங்கள் காதலனுக்காகவோ அல்லது காதலிக்காகவோ அளவுக்கு அதிகமாக செலவழித்து, பின் கடைசியில் காசு இல்லாமல் போகும் போது, அதற்காக வருந்துவது. இது தான் காதல் உங்களுக்கு தருவது.
 
உங்கள் ஜோடிக்காக நம்பிக்கையற்ற அழைப்புகள் மற்றும் மணிக்கணக்கான காத்திருப்புகள் கூட உங்களுக்கு ஒரு வழியில் பைத்தியகாரத்தனமான உணர்வை ஏற்படுத்தும்.
 
காதல் என்றால் முடிவில்லா ஆனந்தமும், சந்தோஷமும் மட்டும் தான் என்ற நினைப்பு உள்ளதா? காதல் என்பது படுக்கையில் விரிக்கப்பட்ட ரோஜா பூக்கள் என்ற எண்ணத்தில், பலர் தங்கள் காதலன் அல்லது காதலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதே கிடையாது. அப்போது தான் பைத்தியகாரத்தனமான உணர்வை காதல் அளிக்கும்.
 
 
 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்