தற்கொலை எண்ணத்தை தடுக்கும் வழிகள்
5 ஆனி 2014 வியாழன் 04:52 | பார்வைகள் : 9468
பொதுவாக தங்களுக்கு ஏற்பட்டுள்ள வலிக்கு உதவும் கரங்களை மீறி அவர்களின் வலியின் தாக்கம் அதிகரிக்கும் போது அவர்கள் தற்கொலைக்கு முயல்வார்கள். தற்கொலை என்பது ஒருவரின் தனிப்பட்ட தேர்வாகும். தற்கொலைக்கு முயற்சிப்பதற்கு எண்ணிலடங்கா காரணங்கள் உள்ளது.
தற்கொலை எண்ணங்களை கையாள்வதற்கு அளவுக்கு அதிகமான மன தைரியம் தேவைப்படும். என்ன தான் நேர்மறையான தேர்வுகள் இருந்தாலும் கூட, வலிகளை தாங்கி கொள்ள முடியாத தருணம் என்று ஒருவருக்கு வரக்கூடும். ஒருவர் தன் மன கட்டுப்பாட்டின் வரம்பை மீறும் போது, தற்கொலை எண்ணங்களை அவர் கையாள வேண்டும்.
தற்கொலை எண்ணங்களை சமாளிக்க இரண்டு வழிகள் உள்ளது - ஒன்று வலியை குறைக்க முயற்சிப்பது, மற்றொன்று வலியை நீக்கும் உதவியை அதிகமாக பெறுவது.
• உங்களை சுற்றி நல்ல விஷயங்களை பேசுவதற்கு ஆட்கள் இருப்பதே தற்கொலை என்னத்தை தவிர்க்கும் ஒரு வழியாக அமையும். நல்லதொரு கூட்டத்துடன் நல்ல நடவடிக்கைகளில் ஈடுபடும் போது தற்கொலை எண்ணங்கள் உங்களை நெருங்காது.
• எதிர்மறையான எண்ணங்களை போக்க சந்தோஷமான எண்ணங்களுக்கு பதிலாக சமநிலையுடனான எண்ணங்களை அதிகமாக கொண்டு வர வேண்டும். தற்கொலை என்னத்தை போக்க இதவும் ஒரு முக்கியமான அம்சமாகும். இதனை மேம்படுத்த நேர்மறையான மக்களுடன் பழகி, எதிர்மறையாக சிந்திப்பதை தவிர்க்க வேண்டும்.
• யோகா மன அழுத்தத்தை கையாள இது ஒரு சக்தி வாய்ந்த கருவியாக பயன்பட்டு வருகிறது. அதனால் உங்கள் தற்கொலை எண்ணமும் தொலைந்து போகும். ஆரோக்கியமான உடலுக்கு தேவையானதெல்லாம் தினமும் யோகா மற்றும் தியானம் மட்டுமே. உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சமநிலையை கொண்டு வருவதற்கு யோகா பெரிதாக உதவிடும்.