உண்மையான பலத்தை உணர்த்தும் திருமண வாழ்க்கை....
22 வைகாசி 2014 வியாழன் 16:57 | பார்வைகள் : 9672
திருமணம் என்றாலே சிலருக்கு வேப்பங்காயாகக் கசக்கத்தான் செய்கிறது. ஒன்று, அவர்கள் திருமணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பார்கள் அல்லது திருமணமே வேண்டாம் என்று ஒதுங்கி விடுவார்கள். இந்தக் காலத்தில் சர்வ சாதாரணமாகப் பலரும் விவாகரத்து செய்து கொள்வதை அவர்கள் உதாரணமாகக் காண்பிப்பார்கள். இது போலவே தமது திருமணமும் துயரத்தில் போய் முடிந்துவிடுமோ என்றும் அஞ்சுவார்கள். இப்படி இவர்கள் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. திருமண வாழ்க்கை என்பது ஒரு அழகான சொர்க்கம். அது கண்டிப்பாகத் தேவை தான் என்பதற்கான 10 காரணங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
உங்களுக்கென்று சில கொள்கைகளை வகுத்துக் கொண்டு, திருமணமே செய்யாமல் குண்டுச் சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படி இருக்காதீர்கள். திருமண வாழ்க்கை தான் உங்கள் உண்மையான பலத்தை உங்களுக்கு உணர்த்தும். உங்கள் தகுதியையும் உயர்த்தும்.
ஒரு உண்மையான திருமண வாழ்க்கை, அதில் சம்பந்தப்பட்டுள்ள இருவரையுமே ஒரே சமயத்தில் உயர்த்தி விடும். ஒருவரையொருவர் புரிந்து கொண்டு, பரஸ்பரம் விட்டுக் கொடுத்து வந்தால், அந்தத் தம்பதியின் வாழ்க்கைத் தரம் தானாகவே உயரும்.
உங்கள் துணை தரும் சந்தோஷத்தைவிட வேறு யாரும் எப்போதும் உங்களுக்குத் தந்துவிட முடியாது. எங்காவது டூர் போகிறீர்கள், ஏதாவது சினிமாவுக்குப் போகிறீர்கள்... தனியாகப் போனால் நன்றாகவா இருக்கும்? உங்கள் துணையுடன் சென்று பாருங்கள். அது தரும் மகிழ்ச்சியே தனிதான்!
திருமணமே செய்யாமல் வாழ்க்கை முழுவதும் டேட்டிங் டேட்டிங் என்று அலைந்து கொண்டிருக்க முடியுமா? ஒவ்வொரு டேட்டிங்கிற்கும் ஒவ்வொரு மாதிரி காத்துக் கொண்டிருக்க வேண்டும்; ஒவ்வொரு மாதிரி செலவும் வரும். தேவையா இது? திருமணம் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கே உங்களுக்காக இருக்கும் உங்கள் துணையிடம் அன்பைக் கொட்டுங்கள்.
திருமணம் தான் உங்கள் வாழ்நாளை நீட்டிக்கும் ஒரு அருமையான மருந்து. மணவாழ்க்கை தான் உங்களுக்கு அதிக செல்வத்தையும் சந்தோஷத்தையும் அள்ளிக் கொடுக்கும்.
ஒரு நல்ல துணையைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொண்டால்தான் உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் ஜொலிக்கும். தனித்து வாழும் பெற்றோர்களிடம் வளரும் குழந்தைகளை விட திருமண வாழ்க்கையில் உள்ளவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளே சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நன்றாக வளர்கிறார்கள்.
திருமணமான தம்பதியர் தான் அதிகமாகவும், முழுமையாகவும் செக்ஸ் வைத்துக் கொள்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.
உங்களைத் துன்பமும் துயரமும் வாட்டும் வேளையில் ஆதரவுடன் சாய்ந்து கொள்ள ஒரு தோள் வேண்டுமே. உங்கள் வாழ்க்கைத் துணையை விட வேறு யார் அப்போது தோள் கொடுக்க முடியும்?
இவ்வுலகில் திருமணமானவர்கள் தான் அதிக சந்தோஷமாக இருப்பதாக மனநல நிபுணர்கள் கூறுகின்றனர். ஆம், இதில் என்ன சந்தேகம்?
உண்மையான் அன்பு வேண்டுமா? அந்த அன்புக்கு அடிமையாக வேண்டுமா? திருமணம் செய்து கொள்ளுங்கள். அன்பாகவும், அமைதியாகவும் வாழ யாருக்குத் தான் பிடிக்காது? எல்லோருடைய வாழ்க்கையிலும் ஏற்றத் தாழ்வுகள் இருக்கத் தான் செய்யும். ஆனால் வாழ்க்கையில் மென்மேலும் உயர உங்களுக்கு ஒரு துணை தேவை. திருமணம் மட்டுமே அத்தகைய துணையைக் கொடுக்க முடியும்.