பெண்கள் கவர்ச்சியாக இருந்தும், ஏன் அழகு சாதனங்களை விரும்புகிறார்கள்?
6 வைகாசி 2014 செவ்வாய் 18:18 | பார்வைகள் : 10168
முதலில் கவர்ச்சி என்றால் என்ன, அழகு என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். கவர்ச்சி என்பது ஆண்களைக் கவரக்கூடியது. இதை ஆங்கிலத்தில் sex appeal என்று கூறுவார்கள். அழகு என்பது அங்க உறுப்புகளின் அளவான தன்மையைப் பொருத்தது. அழகான ஒன்று கவர்ச்சியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும், இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் குறைவுதான். பொதுவாக பருவத்தில் எல்லாப் பெண்களுமே அழகு இல்லாதவர்கள்கூட- கவர்ச்சியாகவே இருப்பார்கள். காரணம் இளமை. எல்லாப் பெண்களும் அழகும், கவர்ச்சியும் உடையவர்களாக இருக்கவே ஆசைப்படுவார்கள். ஆகவே, அவர்கள் அழகு சாதனங்கள் மூலம் தன் அழகையும், கவர்ச்சியையும் கூட்ட முடியும் என்று நினைக்கிறார்கள்.