பெண்களுக்கு செல்போன் அவசியமா?
2 சித்திரை 2014 புதன் 10:25 | பார்வைகள் : 9515
இன்றைக்கு செல்போன் இல்லாத இளம்பெண்களே இல்லை என்று சொல்லலாம். எங்கே போனாலும் அங்கே, பெண்கள் காதில் செல்போனை வைத்து பேசிக்கொண்டிருப்பார்கள். அது முக்கியமானதாகவும் இருக்கலாம்... முக்கியமில்லாத விஷயமாகவும் இருக்கலாம்.
விதவிதமான கலரில்... நவீன டெக்னாலஜியுடன் கூடிய செல்போன்கள்தான் டீன் ஏஜ் பெண்களின் பேவரைட்! பெண்கள் இருக்குமிடத்தில் எல்லாம் செல்போன் கண்டிப்பாக இருக்கும்! தனியாக இருக்கும் பெண்களுக்கு செல்போன் ஒரு இணைபிரியா தோழனாகவும், தோழியாகவும் நட்புறவாடுது என்பதே உண்மை!
செல்போன் வைத்திருந்து பழகியவர்கள், ஒரு நாள் செல்போன் இல்லாவிட்டாலும் ஏதோ வலது கையே இல்லாதது போல் ரொம்ப வருத்தப்படுவார்கள். அதேபோல், பெற்றோர் எங்கேயாவது வெளியில் செல்லும்போது தங்கள் குழந்தைகள், பெண் பிள்ளைகளை வீட்டில் இருக்க வைக்கும் சூழ்நிலையில் செல்போனை கையில் கொடுத்துவிட்டு வந்தால் எந்த நேரத்திலும் பேசலாம் என்ற பாதுகாப்பு உணர்வில் இருக்கின்றனர்.
பெண்களுக்கு தேவை என்றால் செல்போன் வாங்கிக் கொடுப்பதில் தப்பில்லை. ஆனால் அதன்மூலம் ஆபத்துக்களும், பிரச்சினைகளும் இருக்கின்றன என்பதை அவர்களுக்கு உணர்த்துவது நல்லது. தேவையில்லாமல் மிஸ்டு கால் வந்தால் அதை எப்படி தவிர்ப்பது...
யாராவது தப்பாக பேசினால் எதிர்கொள்வது எப்படி? என்பது குறித்து அவர்களுக்கு தெளிவாக தெரியவைப்பது மிகவும் நல்லது. பெண்களுக்கு கேமரா செல்போன் தேவையேயில்லை! ஏனென்றால் அது பலவித சிக்கல்களை ஏற்படுத்தும்.
உதாரணமாக... கேமரா செல்போன் வைத்திருக்கும் ஒரு இளம்பெண் தோழிகளுடன் அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறாள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் மகளுக்கே தெரியாமல், அவளுடைய தோழி செல்போனில் யாரையாவது படம் பிடிக்கலாம். இதனால் உங்கள் மகளுக்கு ஏதாவது பிரச்சினைகள் தோன்றலாம்.
அல்லது கேமரா செல்போனை பயன்படுத்துவதால் அடுத்தவர்கள் அடிக்கடி அதைக் கேட்டு அன்புத் தொல்லை கொடுக்கலாம். அதனால் கேமரா செல்போனை தவிர்ப்பது சாலச் சிறந்தது. அதேபோல், செல்போனில் அடிக்கடி ஏற்படும் சிக்கல் என்றால் அது மிஸ்டு கால். எங்கே... எப்போது...
யார் மிஸ்டு கால் பண்ணினாலும் உஷாராக இருக்குமாறு உங்கள் வீட்டுப் பெண்களிடம் சொல்லி வையுங்கள். உங்களுடைய செல்ல மகள், செல்போனை அடிக்கடி யூஸ் பண்ணும்போது... யாரிடம் பேசுகிறாள்... என்ன பேசுகிறாள் என்பதை கவனியுங்கள்... அது தவறாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக அறிவுரை கூறி கண்டிப்பது நல்லது.
ஆனால் எக்காரணம் கொண்டும் செல்போனை பயன்படுத்துவதை நிறுத்தி விடாதீர்கள். ஏனென்றால் இந்த சின்ன விஷயம் அவளுடைய மனதையே பாதித்துவிடும். உங்கள் மகள் நடுராத்திரியில் செல்போனில் பேசும் போது கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்து அவளை கண்காணியுங்கள்.
செல்போனுக்கு எப்போதும் ப்ரீபெய்டு கார்டுகளை பயன்படுத்த செய்யுங்கள். குறிப்பாக அதற்குரிய பணத்தை அவளிடமே கொடுத்து கட்டச் சொல்லுங்கள். அப்போதுதான் பணத்தின் அருமை அவளுக்குத் தெரியும். தற்போது யாரை சந்தித்தாலும்...
உங்களுடைய செல்போன் நம்பர் என்ன? என்று கேட்கும் பழக்கம் உள்ளது. இந்த பழக்கத்தில் யார் கேட்டாலும்... கேட்பவரின் குணநலன், பண்பு தெரிந்து நம்பரை சொல்லுமாறு உங்களுடைய மகளுக்கு அறிவுறுத்துங்கள்.