Paristamil Navigation Paristamil advert login

மனைவிக்கு முக்கியத்துவம் கொடுங்க.....

மனைவிக்கு முக்கியத்துவம் கொடுங்க.....

12 பங்குனி 2014 புதன் 04:45 | பார்வைகள் : 9601


திருமண பந்தம் என்பது ஆயிரங்காலத்து பயிர். கடைசி வரை நம்முடன் வரப் போவது வாழ்க்கைத்துணை மட்டும் தான். அதனால் ஆண்கள் குடும்ப சக்கரங்கள் சீராக ஓட மனைவியிடம் அன்பாக அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும்.

 

• உங்கள் வேலை பளு காரணமாக மனைவியிடம் உரையாடலில் ஈடுபட்டு, மனதை சாந்திப்படுத்த நினைப்பீர்கள். அப்படி பேசும் போது, நீங்கள் இப்படி வேலை பார்ப்பது குடும்பத்துக்காக நீங்கள் செய்யும் பெரிய தியாகம் என்றெல்லாம் சொல்லாதீர்கள். மனைவியிடம் மனம் விட்டு பேச பழகி கொள்ளுங்கள். 

 

• கண்டிப்பாக உங்கள் மனைவிக்கு உங்கள் அலுவலக கதையை கேட்பதில் நாட்டம் இருக்காது. நீங்கள் வீட்டிற்கு வந்ததும், அவர்கள் சொல்வதை நீங்கள் கேட்கவே அவர்கள் விரும்புவார்களே தவிர, உங்கள் அலுவலக பிரச்சனைகளை அல்ல. வேண்டுமெனில் தினமும் பேசாமல், எப்போதாவது பேசினால் கூட சரி தான். ஆனால் தினமும் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் எந்த விஷயத்தையும் மனைவியிடம் மறைக்காதீர்கள்.

 

• உங்களுக்கு அவர்கள் அடிக்கடி ஷாப்பிங் செல்வது பிடிக்காது என்பது அவர்களுக்கு தெரியும். ஆனால் அவர்களையும் நீங்கள் குஷிப்படுத்த வேண்டும் அல்லவா? அந்த குஷி ஷாப்பிங்கில் தான் கிடைக்கும் என்றால், அது உங்கள் விதி. குறை சொல்வதற்கு பதில் அதனை கையாளுங்கள்.

 

• மனைவியின் ஆடைகளை பற்றி தொடர்ந்து உங்கள் கருத்தை திணிப்பது பெரிய சண்டையில் தான் முடியும். வேண்டுமெனில் உங்களுக்கு பிடித்த ஆடைகளை அவர்களுக்கு அன்பாக பரிந்துரை செய்யுங்கள்.

 

• எந்த ஒரு பெண்ணுக்கும் மற்ற பெண்களுடன் தன்னை ஒப்பிடுவது பிடிப்பதில்லை. முக்கியமாக அவர்களின் தாயாருடன் ஒப்பிடும் போது அதை அவர்கள் விரும்புவதில்லை. இதனால் மனைவியின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும்.

 

வருடம் முழுவதும் மனைவியிடம் மன்னிப்பு கேட்டு சமாதானம் செய்ய வேண்டாம் தானே? அப்படியானால் எப்போதும் இதனை சொல்லாதீர்கள். திருமணம் என்பது இருவரின் சங்கமம். இருவரும் ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு, விட்டு கொடுத்து நடந்தால் தான், அந்த வாழ்க்கை அமைதியாக சந்தோஷமாக பயணிக்கும் என்பதை புரிந்து சரியாக நடந்து சந்தோஷமான வாழ்க்கையை மேற்கொள்ளுங்கள்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்