Paristamil Navigation Paristamil advert login

காதலில் வீழ்ந்த மகளை காப்பாற்ற நினைக்கும் தாய்மாருக்கு....!

காதலில் வீழ்ந்த மகளை காப்பாற்ற நினைக்கும் தாய்மாருக்கு....!

27 மாசி 2014 வியாழன் 12:22 | பார்வைகள் : 9747


குழந்தைகளை வளர்ப்பது என்பது லேசான விஷயம் அல்ல. அதுவும் உங்கள் மகள் பெரியவளாக வளர வளர இது இன்னமும் கடினமாகும். இந்த கால கட்டத்தில் தான், வாழ்க்கையில் உள்ள நல்லது கெட்டது, புதிய பல விஷயங்கள் போன்றவைகளை அறிந்து கொண்டு, அவள் வாழ்க்கையின் ஒவ்வொரு அத்தியாயத்துடன் தானும் சேர்ந்தே வளர்கிறாள். இந்த பருவத்தில் தான் அவள் காதலிலும் விழுகின்றாள். அவள் உணர்ச்சிகளுக்கு போராட்டங்களை உண்டு பண்ணும், பல உணர்ச்சிகளை கொண்ட பல நபர்களின் அறிமுகமும் கிட்டும்.

ஒரு தாயாக, தன் மகளின் காதலை அறிந்து கொள்ளும் பயணத்தில், அவளுக்கு நீங்கள் உதவி புரியலாம். அவள் காதலை நீங்கள் வாழ முடியாவிட்டாலும் கூட, அவளின் பயணத்தை நீங்கள் வழி நடத்தலாம். உங்கள் மகள் தகுதிக்கு ஒத்துவராத ஒருவனை, அவள் காதலிப்பதை கண்டிப்பாக நீங்கள் விரும்பமாட்டீர்கள். அவளை ஒரு நல்ல பெண்ணாக வளர்த்தும், அவளை அவளே மதிப்பதற்கு நீங்கள் கற்றுக் கொடுத்திருப்பீர்கள். அப்படிப்பட்ட அவளை யாரும் மாற்ற நினைப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்கள். அவளின் உணர்வுகளை புரிந்து கொண்டு, அவளை சரியான பாதையில் வழி நடத்திச் செல்ல நீங்கள் தான் சிறந்தவர்.

காதலில் மாட்டிக்கொள்ளும் மகளிடம் ஒரு தாய் எவ்வாறு நடந்து கொள்ளலாம் என்பதற்கு இலகுவான வழிமுறைகள்.

மரியாதையை வாங்குவதற்கு அதனை கொடுக்க வேண்டும்

இது அடுத்தவர்களை மதிப்பதும் அவர்களின் மீது கவனம் செலுத்துவதும் மட்டும் அல்ல. உங்களை நீங்களே மதிப்பதும் இதில் அடக்கம். உங்கள் மகள் தன்னை தானே விரும்ப அவளுக்கு கற்றுக் கொடுங்கள். அவள் அவளை விரும்பினால் தான் மற்றவர்களாலும் அவள் விரும்பப்படுவாள். தன்னுடைய தேவைகளுக்கு மரியாதை கொடுத்து தன்னை தானே காதலிக்க கற்றுக் கொடுங்கள்.

நீ நீயாக இருக்க வேண்டும்

"உன்னை நீ எந்த விதத்திலும் மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை." என்பதை தான் ஒரு தாய் தன் மகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். அவளை மாற்ற யாராவது வலியுறுத்தினாலோ அல்லது காதலுக்கு அவள் லாயக்கில்லை என்று யாராவது வசை பாடினாலும், அவர் உங்கள் மகளுக்கு ஏற்றவர் அல்ல என்பதை அவளுக்கு புரிய வையுங்கள்.

சுகங்கள் மிகவும் முக்கியம்

ஒரு தாயாக பாலுணர்வை பற்றி பேச உங்களுக்கு விருப்பமிருக்காது. ஆனால் உங்கள் மகளின் உடலில் ஏற்படும் மாற்றங்கள், அவளுக்கு தேவையான சுகங்கள் மற்றும் பாலுணர்வை நேர்மறையான ஆசையாக யோசிக்க அவளுக்கு கற்றுக் கொடுத்தால், அவள் அவைகளை அனுபவிக்கும் தயார் நிலைக்கு வரும் போது பயனுள்ளதாக இருக்கும்.

உங்களுக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொள்ளுங்கள்

அவள் மீது திடமான புலனுணர்வு வைத்திட அவளுக்கு கற்றுக் கொடுங்கள். ஏதோ குறை இருந்து கொண்டே இருக்கிறது அல்லது நினைப்பதை போல் நடப்பதில்லை என்று அவள் தொடர்ந்து குற்றஞ்சொல்ல தூண்டுகோலாக இருக்கும் சின்ன சின்ன விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வகை அறிகுறிகளை ஒதுக்காமல், எந்த இடத்தில் தவறு உள்ளது என்பதை அறிந்து அதனை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை அவளுக்கு சொல்லிக் கொடுங்கள். பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் விட்டால் பிரச்சனைகளை இழுத்தடிப்பதை போலாகும்.

காதலை தேடி போக வேண்டாம், அதுவே உங்களை தாக்கும்


காதலை தேடி தானாக அலைந்து கொண்டிருந்தால் அது அவளின் முக்கியத்துவத்தை இழக்கச் செய்துவிடும் என்பதை அவளுக்கு புரிய வையுங்கள். காதல் தானாக அவளை தேடி வரும் போது வரட்டும். காதல் முறிவிலிருந்து அவளை காத்திட இது ஒரு முக்கியமான பாடமாகும்.

லிட்மஸ் சோதனையை தவிர்க்கவும்

ஒரு உறவை நம்பிக்கையின் மீதே அமைக்க வேண்டும் என்பதை உங்கள் மகளுக்கு கற்றுக் கொடுங்கள். அவள் முதலில் தன்னை தானே நம்ப வேண்டும். பின் தனக்கு முக்கியமானவரின் மீதும், அந்த உறவின் மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டும். பிறர் அன்பை சோதிப்பதால் உங்களுக்கு எந்த பயனும் கிடைக்காது. அடிப்படை உள்ளுணர்வை மையமாக வைத்து ஆரம்பித்த உறவின் மீது நம்பிக்கை வைப்பதை பற்றி உங்கள் மகளுக்கு சொல்லிக் கொடுங்கள்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்