Paristamil Navigation Paristamil advert login

பெண்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்

 பெண்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்

4 மாசி 2015 புதன் 11:54 | பார்வைகள் : 9516


 ஆணை போலவே பெண்ணுக்கும் பல வித ஆசைகள் உண்டு என்பதை பல ஆண்கள் மறந்துவிடுகின்றனர். இதனால் தான் நினைப்பது ஒன்று, தன் மனைவி நடந்து கொள்வது ஒன்று என்று நினைத்து பல ஆண்கள் தங்கள் மனைவிகளை ஒதுக்குகின்றனர். 

 
மனைவியோ தன் கணவன் தன்னை மரியாதையாகவும், அன்பாகவும் நடத்துவதில்லை என்று புலம்புகின்றனர். இதனால் பல குடும்பங்களில் பலவித பிரச்சனைகள் வருகின்றது. சரியான புரிதல் இருந்தால் மட்டுமே எந்த உறவும் நல்ல முறையில் இருக்க முடியும். 
 
மனைவி கணவனை புரிந்து கொள்வது போன்று கணவனும் மனைவியை புரிந்து கொள்ள வேண்டும். உடல் ரீதியான ஒன்றுதலை விட மன ரீதியான ஒன்றுதலை பெண்கள் மிகவும் விரும்புகின்றனர் என்பதை பல ஆண்கள் புரிந்து கொள்வதில்லை. 
 
இதை சரியாக புரிந்து கொண்டால் பல பிரச்சனைகளைத் தவிர்த்து நல்ல இன்பமயமான வாழ்வை வாழ முடியும். 
 
* தேவையில்லாத ஜோக்ஸ்களின் மூலம் அவர்களை காயப்படுத்தாதீர்கள். அவர்கள் தவறாக கூறினாலும், மோசமாக கிண்டல் செய்ய வேண்டாம். தெளிவாக எடுத்து கூறினாலே அவர்கள் புரிந்து கொள்வார்கள். அதை விடுத்து கிண்டல் நக்கல் செய்தால் உங்களை அவர்கள் ஒதுக்கி விடுவார்கள். 
 
* ஒரு பெண் மாதவிடாய் நேரத்தில் எவ்வளவு இன்னலுக்கு ஆளாகின்றாள் என்பதை அனைவரும் அறிவர். அந்த நேரத்தில் அவளுக்கு உற்ற துணையாக இருங்கள். சூடான குளியலுக்கு உதவுங்கள். வீட்டு வேலைகளில் அவர்களுக்கு துணையாக சிறு சிறு வேலைகளை செய்து கொடுங்கள். அப்புறம் பாருங்கள் உங்களையே சுற்றி சுற்றி வருவார்கள். 
 
* திடீரென மனைவியின் எடை கூடினால் அதையே விமர்சனம் செய்யாதீர்கள். உங்கள் மனைவி மாடல் இல்லை என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள். அன்புக்குரிய மனைவியாக அவளை நடத்துங்கள், நிச்சயம் நீங்கள் எதிர்ப்பார்க்கும் அனைத்தையும் அவள் தருவாள். 
 
* பெண்கள் எப்பொழுதும் படுக்கைக்கு மட்டும் அல்ல. அவர்களை நீங்கள் கொஞ்சி பாராட்ட வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பார்கள். நீங்கள் அவர்களுடன் நிறைய விளையாடவும், உறையாடவும், மகிழ்ந்தால் உங்களை சுற்றி சுற்றி வருவார்கள். 
 
* இரவு நேரத்தில் அவர்கள் ஒழுங்காக பல் துலக்கி படுக்கையை சரி செய்து பின் உறங்குவதற்கு முன் உங்கள் நெற்றியில் முத்த மிட்டு இரவு வணக்கத்தை சொன்னால் அவர்கள் இன்று ரெடி இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சந்தேகம் இருந்தால் மெல்ல காது மடலை கிளர்ச்சியூட்டிப் பாருங்கள் அப்பொழுதும் வேண்டாம் என்று மறுப்பு தெரிந்தால் தொந்தரவு செய்யாமல் விட்டு விடுவது ஆண்மைக்கு நல்லது.
 
- இவ்வாறு மனைவியின் உணர்வுகளை புரிந்து கணவன் நடந்து கொண்டால் இருவருக்குள்ளும் அன்யோன்யம் அதிகரிக்கும்
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்