Paristamil Navigation Paristamil advert login

பெண்களை மகிழ்விக்கும் தாம்பத்ய உறவு...

பெண்களை மகிழ்விக்கும் தாம்பத்ய உறவு...

12 தை 2015 திங்கள் 06:51 | பார்வைகள் : 9069


 தாம்பத்ய உறவில் திருப்தியாக இருக்கும் பெண்கள், வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களாம். அதிகமாக தாம்பத்ய உறவில் ஈடுபடுபவதால் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா அல்லது மகிழ்ச்சியாக இருப்பதால் அதிகம் தாம்பத்ய உறவில் ஈடுபடுகிறார்களா என்பது தெரியவில்லை. 

 
இதைத்தவிர ஒரு பெண்ணின் திருப்தியில்லாத செக்ஸ் வாழ்க்கை, அப்பெண்ணின் பொதுவாழ்க்கை உறவுகளையும், தன்னம்பிக்கையையும் வெகுவாக பாதிக்கிறது. செக்ஸ் உணர்வால் தூண்டப்பட்ட ஒரு ஆணின் வியர்வையானது வித்தியாசமான வாசனையைக் கொண்டதாம்! 
 
சாதாரண வியர்வைக்கும், செக்ஸ் வியர்வைக்குமான வித்தியாசத்தை ஒரு பெண்ணால் இனம் காண முடியும். தாம்பத்ய உறவில் அதிக ஈடுபாடு ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் இருக்கிறதாம். 55 வயதில் உள்ள ஒரு ஆணையும் பெண்ணையும் எடுத்துக்கொண்டால், தாம்பத்ய உறவில் ஈடுபாடு ஆண்களுக்கு மேலும் 15 வருடங்களுக்கு இருக்கிறதாம்! 
 
ஆனால் பெண்களுக்கோ 10 வருடங்கள்தானாம்! அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் இது தெரியவந்துள்ளது. செக்ஸ் தொடர்பான குற்ற உணர்வுகளைப் பொறுத்தவரை, ஆண்களின் குற்ற உணர்ச்சியானது தன் பெண் துணைக்கு செய்யும் செக்ஸ் துரோகத்தினாலும்/ஏமாற்றுதல், பெண்களின் குற்ற உணர்ச்சி ஒரு சமுதாய கட்டமைப்பின் செக்ஸ் குறித்த விதிகளை மீறுவதாலும் ஏற்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது! 
 
தனக்கு சரியான வாழ்க்கைத் துணையை, தன் இயற்கை உணர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கும்வரை ஒரு பெண் பொறுத்திருக்கிறாள். ஆனால், ஒரு ஆண் பொறுத்திருப்பது தான் போட்டிக்கு/சவாலுக்குத் தயார் என்பதைக் காட்ட என்கிறது ஒரு ஆய்வு! தங்களின் 20, 30 வயதுகளில் தாம்பத்ய உறவில் மிகுந்த ஆர்வமும், அதிக சுய இன்பமும் காணும் ஆண்களுக்கு ப்ராஸ்டேட் சுரப்பி புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம் என்கிறது ஆய்வு! 
 
ஆனால், அதே வாய்ப்பானது, வயதாக ஆக குறைகிறதாம். அதைவிட முக்கியமாக, ஒருவரின் 50 வயதிலும் அதற்கும் பின்னுமான தாம்பத்ய உறவு செயல்பாடுகள் சிறிதளவேனும், அது ப்ராஸ்டேட் சுரப்பி புற்று நோயிலிருந்து ஒரு மனிதனை காக்கிறதாம்! “ஜி-ஸ்பாட் அல்லது செக்ஸின் உச்சகட்ட இன்பப் புள்ளி என்பது ஒன்று இருக்கிறாதா என்பது பெரும்பாலோனோர் கேட்கும் கேள்வி. 
 
ஆனால் அந்த புள்ளி ஒரு கற்பனையான ஒன்னு, அப்படியே இருந்தாலும் அது தனிமனித சம்பந்தப்பட்டது என்கின்றனர் விஞ்ஞானிகள்!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்