Paristamil Navigation Paristamil advert login

புரிதலே தாம்பத்தியத்தின் வெற்றிக்கு அடிப்படை...

புரிதலே தாம்பத்தியத்தின் வெற்றிக்கு அடிப்படை...

26 மார்கழி 2014 வெள்ளி 11:32 | பார்வைகள் : 9062


 தாம்பத்தியத்தின் வெற்றிக்கு கணவன் – மனைவி இருவரின் உடல் நலமும், மன நலமும், முக்கியம். அதனால் அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருள்கள் நிறைந்த சைவ, அசைவ உணவுகளையும, காய்கறிகள், பழங்கள், கீரைகள், போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

 
* சாப்பிட்டதும் உடலுறவை வைத்துக்கொள்ள கூடாது. இதனால் முழுமையான இன்பம் கிடைக்காது. வயிற்றில் உணவு முழுமையாக இருந்தால் செயல்பாடுகளில் ஆர்வம் காட்ட முடியாது.
 
* எந்த சந்தர்ப்பத்திலும் பாலியல் சக்தியை அதிகரிக்கும் என்று சொல்லும் போலி மருந்துகளை சாப்பிடக்கூடாது. 
 
* உறவுக்கு முன் இனிமையான உரையாடலும் உணர்வு பரிமாறலும் இருக்க வேண்டும். அப்போது தான் உறவில் முழுமை பெற முடியும். 
 
* தாம்பத்தியம் ஓர் இனிய சங்கீதம் இசைப்பதும், ரசிப்பதும், மென்மையாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும். 
 
* கோபம் சண்டையை தீர்க்கக்கூடிய சக்தி தாம்பத்தியத்திற்கு உண்டு. 
 
* தாம்பத்தியத்தில் ஒரே மாதிரி செயலாற்றும் இயந்திர தனங்கள் இனிமை தராது. 
 
* தம்பதிகள் தங்களுக்கும் சில கட்டுபாடுகள் விதித்துக் கொண்டால் உறவு பற்றி ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்து இன்பமும் அடைய முடியும். 
 
* இன்பம் தரும் உடலுறவுக்கு வயது ஒரு தடை அல்ல. 
 
* கணவன் – மனைவி அந்தரங்கமான இல்லற வாழ்வில் ஒருவர் விருப்பத்தை மற்றொருவர் புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் அதை முடிந்த வரை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும். 
 
* இருவரது விருப்பங்களில் ஆரோக்கியமான அனைத்துமே சுகமான அனைத்துமே பாலியல் வாழ்க்கை நெறிப்படி சரியானது தான். 
 
* தாம்பத்திய தாகம் ஒரே அலைவரிசையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருப்பதில்லை. எனவே ஆண்களின் மனநிலை அறிந்து பெண்கள் ஒத்துழைக்க வேண்டும்.
 
* அடிக்கடி உடலுறவு வைத்துக்கொள்ள விரும்பும் பெண்களும் உண்டு. அவர்களது விருப்பத்தை ஆண்கள் உதாசீனப்படுத்தாமல் முடிந்த வரை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.
 
* தாம்பத்திய உறவை அதிகரிக்கும் சக்தி கீரை மற்றும் பழங்களுக்கும் உண்டு. பேரீச்சம்பழம், பாதாம்பருப்பு, பசும்பால் போன்றவையும் ஆண் – பெண் உறவுக்கு வலிமையும், இனிமையும் சேர்க்கக்கூடியவை. 
 
* உடல் சூடாக இல்லாமல் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். உறவுக்குள் நுழையும் முன் தம்பதியர் இருவரும் குளித்தல் நல்லது. 
 
* தாம்பத்தியத்தில் பெரும் குறையாக இருப்பது தம்பதிகளின் அவசர உடலுறவு ஆகும். யாருமற்ற நேரம், இடம் போன்றவற்றை தேர்வு செய்து தொந்தரவு இல்லாமல் உறவை அனுபவிக்கும் போது மட்டுமே இன்பத்தின் எல்லைவரை செல்ல முடியும். 
 
* தம்பதிகளுக்குள் முற்றிலும் தவிர்க்க வேண்டிய சொல் கூச்சம். எதற்காகவும் எப்போதும் கூச்சப்படாமல் உறவில் இறங்கும் போது தான் இருவரும் ஆசைப்பட்டதை கேட்கவும் கொடுக்கவும் முடியும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்