Paristamil Navigation Paristamil advert login

தம்பதிகள் குடும்ப சண்டைகளின் போது பேசக் கூடாத பேச்சுக்கள்....

தம்பதிகள்  குடும்ப சண்டைகளின் போது பேசக் கூடாத பேச்சுக்கள்....

4 மார்கழி 2014 வியாழன் 11:12 | பார்வைகள் : 8791


 குடும்பத்திற்குள், குறிப்பாக, கணவன்-மனைவிக்குள் வாக்குவாதங்கள் ஏற்படுவது சகஜம். பல சின்னச் சின்ன விஷயங்கள் கூட பெரும் சண்டையாக உருவெடுத்துவதை நாமும் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். இருந்தாலும் சிறுசிறு சண்டைகள் தான் ஒரு நல்ல தம்பதிக்கும் பல புரிதல்களுக்கும் அடையாளமாக இருக்கும்.

 
'சண்டைன்னா சட்டை கிழியத்தான் செய்யும்.' ஆனால், அப்போது தேவையில்லாத வார்த்தைகளை இருவருமே தப்பித் தவறி உதிர்த்து விடக் கூடாது. அவை மற்றவரின் மனதை ஆழமாகக் காயப்படுத்தலாம்; ஏன் ஆறாத வடுவாகக் கூட மாறி விடலாம்.
இப்போது குடும்ப சண்டைகளின் போது பேசக் கூடாத, ஒருவரையொருவர் காயப்படுத்தக் கூடிய ஐந்து முக்கியமான பேச்சுக்கள் குறித்து பார்க்கலாம்.
 
சண்டையின் போது ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக் கொள்வது ஒரு மோசமான வியாதியாகும். இதனால் சண்டை மேலும் மேலும் வளர்ந்து கொண்டே தான் போகும். இப்படியே போனால், சண்டைக்கான உண்மையான காரணமே மறந்து போய்விடும். யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து சரண்டர் ஆவது தான் பெட்டர்! 
 
இது ஒரு மாதிரி பழிவாங்கும் நோக்கில் சண்டை போடுவது போல் உள்ளது. 'யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கு ஒரு காலம் வரும். எனக்கும் ஒரு வாய்ப்பு வரும், அப்போ உன்னை கவனிச்சுக்கிறேன்' என்று கணக்குப் போட்டுக் கொண்டு இருந்தால், நாளுக்கு நாள் குடும்பத்தில் சண்டைகள் பெருகிக் கொண்டே தான் போகும். ஒருவரையொருவர் மன்னித்து அரவணைத்துக் கொள்வதே குடும்பத்திற்குள் மகிழ்ச்சியை வரவழைக்கும்!
 
இந்தக் காலத்தில் இப்படிப் பேசுவது ஒரு ஃபேஷனாகவே போய்விட்டது. சண்டைக்கு யார் காரணமாக இருந்தாலும், இதுப்போன்ற வார்த்தைகளை எளிதாகக் கொட்டி விடலாம், ஆனால் அவ்வளவு எளிதில் அவற்றை அள்ள முடியாது. மேலும், எவ்வளவு மன்னிப்பு கேட்டாலும், இத்தகைய வார்த்தைகள் எப்போதும் மனதில் நீங்காத ரணத்தை அளித்துக் கொண்டே இருக்கும்.
 
குடும்பத்திற்குள் சண்டை வந்து இப்படித் திட்டும் போது, அது திட்டு வாங்குபவரைக் கடுமையாகப் பாதிக்கும். இன்னும் சொல்லப்போனால், திட்டுபவருக்குத் தான் இந்தத் திட்டு மிகவும் பொருந்தும். இதுப்போன்ற வார்த்தைகளைத் தவிர்த்து, எவ்வளவுக்கு எவ்வளவு சமாதானமாகப் போக முடியும் என்பதை ஆராய வேண்டும்.
 
சண்டை வலுக்கும் போது, "நான் இங்க கிடந்து நாயா கத்திட்டு இருக்கேன்... நீ ஊமையா இருந்து கழுத்தறுக்குறியா? ஒழுங்கா வாயைத் திறந்து இப்பவே பதில் சொல்!" என்று கத்துவது வழக்கம். அதற்குப் பதிலாக, பொறுமையாக "நான் சொல்றதைக் கொஞ்சம் கேளேன்... ஒரு நிமிஷம் உட்கார்ந்து அமைதியா பேசி முடிவெடுப்போமா?" என்று சொல்லிப் பாருங்கள். அதோட ரிசல்ட்டே வேறு மாதிரி இருக்கும். குறிப்பாக, எதையும் பேசுவதற்கு முன் கொஞ்சம் யோசித்துப் பேச வேண்டும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்