Paristamil Navigation Paristamil advert login

கணவருக்கு பயப்படலாமா?

கணவருக்கு பயப்படலாமா?

6 கார்த்திகை 2014 வியாழன் 11:31 | பார்வைகள் : 8669


 `என் கணவரை நினைச்சாலே பயமாக இருக்கிறது…’ என்று சில பெண்கள் சொல்வார்கள். பயம் என்பது திருடனுக்கு போலீஸ் மீது ஏற்படலாம். கணவன்_மனைவி உறவென்பது போலீஸ் திருடன் போன்றதல்ல.

 
கணவன் மீது மரியாதை இருக்க வேண்டும். அதையும் மீறி இருவருக்கும்ளும் இருக்க வேண்டியது நட்பு.
 
நட்பு மீது வாழ்க்கை நடத்தும் ஜோடிகள் அதிக மகிழ்ச்சியாக இருப்பார்கள். பிரச்சினைகளை தைரியமாக சமாளிப்பார்கள். இவர்கள் `இல்லற’ வாழ்க்கையும் ரொம்ப ஜாலியாக இருக்குமாம்.
 
சில குடும்பங்களில் கணவன்_மனைவி உறவு வாத்தியார் மாணவி என்ற நிலையில் அமைந்து விடுகிறது. சமையலில் பெயர் வாங்க வேண்டும். நடை, உடை, பாவனையில் அவர் பாராட்ட வேண்டும். விழுந்து விழுந்து உபசரித்து `சபாஷ்’ வாங்க வேண்டும் என்ற ரீதியில் அத்தகைய மனைவிகள் நடந்து கொள்கிறார்கள். இப்படிப்பட்ட எதிர்பார்ப்புகளும் வாழ்க்கை சிறக்க உதவுவதில்லை. கடுமையாக மனைவி உழைத்தும், கணவருக்காக தன்னை மாற்றிக் கொண்டும் அதற்குரிய பிரதிபலனை கணவன் வழங்காதபோது அவள் மனதொடிந்து எதிர்மறையாக நடக்கத் தொடங்கி விடுவாள்.
 
உங்க வீட்டில் நீங்க எப்படி? பயப்படவோ, எப்போதும் பாராட்டுக்காக உழைக்கவோ செய்யாதீர்கள். அன்பை, நட்பை வெளிப்படுத்துங்கள் அது போதும்… ஆயிரம் விதத்தில் உங்களுக்கும் பிரிக்க முடியாத இறுக்கத்தை ஏற்படுத்தி விடும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்