இன்றைய தம்பதியினர் ஏன் குழந்தை வேண்டாம் என்று சொல்கின்றனர்?
17 ஐப்பசி 2014 வெள்ளி 17:28 | பார்வைகள் : 8827
இந்த உலகத்தின் அழகான சிறிய மனிதர்கள் குழந்தைகள் ஆவார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சில தம்பதியினர் குழந்தைகள் பெறுவதை விரும்புவதில்லை. தம்பதியினர் திருமணம் புரிந்து கொண்ட ஒரு வருட காலத்திற்கு பின் எழும் முதல் கேள்வி குழந்தைகள் பெறுவது குறித்ததாகவே அமையும். குழந்தைப் பெற்று கொள்வதிலிருந்து தம்பதியினர் ஒதுங்க நினைக்கும் போது, அதற்கான சில குறிப்பிட்ட காரணங்கள் உள்ளன. அவை உங்களுக்கு அதிர்ச்சி ஊட்டுபவையாக இருக்கலாம்.
குழந்தைப் பெற்று கொண்டால் அது தங்கள் வாழ்க்கையையோ அல்லது தொழிலையோ பாதிக்கும் என்ற எண்ணத்தினாலேயே சில தம்பதியினர் குழந்தைப் பெற்று கொள்வதில் குறைவான ஆர்வம் காட்டுகின்றனர். குழந்தை பிறந்த உடன் அதனை கவனித்து கொள்ள யாருமில்லை என்ற எண்ணமும் தம்பதியினர் குழந்தைப் பெற விரும்பாததற்கு காரணமாகும். ஆனால் இன்று குழந்தைப் பெற விரும்பாததற்கு சொல்லப்படுகின்ற காரணங்களான தொழில் மற்றும் பிற பிரச்சனைகளை ஒதுக்குவது அவசியமாகிறது.
இன்றைய காலக்கட்டத்தில் வாழ்கையில் ஏற்படும் மன அழுத்தத்தின் காரணமாக ஆண்களும், பெண்களும் ஆரோக்கிய குறைபாடுகளை சந்திகின்றனர். குழந்தைப் பெற வேண்டாம் என்று அவர்கள் எண்ணுவதற்கு இது முதன்மையான காரணமாகும். மேலும் குழந்தைகளை தத்தெடுத்து கொள்வதென்பது இன்றளவும் சமுதாயத்தால் வரவேற்கப்படாத ஒன்றாகவே உள்ளது.
குழந்தைப் பெற விரும்பாததற்கான காரணங்களாக தம்பதியினர் கூறுவனவற்றை நீங்கள் அலசி ஆராய்ந்து பார்த்தால், குடும்பம் என்ற அமைப்பை ஏற்படுத்துவதிலிருந்து, அவர்கள் விலகி செல்வதை நீங்கள் உணரலாம். தங்கள் இருவரை தவிர வேறு ஒரு உறவு உருவாக்கி கொள்வதை தவிர்க்க காரணங்களாக தம்பதியினர் கூறுவன குறித்து காண்போம்
தொழிலே பிரதானம் என்று பல தம்பதியினர் நினைப்பதே குழந்தைப் பெறாததற்கு முக்கிய காரணமாக அமைகிறது. பெரும்பாலான தம்பதியினர் தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் குழந்தைகளையும் உடன் எடுத்து செல்ல விரும்புவதில்லை.
உங்கள் துணைவருக்கு நேரம் ஒதுக்குவதே சிரமமாக இருக்கும் போது குழந்தைக்கென்று நேரம் ஒதுக்க முடிவதில்லை. குழந்தை பெறுவது நினைவிற்கு வரும் போது தம்பதியினருக்கு தோன்றும் முதல் எண்ணம் இதுவே. இதன் காரணமாக குழந்தைப் பெறுவது சிறந்ததல்ல என்று அவர்கள் எண்ணுகின்றனர்.
இன்றைய நவீன தம்பதியினர் குழந்தைப் பெற்று கொள்வதை பெரிய கடமையாக உணர்கின்றனர். இந்த எண்ணம் குடும்பமாக உருவாவதற்கு வாய்ப்பு வழங்குவதில்லை. குழந்தைப் பெறாததற்கு இதுவும் முக்கிய காரணமாகும்.
இல்லத்தை உருவாக்க இருவர் மட்டும் போதும்
தம்பதியினர், இல்லத்தை உருவாக்க இருவர் மட்டுமே போதும் என்று எண்ணுகின்றனர். மேலும் குழந்தை பெறுவதை தேவையில்லாத ஒன்று என்றே எண்ணுகின்றனர். இந்த எண்ணமே குழந்தைப் பெற வேண்டாம் என்று அவர்கள் எண்ண காரணமாக அமைகிறது. எனினும் குடும்பம் என்ற அமைப்பை குழந்தைகளே பூர்த்தி செய்கின்றனர்.
மணம் புரிந்த ஆரம்ப கால கட்டத்தில் குழந்தை பெறுவதென்பது மனஅழுத்தம் தருவதாக அமைகிறது. இதனை ஏற்று கொள்ள தம்பதியினர் விரும்புவதில்லை. தம்பதியினரை பயமுறுத்தும் இத்தகைய மன அழுத்தம் சில நேரங்களில் வேலைப்பளுவை விட அதிக சிரமம் தருவதாக அமைகிறது.
பணியில் ஏற்படும் சுமை மற்றும் குடும்பத்தில் ஏற்படும் அழுத்தம் ஆகியவற்றின் காரணமாக பெரும்பாலான பெண்கள் கருவுறுதலில் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். சுகாதார பிரச்சனைகள் கருவுறுதலில் முக்கிய பங்கு வகிக்கிறது. பல கருச்சிதைவுகள் மற்றும் கரு கலைப்புகள் ஆகியவற்றாலும் பெண்களுக்கும் நம்பிக்கை குறைகிறது. இவை குழந்தை வேண்டாம் என்று எண்ண முக்கியமான காரணமாக அமைகிறது.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் தம்பதியினருக்கு அவர்கள் இருவருமாக சேர்ந்து இருப்பது பழகின ஒன்றாகி விடுகிறது. நீண்ட காலமாக இருவரும் இணைந்து இருக்கும் போது, வீட்டிற்குள் மகிழ்ச்சியை தருவிக்க குழந்தை என்பது தேவையில்லை என்பதாகிவிடுகிறது. இதுவே அவர்கள் குழந்தையை தவிர்க்க உண்மையான காரணமாகி விடுகிறது.