கோபமாக இருக்கும் கணவரை சமாளிக்க வழிகள்
 
                    5 புரட்டாசி 2013 வியாழன் 08:00 | பார்வைகள் : 16120
* கணவர் கோபமாக இருக்கும் போது, மனைவி நிச்சயம் அமைதியாக இருக்க வேண்டும். அதிலும் தேவையில்லாமல் திடீரென்று கோபத்துடன் பேசுகிறார் என்றால், அலுவலகத்தில் உள்ள டென்சனாகத் தான் இருக்கும் என்று மனைவிமார்கள் சிறிது நேரம் அமைதியாக இருக்க வேண்டும்.
ஏனெனில் சாதாரணமாகவே பெண்கள் ஆண்களிடம் ஏதாவது கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பார்கள். ஆனால் கணவன் கோபமாக இருக்கும் போது, கேள்விகளை கேட்டால், பின் திட்டாமல் என்ன செய்வார்கள். ஆகவே அவர்களை சற்று நேரம் தனிமையில் விட வேண்டும். 
* ஆர்வக்கோளாறில் கோபத்துடன் இருக்கும் கணவரிடம் சென்று, என்ன பிரச்சனை என்று உடனே அவரது பிரச்சனைகளைப் பற்றி கேட்க வேண்டாம். ஏனெனில் பொதுவாக கோபமாக இருப்பவர்கள் சாந்தமடைய வேண்டுமெனில், அவர்களை தனியாக யோசிக்க விட வேண்டியது தான். இதனால், அவர்கள் கோபத்திற்கான காரணத்தை யோசித்து, அமைதியாகி அவர்களே வந்து பேசுவார்கள். 
* சில நேரங்களில் தனிமையால் கூட கோபத்தை அடக்க முடியாது. அதுமட்டுமின்றி, சிலர் மனதில் உள்ள பாரத்தை பகிர்ந்து கொள்ள விரும்புவார்கள். எனவே கணவர் கோபமாக இருக்கும் போது, அருகில் சென்று தொடும் போது அவர்கள் அமைதியாக சென்று விடு என்று சொன்னால் மட்டுமே, தனிமையில் விட வேண்டுமே தவிர, அவ்வாறு சொல்லாவிட்டால், அவர்கள் கோபத்தின் காரணத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்கள் என்று அர்த்தம். எனவே இதைப் புரிந்து நடந்து கொள்ளுமல் நல்லது. 
* பழைய கால ட்ரிக்ஸைக் பயன்படுத்தலாம். அது என்னவென்றால், அவர்கள் கோபமாக இருக்கும் போது, அவர்களை கட்டி அணைத்து, முத்தம் கொடுத்து, அவர்களது மனதை மாற்றலாம். சொல்லப்போனால், இதனால் நிச்சயம் கோபம் போகும். 
* ஒருவேளை கணவர் உங்களது செயலால் தான் கோபமடைந்துள்ளார் என்றால், அப்போது அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதிலும் இந்த மாதிரியான காரணத்தினால் வரும் கோபத்தை எளிதில் போக்க முடியாது. ஏன், அவர்களிடம் பேசக்கூட முடியாது.
ஏனெனில் அந்த அளவில் கணவருக்கு கோபமானது இருக்கும். ஆகவே இந்த மாதிரியான சூழ்நிலையில், அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் ஒரு அழகான கவிதை அல்லது மன்னிப்பு என்று எழுதிய பேப்பரை வைத்து கேட்கலாம்.
                         வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று






 CCTV - VIDÉO SURVEILLANCE 24 மணி நேர வீடியோ கண்காணிப்பு
        CCTV - VIDÉO SURVEILLANCE 24 மணி நேர வீடியோ கண்காணிப்பு         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan