Paristamil Navigation Paristamil advert login

கடமையை புன்முறுவலோடு எதிர் கொள்ளுங்கள்!

கடமையை புன்முறுவலோடு எதிர் கொள்ளுங்கள்!

29 ஆவணி 2013 வியாழன் 10:51 | பார்வைகள் : 10217


 கல்யாணமான புதுசுல... எதுக்கெடுத்தாலும் ஸ்வீட்டா பேசுவார்... நடந்துக்குவார். நான்கூட இவரை மாதிரி ஒருத்தர் கிடைச்சது கடவுள் புண்ணியம்னு அவரை காலைத் தொட்டு அடிக்கடி கும்பிடுவேன்... போகப் போகத்தான் அவரோட மறுபக்கம் தெரியுது. 

 
இவருக்குன்னு சுய அறிவே கிடையாது. அவுங்க அம்மா சொன்னா போதும்... அதையே வேத வாக்கா... எடுத்துக்கிட்டு உயிரை எடுக்குறார்?!" இவ்வாறு சொல்லும் பெண்களை பார்க்கலாம். திருமணமான புதிதோ அல்லது பல வருஷங்கள் கழிந்தோ... 
 
சில பெண்களுக்குத் தங்களுடைய கணவரைப் புரிந்துக் கொள்ளாமல் இருப்பார்கள். இதற்கு மனைவி மட்டும் காரணம் அல்ல... கணவனும்தான். வெளியே... அலுவலகத்தில் ஏற்படும் கசப்புகளை வீட்டுக்குள் காண்பிக்கும்போதுதான் தம்பதிகளுக்குள் பிணக்கு ஏற்படுகிறது. 
 
அளவோடு பேசுங்கள். அதிகமாக பேசுவதால்தான் அது வாக்குவாதமாக மாறி சண்டையில் முடியும். குறைவாக பேசும்போது, உங்கள் பேச்சுக்கு கணவர் மதிப்பு கொடுப்பார். நிறைய பேசுவதை கேட்பதற்கு ஆண்களுக்கு பொறுமை கிடையாது. தேவையில்லாமல் பேசுவதால், தேவையான பேச்சும் கேட்கப்படாமல் போய்விடக்கூடும். 
 
* ஒரு செயலை செய்ய வேண்டும் அல்லது செய்யக் கூடாது என்று நாம் சொல்வதற்கான காரணத்தை அவர்கள் தெரிந்து கொள்ள செய்ய வேண்டும். தம் மீது பெற்றோர்கள் சந்தேகப்பட மாட்டார்கள் என்ற நம்பிக்கை... கணவர் உங்களைத் திட்டுவதையோ... உங்களோடு சண்டை போடுவதையோ, பிறர் முன்பாக செய்வதை நீங்கள் விரும்பவில்லை என்பதை அவரிடம் தனியாக எடுத்து சொல்லுங்கள். 
 
* அவரைப் பற்றிய குறைகளை அம்மாவிடமும், தோழியுடனும் பேசுவதை விட, அவரிடமே பேசினால் நல்ல பலன் கிடைக்கும். நம் குழந்தைகள் சந்தோஷமான குழந்தைகளாக வளர்வதற்கும், நல்ல பண்புகள் கொண்ட வருங்கால இளைஞர்களாக இருப்பதற்கும், சாதனைகள் புரிவதற்கும் அடிப்படை காரணம் பெற்றோர்களின் வளர்ப்புதான். 
 
* கணவர், குழந்தைகள், கணவரின் குடும்பத்தார் என எல்லோருக்கும் நீங்கள் தேவை என்பதை ஏன் நெகட்டிவ்வாக எடுத்துக் கொள்கிறீர்கள்... அதையே பாசிட்டிவ்வாக நினைத்துப் பாருங்கள்...

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்