Paristamil Navigation Paristamil advert login

கூட்டுக் குடும்ப வாழ்க்கை...

கூட்டுக் குடும்ப வாழ்க்கை...

23 ஆவணி 2013 வெள்ளி 12:07 | பார்வைகள் : 10400


 கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த இந்தியாவில் இந்தப் பெருமை மெள்ள மெள்ள சிதைகிறது. மணமான மறுவாரமே கூட தனிக்குடித்தனத்துக்கு தயாராகும் மனோபாவமும் ஆர்வமும் அதிகரித்து வருகிறது. 

 
இது ஒரு பக்கம் வேதனை என்றாலும் இன்னொரு பக்கம் திருமணத்தையே அடியோடு வெறுக்கும் போக்கும் மிகுதியாகிறது. குடும்ப பிரச்சனைகளை எதிர்கொள்ள தயங்குவது- பொருளாதார நெருக்கடிகள்- வாழ்வாதார சிரமங்கள்.. இவற்றையெல்லாம் மனதில் கொள்வதால் மண வாழ்க்கைகை ஏற்க தயங்குகிறார்கள். 
 
அதிலும், குறிப்பாக தகவல் தொழில்நுட்ப துறையில் இருப்பவர்கள் கல்யாணம் என்றாலே பத்தடி தள்ளி நிற்கிற அளவுக்கு இருக்கிறார்கள். பல விஷயங்களில் நாம் மேலைநாடுகளை பின்பற்றி நமது பண்பாட்டை இழந்து வருகிறோம். 
 
அதில் மிக முக்கியமானது கூட்டுக் குடும்ப வாழ்க்கை. இன்றைய சூழலில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை என்பது அவ்வளவு எளிதானது அல்ல என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால் அதில் இருக்கிற சுமைகளே நமக்கு சுகம் என்பதை மறந்துவிடுகிறோம். 
 
இப்போது உறவுகள் கூட உள்ளத்தளவில் இல்லாமல் உதட்டளவுக்கு மாறிவிடடது. உணவு, உடை என எத்தனையோ விஷயங்களில் நாம் மாறி விட்டோம். எது மட்டுமின்றி இந்த கூட்டுக்குடும்ப வாழ்க்கையைத் துறப்பதும்..மறப்பதும் நமக்கு மட்டுமல்ல.... 
 
நாட்டுக்கும் நல்லதல்ல. சாதாரண சிரமங்களை நினைத்து, சாதிக்க வேண்டிய மண வாழ்க்கையை துறப்பது படைப்பின் பரிணாமத்துக்கே அர்த்தமற்றது ஆகிவிடும். முடிந்தவரை கூடி வாழ்வோம்.. கோடி நன்மைகள் பெறுவோம்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்