1 ஆவணி 2013 வியாழன் 06:07 | பார்வைகள் : 9756
ஆணின் அருகாமையில் இருக்கும் போது ஒருவித பாதுகாப்பு உணர்வு இருக்கவேண்டும் என்பதைத்தான் பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர். காதலனோ... கணவனோ.... தன்னை உள்ளங்கையில் வைத்து தாங்கவேண்டும்... கண்ணுக்குள் வைத்து காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் அதிக அளவில் உள்ளனர்.
தனக்கு கணவனாக, காதலனாக இருப்பவன் தன்னை புரிந்து கொள்பவனாக, தன்னை மதிப்பவனாக, தன் மீது அளவில்லாத பிரியம் கொண்டவனாக இருக்கவேண்டும் என்றுதான் அனைத்துப் பெண்களும் விரும்புகின்றனர்.
இந்த காலத்தில் தைரியமான பெண்ணாக இருந்தாலும் கூட தன்னுடைய கணவரின் கையினை பாதுகாப்போடு பிடித்துக் கொள்ளவேண்டும் என்று நினைப்பவர்கள்தான் அதிகம் உள்ளனர். அது பெண்களுக்கே உள்ள இயல்பான ஒன்று. அவர்களுக்கு பாதுகாப்பானராக இல்லாமல், ஏதாவது பிரச்சினை என்றால் பெண்களின் பின்னால் ஒளிந்து கொள்ளும் ஆண்களை அவர்களுக்கு அறவே பிடிப்பதில்லை.
பெண்களுக்கு பிடித்த மாதிரி எப்படி நடந்து கொள்வது என்று தெரியலையே… ஏன் திடீர்னு நம்மை விட்டு விலகுறா? என்ன காரணம்னு தெரியலையே என்று குழம்ப வேண்டாம். கீழ்கண்ட தகுதி உங்களுக்கு இருக்கிறதா என்று உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்
முப்பொழுதும் உன் கற்பனைகள் என்று கூறுவார்களே… அதே போல சதா சர்வகாலமும் காதலி அல்லது மனைவியின் நினைப்பிலேயே இருக்கும் ஆண்களை அதிகம் பிடிக்குமாம்.
அழகான ஆண்களைத்தான் பெண்கள் அதிகம் விரும்புவார்கள் என்ற கருத்து நிலவுகிறது. அது தவறான கருத்து அழகை விட ஆண்மை நிறைந்த… எதையும் தைரியமாக சொல்லத்துணிந்த, செய்யத்துணிந்த ஆண்களைத்தான் பெண்கள் விரும்புகின்றனராம். அவர்களின் கைகளில் பாதுகாப்பாக இருப்பதைத்தான் விரும்புகின்றனராம்.
நேர்மையான ஆண்களைத்தான் அதிக அளவில் பெண்கள் விரும்புகின்றனர். எதையும் நேருக்கு நேராக சந்திக்கும் ஆண்கள்தான் பெண்களின் விருப்பமாக உள்ளது.
பெண்களின் செயல்பாடுகளை பாராட்டுவதோடு, அவர்களை மதிக்கும் ஆண்களின் மீது தனி மரியாதை ஏற்படுகிறது. அதோடு அதிகமாக உற்சாகப்படுத்தும் ஆண்களை அதிக அளவிலான பெண்கள் விரும்புகின்றனராம்.
காதலியாக இருக்கும் போது அதிக கவனம் செலுத்தி விட்டு மனைவியான பின்னர் அம்போ என்று விட்டுவிடும் ஆண்களை பிடிப்பதில்லையாம். திருமணத்திற்குப் பின்னரும் தனி கவனம் செலுத்தி தன்னைக் கொண்டாடும் ஆண்களைத்தான் அதிக பெண்கள் விரும்புகின்றனராம்.
மனைவியை அன்போடு தொடுவதும், அவ்வப்போது கொஞ்சுவதும், சின்னச் சின்னதாய் பாராட்டுடன் கொடுக்கும் முத்தமும் மிகப்பெரிய பரிசாக போற்றப்படுகிறதாம். கோடி ரூபாய் கொடுத்து வாங்கித் தரும் வைர நெக்லஸை விட அன்போடு வாங்கிக் கொண்டு போகும் மல்லிகைக்கு ஈடாகாது என்கின்றனர் அனுபவசாலிகள்.