Paristamil Navigation Paristamil advert login

கணவன் - மனைவி சண்டையை சரி செய்ய வழிகள்

கணவன் - மனைவி சண்டையை சரி செய்ய வழிகள்

20 வைகாசி 2013 திங்கள் 16:38 | பார்வைகள் : 10888


 உறவுகளுக்குள் சண்டைகள் வருவது சாதாரண விஷயம். அவ்வாறு வரும் சண்டைகள் தான் அந்த உறவை நீண்ட நாட்கள் நிலைக்க வைக்கும். சண்டை வராத உறவுகளை விட, சண்டை வந்தால் தான் நல்லது என்று நிறைய பேர் சொல்வார்கள். எந்த ஒரு சண்டையும் ஒரு நாளுக்குள் முடிந்துவிட வேண்டும். இவ்வாறு வரும் சண்டையில் ஈகோ இருக்கவே கூடாது. 

 
* வாழ்க்கை துணையுடன் சண்டை போட்டு, ஒரு நாள் முழுவதும் பேசாமல் இருக்கலாம். ஆனால் இரவு வந்தால், அந்த சண்டையை சரிசெய்துவிட வேண்டும். ஏனெனில் இந்த நேரம் தான் இருவரும் அமைதியாக மனம் விட்டு பேச முடியும். 
 
அதிலும் படுக்கும் போது, துணை கோபமாக இருந்தால், யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து, மற்றவரின் அருகில் சென்று அவர்களை கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து, அவர்களது கோபத்தை அடக்க வேண்டும். இவ்வாறு செய்தால், யாராக இருந்தாலும் உருகிவிடுவார்கள். அதுமட்டுமின்றி, படுக்கும் போது அவர் தள்ளிப் படுத்தால், அவரைத் தெரியாமல் தொட்டது போன்று தொட்டுவிட்டு, உடனே சாரி என்று சொல்லிப் பாருங்கள்.
 
* சில நேரங்களில் துணையின் கோபத்தை போக்க ஆச்சரியமான செயல்கள் கூட உதவும். சொல்லப்போனால், ஆரோக்கியமான வாழ்க்கையில் எதிர்பாராதவாறு ஆச்சரியம் கொடுப்பது ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, ஒருவர் மற்றவரிடம் நிச்சயம் ஏதாவது ஒன்றை எதிர்பார்ப்பார்கள். அந்த எதிர்பார்ப்புகளை அவர்கள் கோபமாக இருக்கும் போது செய்தால், அதுவும் சண்டையை மறக்கச் செய்து, காதலை அதிகரிக்கும். 
 
* சண்டை ஏற்படும் போது இருவருள் ஒருவர் சண்டை போடுவதை தவிர்க்க, அவர்களது மனதை திசைத்திருப்ப ஏதாவது ஒரு வித்தியாசமான மற்றும் அவர்களது ஆர்வத்தை தூண்டும் ஏதாவது ஒரு தலைப்பைப் பற்றி பேச ஆரம்பித்தால், சில சமயங்களில் கோபத்தை மறந்துவிட்டு பேசிவிடுவார்கள். பிறகு என்ன ஒரே சந்தோஷம் தான். 
 
* சண்டை வந்துவிட்டால், உடனே அந்த சண்டையை நிறுத்துவதற்கு, துணையிடம் மன்னிப்பு கேட்கலாம். அதிலும் வித்தியாசமான முறையில் அவர்களிடம் அந்த மன்னிப்பை வெளிப்படுத்தலாம். உதாரணமாக, பெண்கள் சாரி என்று ஒரு பேப்பரில் எழுதி குளியலறை கண்ணாடியில் மாற்றலாம், ஆண்கள் என்றால் அதேப் போன்று எழுதி சமையலறை, ஃப்ரிட்ஜ் போன்ற இடங்களில் வைக்கலாம். இல்லையெனில் தோப்புக்கர்ணம் போடலாம்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்