பெண்கள் ஜெயிக்க தன்னம்பிக்கை தேவை
3 வைகாசி 2013 வெள்ளி 13:37 | பார்வைகள் : 11242
சிறு வயது முதலே பெண்கள் தன்னம்பிக்கையுடன் வளர வேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில் சாதிக்க முடியும். தங்கள் திறமை பற்றி தெரியாத பெண்கள் தான் எந்த மாதிரியான எதிர்காலத்தை அமைத்துக் கொள்வது என்ற தயக்கத்தில் கடைசிவரை மற்றவர்களை சார்ந்தே வாழ்ந்து விடுகிறார்கள்.
இந்த நிலையில் இருக்கும் பெண்கள் மாற வேண்டுமானால் சிறுவயது முதலே அவர்கள் தன்னம்பிக்கையுடன் வளர்க்கப்பட வேண்டும். சென்னை, பெங்களூர், மும்பை போன்ற பெருநகரங்களில் வேண்டுமானால் ஆண்களை விடவும் பெண்கள் அதிகம் சம்பாதிக்கிறவர்கள் என்று சொல்லலாம்.
ஆனால் கிராமத்துப் பெண்கள், வசதி வாய்ப்பில்லாத நகரத்துப் பெண்களின் நிலை இன்றும் மாற்றவர்களை சார்ந்தே உள்ளனர். இன்றும் பெண்கள் பலர் குடும்பத்தை அல்லது கணவரை எதிர்பார்த்து போராட்ட வாழ்க்கை தானே வாழ்ந்து வருகிறார்கள்.
பெண்கள் என்றாலே அவர்கள் இன்னொரு குடும்பத்தில் போய் வாழ வேண்டியவர்கள் என்ற பெற்றோரின் எண்ணம் தான் தங்கள் வீட்டுப் பெண்ணின் எந்தவொரு திறமையையும் அங்கீகரிக்க முடியாமல் தடுக்கிறது. இதுவே தொடர்கதையானால் எதிர்பார்க்கிற பெண்கள் முன்னேற்றம் என்பது இன்னும் கனவு நிலையில் தான் இருந்து கொண்டிருக்கும்.
பெண்கள் தான் வளரும் பருவத்தில் நல்லதுகெட்டது புரிய வைக்க வேண்டும். மேலும் வளரும் பருவத்தில் அவர்களின் எதிர்காலச் சிந்தனை எதுவாக இருக்கிறது என்பதை கண்டறிந்து, அதில் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
எந்த துறையில் இன்று பெண்கள் ஈடுபடவேண்டும் என்றாலும் பெற்றோரின் அன்பும், பக்கபலமும் வேண்டும். குழந்தைகளின் வளர்ச்சியில் பெற்றோரின் அக்கறையும் இருப்பது கூடுதல் பலம். ஆரம்பம் முதலே பெற்றோரால் தன்னம்பிக்கையுடன் வளர்க்கப்படும் பெண்கள் இதில் முன்னேறி விடுகிறார்கள்.