Paristamil Navigation Paristamil advert login

பெற்றோரின் அறிவுரையை கேளுங்கள்

பெற்றோரின் அறிவுரையை கேளுங்கள்

30 சித்திரை 2013 செவ்வாய் 12:21 | பார்வைகள் : 10169


 உலகிலேயே பெற்றோர்கள் தான் தங்கள் குழந்தைகள் மீது அதிகமான அன்பு வைப்பவர்கள். அத்தகைய பெற்றோர்கள் தன் குழந்தை நன்கு சந்தோஷமாக, எந்த பிரச்சனையுமின்றி இருக்க வேண்டுமென்று நினைத்து, நிறைய அறிவுறைகளைக் கூறுவார்கள். 

 
அவ்வாறு எந்நேரமும் இடையூறு தருவது போல் கூறும் அறிவுரைகளைப் பொறுக்க முடியாமல், பிள்ளைகள் பெற்றோர்களை எதிர்த்து பேசுவது, சில நேரங்களில் வெறுப்பது என்றெல்லாம் இருப்பார்கள். பெற்றோர்கள் அடிக்கடி அறிவுரை கூறினாலோ அல்லது எதிலும் இடையூறாக இருந்தாலோ, அப்போது அவர்களை எப்படி சமாளிப்பது என்று பார்க்கலாம்... 
 
-  பெற்றோர்கள் ஏதேனும் அறிவுறை கூறும் போது, அப்போது பொறுமையாக கேட்டுக் கொண்டு, அவர்கள் சொன்ன நல்லதை கேட்டு, கெட்டதை மறந்துவிட வேண்டும். - பெற்றோர்கள் கோபமூட்டும் வகையில் அறிவுரை கூறும் போது, கோபப்பட்டு குரலை உணர்த்தி பேசாமல், அவர்களிடம் பணிவுடன் "நீங்கள் பேசுவது எரிச்சலூட்டுவதாக உள்ளது" என்று வெளிப்படையாகவும் பணிவுடனும் சொன்னால், பெற்றோர்கள் புரிந்து கொள்வார்கள். அப்படி புரிந்து கொள்ளவில்லை என்றாலும் அடுத்து வரும் சமயங்களில் பொறுமையாக உங்களுக்கு புரிய வைக்க முயலுவார்கள். 
 
- பெற்றோர்களிடம் உங்களது விருப்பத்தை சொல்லி, உங்கள் வாழ்க்கை உங்களுக்கு பிடித்தவாறு எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதையும் வெளிப்படையாக சொல்ல வேண்டும். எப்போது பெற்றோர்கள், உங்களது விருப்பத்திற்கு எதிராக நடந்து, அவர்கள் விரும்பிய படி உங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனரோ, அப்போது அத்தகைய செயல்களுக்கு உடனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 
 
- சில பெற்றோர்கள் உணர்ச்சசிவசமாக பேசி காரியத்தை சாதிப்பார்கள். அப்போது மன அழுத்தம் கொண்டு பெற்றோர்களுக்காக எதையும் செய்யாமல், வெளிப்படையாக அவர்களிடம் இவ்வாறெல்லாம் செய்து காரியத்தை சாதிக்கலாம் என்று நினைக்க வேண்டாம் என்று வெளிப்படையாக சொல்லி, அவர்களை மாற்றுங்கள். 
 
பெற்றோரிடம் மனம் விட்டு பேசினால், எதற்கும் ஒரு நல்ல முடிவு கிடைக்கும். எனவே அவர்கள் உங்கள் சொந்த உணர்ச்சிகளில் குறுக்கிடும் போது, எரிச்சலாகவோ அல்லது கோபமூட்டுவதாகவோ இருந்தால், வெளிப்படையாக சொல்லிடவிட் வேண்டும். இதனால் இனிமேல் பெற்றோர்கள் சரியாக நடந்து கொள்வார்கள். 
 
- என்ன தான் பெற்றோர்கள் கோபத்தை ஏற்படுத்தினாலும், அவர்கள் மீது இருக்கும் அக்கறையும் பாசமும் குறையக் கூடாது. எப்போதும் அவர்களை அனைத்து வகையிலும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்