பரிசில் முதன்முறையாக - பாடசாலையில் அமைக்கப்பட்ட காற்று சுத்திகரிப்புகருவி
8 புரட்டாசி 2023 வெள்ளி 12:33 | பார்வைகள் : 8449
பரிசில் உள்ள பாடசாலை ஒன்றில் காற்று சுத்திகரிக்கும் கருவி ஒன்றுபொருத்தப்பட்டுள்ளது. பரிசைச் சேர்ந்த பாடசாலை ஒன்றில் இக்கருவிபொருத்தப்படுவது இது முதன்முறையாகும்.
9 ஆம் வட்டாரத்தில் உள்ள Victoire பாடசாலையிலேயே இந்த நவீன கருவிபொருத்தப்பட்டுள்ளது. மாசடைவினால் சுகாதாரமற்ற வளிமண்டலம்காணப்படுவதை அடுத்து, வளியினை சுத்திகரித்து தூய்மையான காற்றைவெளியிடும் கருவி ஒன்றே இங்கு பொருத்தப்பட்டுள்ளது.
அதேபோல் ஒவ்வொரு முறையும் வளி அதிக மாசடவை சந்தித்தால் அதற்குதகுந்தாற்போல் சுத்திகரிப்பு அளவை மாற்றிக்கொண்டிருக்கும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் மேற்படி கருவி, முதன்முறையாக பரிசைச் சேர்ந்த பாடசாலை ஒன்றில் பொருத்தப்பட்டுள்ளது.
Aérophile எனும் நிறுவனம் இக்கருவியை பொருத்தியுள்ளதுடன், அதனைபராமரிக்கும் பணியினையும் மேற்கொண்டுள்ளது. இதற்காக பரிஸ் 9 ஆம் வட்டாரநகரசபை €200,000 யூரோக்களை முதலிட்டுள்ளது.