Paristamil Navigation Paristamil advert login

திருமண பந்தத்தை மூழ்கடிக்கும் ஐந்து பழக்கங்கள்!

திருமண பந்தத்தை மூழ்கடிக்கும் ஐந்து பழக்கங்கள்!

17 மாசி 2014 திங்கள் 16:59 | பார்வைகள் : 9564


திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று பெரியவர்கள் கூறுவார்கள். அதற்கு காரணம் கணவனும் மனைவியும் ஆயிரம் காலம் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதற்காகவே. ஆனால் இன்றைய காலகட்டத்தில் இந்த பயிர் சீக்கிரமே வாடி விடுகிறது. தற்போதைய சூழலில் குடும்பநல நீதிமன்றத்திற்கு சென்றால் அங்கே விவாகரத்து வழக்குள் குவிந்து கிடக்கின்றன. ஏன் என்று பார்த்தால் அதற்கு ஆயிரம் காரணங்களும் கூறப்படுகிறது. ஆனால் பொதுவான சில காரணங்களால் தான் பல பந்தங்களும் முறிகிறது. நாம் ஏற்கனவே சொன்னதை போல், திருமணம் என்பது ஒரு எளிதற்ற உறவாகும். விவாகரத்து நடப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும், ஆச்சரியத்தக்க ஐந்து பழக்கங்களால் திருமண பந்தமே மூழ்கி விடும். என்ன ஆச்சரியமாக உள்ளதா? உண்மை தான்...அப்படி திருமண பந்தத்தை உடைக்கும் 5 பொதுவான பழக்கங்கள் என்னவென்று பார்க்கலாமா?

மோசமான பேச்சுவார்த்தை

நீங்கள் சொல்லாததை உங்கள் கணவன்/மனைவி கேட்க வேண்டும் என்று நீங்கள் எதிர்ப்பார்க்க மாட்டீர்கள் தானே? அவர்களாலும் அது முடியாது. ஒழுங்காக பேசாமல் சொல்ல வேண்டியதை தெளிவாக சொல்லாமல் போவதால், பல உறவுகள் விவாகரத்தில் வந்து நிற்கிறது. அதனால் இந்த பெருந்தவறை தவிர்க்கவும். சீரான முறையில் உங்கள் துணையிடம் பேசுங்கள். பணம் போன்ற நுண்மையான பிரச்சனைகளை பற்றி பேசுங்கள். பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். அன்றாட நிகழ்வுகளை பற்றி இருவரும் மனம் விட்டு பேசுங்கள். வேளை பளு அதிகமாக இருந்தாலும் கூட, இடைவேளையில் எஸ்.எம்.எஸ் அனுப்பிடுங்கள். பயங்கள், கனவுகள் மற்றும் சின்ன சின்ன சந்தோஷத்தை கூட பகிர்ந்து கொள்ளுங்கள்.

தோல்வி மனப்பான்மை

பொதுவாகவே, நீங்கள் அனைத்திலுமே எதிர்மறையான மற்றும் அவநம்பிக்கையான எண்ணத்தை கொண்டுள்ளீர்களா? அனைத்தை பற்றியும் அனைவரை பற்றியும் குற்றஞ்சொல்லும் தன்மையை கொண்டவரா நீங்கள்? ஆம் எனில், மன சோர்வான சூழ்நிலையில் நிறைந்திருக்கும் உங்கள் வீடு. உங்கள் துணையும் மனக்கசப்போடு இருப்பார். வெறுப்பு மனப்பான்மையை விட்டு விலகியே இருங்கள். உங்களை ஏதாவது பிரச்சனை உறுத்தி கொண்டே இருந்தால், உங்கள் துணை, நெருங்கிய நண்பர்கள் அல்லது குடும்பத்தாரிடம் பேசுங்கள். உங்கள் பிரச்சனைகளால் உங்கள் உறவின் மீது அந்த சுமையை ஏற்றாதீர்கள். வாழ்க்கையில் சந்தோஷத்தை கொண்டு வாருங்கள். நட்பு ரீதியான ஆரோக்கியமான சூழ்நிலையை வீட்டில் உருவாக்கிடுங்கள். அனைத்திலும் குற்றம் கண்டு பிடிக்காதீர்கள். நடப்பது அதன் போக்கில் நடக்கட்டும். தினமும் கொஞ்சமாவது சிரியுங்கள்; அது உங்களை பற்றிய நகைச்சுவையாக இருந்தாலும் கூட. வாழ்க்கை என்பது முட்டுக்கட்டைகளால் நிறைந்தது. ஆனால் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ரோஜாவை பார்த்து வியப்படையுங்கள். அதில் இருக்கும் முட்களை மறந்து விடுங்கள்.

சுயமையப்படல்

உங்கள் துணைக்கும் போதிய இடத்தை அளிக்க வேண்டும். மாறாக அனைத்திலும் உங்கள் ஆளுமையே இருக்க கூடாது. உங்கள் வட்டத்தில் உங்கள் துணியை அடக்கி வைக்காதீர்கள். திருமணம் என்பதே 'நாம்' என்பதை சுற்றி தான் நகர்கிறது. உங்கள் துணையை உங்கள் வாழ்க்கையில் ஈடுபடுத்துவது முக்கியமான ஒன்று. அதே போல் அவரின் வாழ்க்கையிலும் நீங்கள் ஒரு அங்கமாக மாற வேண்டும். அவர்களின் வேலை, உடல்நலம், குடும்பம் மற்றும் நண்பர்களுடன் ன்னெகலும் ஐக்கியமாகுங்கள். ஆர்வத்தை வெளிக்காட்டுங்கள். அவரின் வாழ்க்கை வட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். தன்னலமற்று, தாராள மனப்பான்மையுடன், முதிர்ந்த சிந்தனையுடன் செயல்பட வேண்டும்.

பாராட்டாமல் தவிர்ப்பது


மனிதர்களான நமக்கு அடுத்தவர்களையும் அவர்களை பற்றிய விஷயங்களையும் அசால்ட்டாக எடுத்துக் கொள்வது வாடிக்கையாகி விட்டது. பொதுவாகவே மனிதர்கள் அனைவரும் பாராட்டுக்காக ஏங்குபவர்கள். உங்கள் துணைக்கு நீங்கள் தொடர்ந்து பல நல்ல காரியங்களை செய்து வந்த போதிலும், அவரிடம் இருந்து ஒரு பாராட்டு கூட கிடைக்கவில்லை என்றால் எப்படி உணர்வீர்கள்? உங்களுக்காக, உங்கள் வீட்டிற்காக, உங்கள் குழந்தைகளுக்காக உங்கள் துணை செய்யும் அனைத்தையும் பாராட்டுங்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் அவர்களை புகழ்ந்திடுங்கள். தினசரி செய்யும் சமையல் நன்றாக வந்ததற்கு கூட பாராட்டலாம். அவர்களின் நல்ல குணங்கள், வலிமை, அன்பு, துணிச்சல் மற்றும் தன்னலமற்ற குணம் ஆகியவற்றை கண்டு வியந்திடுங்கள். உங்கள் அன்பை பெற்று உங்களுக்காக அக்கறை கொள்ள ஒருவர் இருக்கிறார் என்றால் அது ஒரு வரப்பிரசாதமாகும். அது அனைவருக்கு சுலபத்தில் கிடைத்து விடாது.
அருவெறுப்பான பழக்கங்கள்

மூக்கை நோண்டுவதும் காதுகளை நோண்டுவதும் உங்களுக்கு ஒரு பொழுது போக்கா? ஒரு கால் உறையை வாரம் முழுவதும் அணிவீர்களா? அல்லது உடம்பின் உள்ள அருவருக்கத் தக்க இடங்களில் கையை விட்டு சொரியும் பழக்கம் இருக்கா? இவையனைத்தும் உங்கள் திருமண பந்தத்தை சீர்குலைத்து விடும். இவ்வகையான பழக்கங்கள் சங்கடத்தை உண்டு பண்ணுவதோடு நிற்பதில்லை. மாறாக இவையெல்லாம் சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத பழக்கங்களாகும். இவ்வகையான சூழ்நிலைகளில் உங்களுடன் இருக்க உங்கள் துணைக்கு அருவருப்பாக இருக்கக் கூடும். எரிச்சலை ஏற்படுத்தும் இவ்வகையான பழக்கங்களை கை விடுங்கள். உங்கள் தனிப்பட்ட விஷயங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும், ஒழுக்கமாகவும் வைத்திடுங்கள். இனிமையான குணங்களை வளர்த்து, மற்றவர்கள் உங்களிடம் எளிதில் ஒட்டுமாறு செய்திடுங்கள்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்