வாழ்க்கை துணையை தேடும் போது பெண்கள் செய்யக்கூடிய தவறுகள்!!!
18 தை 2014 சனி 11:56 | பார்வைகள் : 9791
வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் அனைவரும் சந்திக்கக்கூடிய ஒன்ற தான் காதல். அத்தகைய காதல் வந்துவிட்டால், அதனை நீண்ட நாட்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டியது நம் கையில் தான் உள்ளது. அதிலும் காதலிக்க நினைக்கும் போது மூளை சொல்வதை கேட்டு நடப்பது நல்லது. பெரும்பாலான காதல் தோல்வியில் முடிவதற்கு முக்கிய காரணம், காதலிக்கும் போது தொல்லை தரும் வகையில் தவறுகளை செய்வது தான்.
குறிப்பாக பெண்கள் தான் இத்தகைய தவறுகளை செய்வார்கள். இவ்வுலகில் பெண்களுக்கு இருக்கும் ஆசைக்கு அளவே இருக்காது. அவ்வாறு ஆசைப்படுவது தவறில்லை. ஆனால் அந்த ஆசை நடைபெற வேண்டுமென்று, தொல்லை தரும் விதத்தில் சில சமயங்களில் நடப்பார்கள். அதனால் சிலருக்கு காதல் தோல்வி அடைந்துவிடும். உடனே பெண்கள் மட்டும் தான் தொல்லை தருவார்கள் என்று எண்ண வேண்டாம். ஆண்கள் அதை விட இரண்டு மடங்கு தொல்லை தருவார்கள். இப்போது வாழ்க்கை துணையை தேடும் போது பெண்கள் பொதுவாக செய்யக்கூடிய சில தவறுகளைப் பார்ப்போம்.
பெரும்பாலான பெண்கள் தங்களது கடந்த கால காதல் வாழ்க்கையை அவ்வளவு எளிதில் மறக்கமாட்டார்கள். ஆனால் அதை மறக்கவும், தனிமையில் இருப்பதை தவிர்க்கவும், வாழ்க்கை துணையாக வர ஆசைப்படுபவருடன் டேட்டிங் செல்வார்கள். அவ்வாறு சென்றாலும் கடந்த கால வாழ்க்கை பற்றியே யோசிப்பார்கள். ஆகவே, அவ்வாறு செல்லும் முன், முதலில் நீங்கள் எதற்காக டேட்டிங் செல்கிறீர்கள் என்பதை யோசித்துக் கொள்ள வேண்டும்.
ஒரு உறவானது நீண்ட நாட்கள் தொடர வேண்டுமெனில், முதல் சந்திப்பிலேயே செக்ஸ் வைக்கக்கூடாது. பொதுவாக ஆண்களுக்கு செக்ஸ் வைக்க பிடிக்கும் தான். ஆனால் அவர்களது வாழ்க்கை துணையாக வேண்டுமானால், நல்ல பெண்ணாக இருங்கள். அதற்காக முத்தம் கொடுக்கக்கூடாது என்றில்லை. ஆனால் அதிலும் சற்று கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது.
எப்போதுமே ஆண்களின் இயல்புத்தன்மையை மாற்ற நினைக்கக்கூடாது. உலகில் யாருமே பர்ஃபெக்ட் இல்லை. ஆகவே எப்போதும் உங்களுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் என்று நினைக்காமல், அவர்களை புரிந்து கொண்டு, அவர்களுக்கு பிடித்தவாறு அவர்களை சுதந்திரமாக இருக்க விடுங்கள். இதனால் அவர்களது மனதில் நல்ல இடத்தைப் பிடிக்கலாம்.
ஒருவரை ஈர்க்க வேண்டுமென்று, வராத ஒன்றை அவர்களுக்கு முன்பு இருப்பது போல் காட்டிக் கொள்ளாதீர்கள். ஏனெனில் எந்த ஒரு ஆணுக்கும் அப்படி நடப்பது பிடிக்காது. மேலும் எதிர்காலத்தில் எப்போதாவது தெரிந்தால், அவர்களுக்கு கோபம் வந்து, தேவையில்லாத சண்டை ஏற்படும்.
எந்நேரமும் அவர்களுக்காகவே காத்திருக்காதீர்கள். அவர்கள் எங்கு அழைத்தாலும் உடனே செல்லாதீர்கள். இதனால் பிற்காலத்தில் அதுவே பெரிய சண்டையில் முடியும். எனவே அடிக்கடி உங்களுக்கு வேலை இருப்பது போல் வெளிக்காட்டிக் கொள்ளுங்கள். இதனால் அந்த காதலானது ஆரோக்கியமாக இருக்கும்.
உங்களது கடந்த வாழ்க்கை தவறான டேட்டிங் முறையால் பிரிந்திருக்கலாம். ஆகவே அடுத்த முறை பிடித்தவருடன் டேட்டிங் செல்லும் போது, முதல் முறை செய்த தவறை மீண்டும் செய்யாமல் இருங்கள்.