அலுவலகத்தில் பெண்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்

16 தை 2014 வியாழன் 09:12 | பார்வைகள் : 14329
இன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாதது. இப்படிப்பட்ட சூழலில் சக ஆண்களிடம் இருந்து பிரச்சினைகள் வராமல் இருக்கவேண்டுமெனில் அவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?பழக்கத்தின் எல்லை எதுவரை இருக்கலாம்? இதோ சில பயனுள்ள ஆலோசனைகள்!
* நம் உடைகள் எதிரிலிருப்பவரின் உணர்வுகளைத் தூண்டாமல் இருப்பது நல்லது. அதனால்தான் ஆள் பாதி ஆடைபாதி என்றார்கள். மாடர்ன் ஆக உடுத்தினாலும்கூட, நேர்த்தியாக உடுத்துங்கள்.
* முக்கியமாக உடன் வேலை பார்க்கும் ஆண்களிடம் நம்முடைய சொந்த விஷயங்களை பங்கு போடாதீர்கள். அங்கேதான் ஆரம்பிக்கிறது பல பிரச்சினைகள்.
* சொந்த குடும்ப விஷயங்களுக்கு உடன் வேலைபார்க்கும் ஆண்களிடம் ஐடியாக்களைக் கேட்காதீர்கள். இதனால் அவர்கள் உங்கள் மேல் அதிக அட்வான்டேஜ் எடுக்க முன் வருவார்கள்!
* உடன் வேலை செய்தாலும் பர்சனல் செல் நம்பர்களை யாருக்கும் தராதீர்கள். நம்பிக்கைக்குரிய நபர்களை தவிர.
* சில நேரங்களில் உயர் அதிகாரிகளே தொல்லைகள் தருவார்கள். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஹாண்டில் செய்யாமல், பிரச்சினைகள் தீரும் வகையில் மிக ஜாக்கிரதையாகக் கையாளுங்கள். உயர் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் அவர்களின் பழிவாங்கும் படலம் உங்கள் வேலைகளில் குறை கண்டுபிடிப்பதில் ஆரம்பிக்கும். அதனால் முடிந்தவரை வேலைகளில் தவறு செய்யாதீர்கள்.
* ஆண் நண்பர்களிடம் கை குலுக்குவது தவறல்ல. அதற்காக எல்லாவற்றுக்கும் கைகொடுப்பது, தொட்டுப் பேசுவது கூடாது. இதனால் அவர்கள் உங்கள் மேல் வேறு எண்ணம் வர காரணமாக அமையும்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025