Paristamil Navigation Paristamil advert login

பெண்களுக்கான விவாகரத்து சட்டங்கள்

பெண்களுக்கான விவாகரத்து சட்டங்கள்

13 தை 2014 திங்கள் 09:12 | பார்வைகள் : 10386


 விவாகரத்து கோர ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிசமமான உரிமை உண்டு. இருப்பினும், சில அடிப்படைக் காரணங்கள் பெண்கள் மட்டுமே விவாகரத்து கோர வரையறுக்கப்பட்டுள்ளது. கணவன் கற்பழிப்பு, இயற்கைக்கு மீறிய தவறான உறவு மேற்கொள்ளுதல் (ஆண் ஆணுடனோ, மிருகத்துடனோ உடலுறவு வைத்துக்கொள்ளுதல்). 

 
ஒரு திருமணம் சட்டப்படி நிலுவையில் இருக்கும் பொழுதே மறுமணம் செய்து கொள்ளுதல். இந்து திருமணச் சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட பெண் கணவர் மீது விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யலாம். ஜீவனாம்சம் பெற்றுக்கொண்டு இருந்தும் கணவன் திருமண உறவில் ஈடுபடாமல் அதற்கான கடமை ஆற்றாமல் இருக்கும் போது... இந்து திருமணச் சட்டம் மற்றும் சிறப்புத் திருமணச் சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் பாதிக்கப்பட்ட பெண் கணவர் மீது விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யலாம். 
 
ஒரு பெண் 15 வயதுக்குள் திருமணம் செய்து வைக்கப்பட்டால் அவள் 18 வயதுக்கு முன் அதனை ரத்து செய்ய கோருதல்... இந்து திருமணச் சட்டம் மற்றும் 1939ம் ஆண்டு இயற்றப்பட்ட இஸ்லாமிய திருமணங்கள் ரத்து சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் பாதிக்கப்பட்ட பெண் தன் கணவர் மீது விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யலாம். 
 
ஒரு சில நேரங்களில் தங்களுடைய திருமண உறவு தொடர்வதனால் எந்தப் பயனுமே இல்லை என்று நினைக்கும் தம்பதி, ஒருமனப்பட்டு விவாகரத்து மனு தாக்கல் செய்யவும் இந்து திருமணச் சட்டம், கிறிஸ்தவர்களுக்கான விவாகரத்துச் சட்டம், பார்சி திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம், சிறப்புத் திருமணச் சட்டம் ஆகிய அனைத்துச் சட்டங்களின் கீழும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 
 
இதன் கீழ் கணவர், மனைவி இருவரும் விவாகரத்துக்கு முழுமனதுடன் சம்மதித்து அவர்களுடைய ஜீவனாம்சம், எதிர்கால வாழ்வாதாரம், குழந்தை இருப்பின் அவற்றின் காப்பாளர் உரிமை, அவரவர் சொத்தின் மேலுள்ள உரிமை ஆகியவற்றை முடிவு செய்து, ஒரு தீர்வு கண்ட பின், இந்த மனமொத்த விவாகரத்து மனு தாக்கல் செய்யப்படும். 
 
இவ்வாறு தாக்கல் செய்யப்படும் விவாகரத்து வழக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதிலிருந்து இறுதி விசாரணைக்கு 6 மாத கால அவகாசம் அளிக்க அனைத்துச் சட்டங்களும் வகை செய்துள்ளது. இந்தக் கால அவகாசம் கொடுப்பதற்கான அடிப்படைக் காரணம் - தம்பதி தங்களுக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேற்றுமையை மறந்து ஒன்றுகூட இந்த கால அவகாசம் உதவலாம் என்ற எண்ணமே. 
 
இந்த மனமொத்த விவாகரத்து மனு தாக்கல் செய்த தினத்திலிருந்து 18 மாதங்கள் மட்டுமே நிலுவையில் இருக்கும். அதற்குள் விவாகரத்து பெறாவிடில் தள்ளுபடி செய்யப்படலாம். அது போல 6 மாத கால அவகாசம் முடிந்து வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படும் போது இருவரில் யாரேனும் ஒருவர் விவாகரத்துக்குச் சம்மதிக்காத பட்சத்திலும் வழக்கு தள்ளுபடி செய்யப்படலாம். 
 
பெரும்பாலானோர் இந்த கால அவகாசம் தேவையற்றது என்று எண்ணுவதன் காரணத்தினால், திருமணச் சட்டங்களுக்கான சட்ட திருத்த மசோதாவிலும் இயற்றப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்