பெண்களே முடிவை தெளிவாக சொல்லுங்க...........
6 மார்கழி 2013 வெள்ளி 11:54 | பார்வைகள் : 10006
ஒரு பெண்ணின் மீது ஆணுக்கோ அல்லது ஆணின் மீது பெண்ணுக்கோ ஈர்ப்பு ஏற்படுவது இயல்பு தான். ஒருவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அவரிடம் காதலில் விழுவது சுலபமாக நடக்க கூடியது தான். ஆனால் பல நேரங்களில் இது ஒரு தலை காதலாகவே விளங்குகிறது;
அதாவது ஒன்று அந்த பெண்ணுக்கு மட்டுமே அந்த பையனின் மீது காதல் இருக்கும், அல்லது பையனுக்கு மட்டுமே அந்த பெண்ணின் மீது காதல் இருக்கும். இருவருக்குமே அந்த காதல் உணர்வு ஒரே மாதிரி வர வேண்டும் என்ற வசியம் இல்லை தானே.
ஒரு வேளை ஒரு பெண்ணுக்கு பையனின் மீது காதல் ஏற்படவில்லை என்றால் அதை அந்த பையனிடம் சொல்வதற்கு சங்கடப்பட போவது அந்த பெண் தான். அதனை சொல்வதற்கு கஷ்டப்படுவாள். ஒரு ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே உள்ள உறவு சில நேரம் தவறான புரிதலை ஏற்படுத்தி விடும்.
ஆம், ஒரு பெண் ஒரு ஆணிடம் சகஜமாக பழுகுவதை வைத்துக் கொண்டு அவள் அவனை விரும்புகிறாள் என்று அவனாகவே தவறாக நினைத்து கொள்வதுண்டு. அதனால் ஒரு பெண் ஆணிடம் பழகும் போது அவன் மீது என்ன உணர்வோடு இருக்கிறாள் என்பதை மிகவும் கவனத்துடன் வெளிப்படுத்த வேண்டும்.
தன் காதலை வெளிப்படுத்தும் ஆணின் மீது அந்த பெண்ணுக்கு காதல் இல்லையென்றால் அதனை சரியான முறையில் அவனிடம் தெரிவிக்க வேண்டும். ஒரு ஆணிடம் அவனை பிடிக்கவில்லை என்று சொல்வதற்கு உங்களுக்காக சில வழிமுறைகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்...
• ஒரு ஆண் உங்களிடம் வரம்பு மீறினாலோ அல்லது உங்களின் மீதுள்ள விருப்பத்தை தெரிவித்தாலோ அவனிடம் சுற்றி வளைக்காமல் நேரடியாக பேசுங்கள். அவனை பிடிக்கவில்லை என்பதை தெளிவாக கூறி விடுங்கள். வருகாலத்தில் ஏற்படும் மிகவும் மோசமான சூழ்நிலைகளை இது தவிர்க்கும். வெளிப்படையாக மனதில் பட்டதை நேரடியாக கூறுவது காயத்தை ஏற்படுத்தினாலும் வருங்காலத்தில் ஏற்பட போகும் பிரச்சனைகளை தவிர்க்கும்.
• பொதுவாக ஆண்களிடம் ஈகோ உணர்ச்சி அதிகமாக இருக்கும். உங்களின் விருப்பமின்மையை நீங்கள் நாகரீகமற்ற முறையில் கண்டிப்பாக கூறுனீர்கள் என்றால் அது அவனின் ஈகோவை பாதிக்கும். உங்களையும் உங்கள் நடத்தையின் மீதும் அவனுக்கு எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்தும். அதனால் உங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தும் போது பண்புடன் வெளிப்படுத்துங்கள். மென்மையான தெளிவான உரையாடல் தவறான புரிதலை ஏற்படுத்தாது.
• உங்களுக்கு தெரிந்த ஆண் உங்களை விரும்புகிறார் என்பதை நீங்கள் அறிந்து கொண்டீர்களா? அதில் உங்களுக்கு விருப்பமும் இல்லையா? அப்படியானால் அதில் உங்களுக்கு விருப்பமில்லை என்பதை உங்கள் உடல் மொழி மற்றும் குணாதிசயங்கள் மூலம் வெளிப்படுத்துங்கள்.
நீங்கள் அளவுக்கு அதிகமான நட்புணர்ச்சியுடன் பழகினால் அவர் மீது உங்களுக்கு விருப்பம் உள்ளது என்று அவர் தவறாக எண்ணக் கூடும். இது உங்கள் இருவருக்கு மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தி விடும். உங்களுக்கு அவர் மீது விருப்பம் இல்லை என்றால் அதில் தெளிவாக இருங்கள்.
• உங்கள் உறவுகள் மற்றும் நண்பர்கள் உங்களுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை விட அதிகமாக கொடுக்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். முக்கியமாக ஒரு ஆணிடம் எப்போதும் தெளிவாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும்.
மேற்கூறிய டிப்ஸ் இன்றைய தலைமுறை பெண்களுக்கு பெரிதும் பயனுடையதாக இருக்கும். இவைகளை பின்பற்றி ஒரு ஆணிடம் உண்டான உறவில் தெளிவாக இருங்கள்.