Paristamil Navigation Paristamil advert login

பெண்கள் விரும்பும் அரட்டை......

பெண்கள் விரும்பும் அரட்டை......

3 மார்கழி 2013 செவ்வாய் 11:54 | பார்வைகள் : 9784


 பெண்கள் என்றாலே பேச்சுதான். பேசாமல் இருக்கும் பெண்களை பார்ப்பது கடினம்தான். இரு பெண்கள் பேசத் தொடங்கி விட்டால் அதில் எல்லா தலைப்புகளிலும் விவாதங்கள் இருக்கும் பெண்கள் அனைவருமே தனித்தன்மை வாய்ந்த பண்புகளை உடையவர்கள். உடைகள், நடவடிக்கைகள், அன்றாட பேச்சுகள் போன்ற அனைத்திலுமே வேறுபட்டு இருப்பவர்கள். 

 
ஆண்கள் அனைவருமே அரசியல், விளையாட்டு மற்றும் டேடிங் போன்றவற்றை விவாதிப்பதர்க்கே விரும்புவார்கள். ஆனால், பெண்கள் சற்று வித்தியாசமானவர்கள். காபி நேரங்களில் அல்லது வேலை நேரங்களிலும் அரட்டை அடிப்பதில் பெண்களுக்கே முதல் இடம். 
 
அவர்களது விவாதங்கள் சிறிய பொருள்களில் இருந்து ஆகாயம் வரையிலான பொருள்கள் வரை இருக்கும். ஒரு பெண்ணிடம் காபி நேரத்தில் நீங்கள் எதை பற்றி விவாதிக்க விரும்புகின்றீர்கள் என்று கேட்டால், " எதைப்பற்றிவேண்டுமானாலும்" என்ற பதில் தான் வரும். 
 
பெண்களின் பேச்சு அவ்வளவு எதார்த்தமான ஒன்றாகும். சில சமயங்களில் பெண்கள் எதை பற்றி விவாதிகின்றார்கள் என்ற கேள்விக்கு பதிலளிப்பது கடினமாகக்கூட இருக்கும். எவருமே சரியான பதிலை அளிக்க முடியாது. ஒவ்வொரு பெண்ணிற்கும் ஒவ்வொரு விருப்பங்கள் இருக்கும். 
 
சிலருக்கு அரசியல் மிகவும் பிடிக்கும் ஆனால் ஒரு சிலருக்கு பிடிக்காது. பெண்களுக்கு நாகரிகத்தில் அதிக விருப்பம் இருக்கும். எனினும், அதனை பற்றி சிறிதளவே தெரிந்திருக்கக் கூடும். பெண்கள் விவாதங்களில் காரசாரம் நிறைந்திருக்கும். ஆண்கள் இதனை கவனித்து தங்களது அறிவை வளர்த்துக்கொள்ளலாம். பெண்கள் விவாதிக்கும் சில விஷயங்களை பார்க்கலாம். 
 
• காபி நேரங்களில் பெண்கள் தனது விருப்பமான பிரபலங்கள் பற்றியும், அவரை பற்றிய தனது எண்ணங்களையும் விவாதிக்க விரும்புவார்கள். குறிப்பாக ஹீரோயின் பற்றியும் விவாதிக்க மறக்க மாட்டார்கள். அவள் போட்டு இருக்கும் டிரெஸ்ஸை பார்த்தாயா நன்றாகவே இல்லை!!. மேலும் தனக்கு விருப்பமான ஹீரோ பற்றியும் புகழ்ந்து கூறுவார்கள். 
 
• பெண்களின் விவாதங்கள் காதலை பற்றி பேசாமல் நிறைவேறாது. பொது இடங்களில் பேசாமல் இருந்தாலும் காதல் பற்றிய பேச்சு அவர்களுக்கு விருப்பமானதாகவே இருக்கும். இரு பெண்கள் தீவிரமாக பேசிக்கொண்டிருந்தால், கண்டிப்பாக காதலை பற்றி தான் இருக்கும். 
 
• கனவுகள் இல்லாத பெண்களே கிடையாது. எல்லா பெண்களுக்கும் சில கனவுகள் இருக்கும் அல்லது சில அச்சுறுத்தல்கள் இருக்கும். பெண்கள் காபி நேரங்களில் தங்களது கனவுகள் பற்றி விவாதிக்க பெரிதும் விரும்புவார்கள். சில சமயங்களில் சம்பந்தமில்லாத கனவாகக் கூட இருக்கும். 
 
• பெரும்பாலான பெண்களுக்கு பொழுதுபோக்குகள் இருக்கும். அந்த ஓய்வு நேரங்களில் அவர்கள் விதவிதமானவற்றை செய்ய விரும்புவார்கள். ஒரே பொழுதுபோக்கு உள்ள பெண்கள் என்றால் விவாதிக்க நேரம் போதாது. ஒரு சில பெண்கள் விவாதிப்பதோடு மட்டுமல்லாது அதனை பெரிதாக்கி தொழிலாகவும் செய்ய விரும்புவார்கள். பொழுதுபோக்கை வியாபாரமாக மாற்றக்கூடிய திறன் பெண்களுக்கு உண்டு. 
 
• நண்பர்களை பற்றிய பேச்சு காபி நேரங்களில் தவறாமல் இருக்கக்கூடிய ஒன்றாகும். ஆண்களைப் போலவே பெண்களும் நண்பர்களிடம் அன்பாக இருப்பார்கள். அவர்களது விவாதங்களில் சில நேரங்களில் உற்ற நண்பர்களை பற்றியோ அல்லது நண்பர்களை பற்றிய வம்புகளோ இருக்கும். 
 
எதைப்பற்றி இருந்தாலும் அதற்கு முடிவு என்பதே கிடையாது. பெண்கள் விவாதிப்பதை பெரிதும் ரசிக்கலாம். வெவ்வேறு தலைப்புகளில் பெண்கள் விவாதிப்பதை கண்டு ரசியுங்கள்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்