பிறரின் முடிவுக்கு கட்டுப்படாதீர்கள்.....
21 கார்த்திகை 2013 வியாழன் 12:58 | பார்வைகள் : 10008
நம் வாழ்வில் ஒரு சில நேரங்களில் பிறரின் அறிவுரைகளை நாட வேண்டி வரும். குறிப்பாக முக்கியமான முடிவுகளை எடுக்கும் போதும், பணி சார்ந்த தீர்மானங்கள் எடுக்கும் போதும் மற்றவர்களின் உதவி தேவைப்படும். ஆனால், ஒரு சிலர் நம்மை கட்டுக்குள் வைக்க தானாகவே அறிவுரைகளை வழங்குவார்கள்.
ஒரு சிலர் தன்னைச் சுற்றி இருப்பவர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்க விரும்புவார்கள் அல்லது தான் நினைக்கும் வழியில் செல்வதற்கான எல்லாவற்றையும் செய்வார்கள். இப்படிப்பட்டவர்களை நம்ப வைப்பது மற்றும் அவரோடு சேர்ந்து இருப்பது சிறிது கடினம் தான்.
இவர்கள் யாருடைய அறிவுரைகளையும் கேட்க மாட்டார்கள். இப்படிப்பட்டவர்களை கட்டுபடுத்த திறமையான நடவடிக்கைகளும் எண்ணங்களும் கொண்ட சிலரால் மட்டுமே முடியும். அவர்களின் ஆணவத்தையும், தேவைகளையும் புரிந்து கொண்டு, அவர்களின் போக்கில் செல்வது தான் அவர்களை கட்டுப்படுத்தும் ஒரே வழி.
அதனால் இப்பொழுது இப்படிப்பட்டவர்களை சமாளிக்க சிறந்த வழிகள் சிலவற்றை பார்க்கலாம்.
• இப்படிப்பட்டவர்களோடு எப்பொழுதுமே வாக்குவாதம் செய்யாதீர்கள். அவர்களால் தனது தோல்வியை சந்திக்க முடியாது. அதனால், உங்கள் காரியத்தை சாதித்துக்கொள்ள அவர்கள் சொல்வது சரி என்று கூறிவிட்டு உங்கள் தேவையை கேளுங்கள். இதனால் அவர்களுக்கு தன்னை முக்கியமாக கருதுவதற்கும் அவர்களின் வேலையை தானே செய்வதற்கும் வழிவகுக்கும்.
• இவர்கள் நம் வாழ்வில் நல்லதை செய்யாவிட்டாலும் தீர்வு எடுப்பதிலும் ஏற்பாடு செய்வதிலும் சிறந்தவர்கள். அதனால் அவர்களின் கெட்ட நடவடிக்கைகளை தவிர்த்து நல்லதையே எடுத்துக்கொள்ளுவோம்.