Paristamil Navigation Paristamil advert login

இல்லறம் இனிமையாக இருக்க வழிகள்

இல்லறம் இனிமையாக இருக்க வழிகள்

7 கார்த்திகை 2013 வியாழன் 09:17 | பார்வைகள் : 14496


 கணவன், மனைவி இருவருக்குள்ளும் நல்ல understanding இருக்கனும்.. விட்டுக்கொடுக்கும் மனபக்குவம் வேண்டும்.. அதற்கு சில வழிமுறைகள் உள்ளன. கணவன் - மனைவி இருவருக்குள்ளும் விட்டுக்கொடுத்து போக வேண்டும்.இப்போது இல்லறம் சண்டை சச்சரவுகள் இல்லாமல் இனிமையாக செல்ல வழிகளை பார்க்கலாம்.

 
பெண்களுக்கு : 
 
• உங்கள் துணைவருக்கு பிடிப்பது போல் உங்களை மாற்றிக்கொள்ளுங்க. அவருக்கு பிடித்த உணவுகளை சமைத்துக்கொடுங்க. 
 
• வேலைக்கு போயிட்டு வரும் ஆண்களிடம் வீட்டுக்கு வந்தவுடன் படபடவென்று வீட்டில் நடந்த விசயங்களை உளர கூடாது..அலுவலகம் முடிந்து கணவர் வீடு வரும்போது முகத்தில் புன்னகை ஏந்தி ஆர்வமுடன் அவரை எதிர்நோக்க வேண்டும். எந்த நேரத்தில் என்ன விசயம் பேசினாலும் பொறுமையுடன், இனிமையாகவும் அமைதியாகவும் எடுத்து சொல்லனும். 
 
• எந்த ஒரு சூழ்நிலையிலும் இருவரும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசக்கூடாது. எல்லா நேரங்களிலும் கணவர் கூடவே இருக்கனும் என்று எதிர்பார்க்காதிங்க. 
 
• கணவரின் குடும்பத்தாரை நம் குடும்பம் போல் பார்க்க வேண்டும். 
 
• கணவருக்கு பணிவிடைகள் செய்வதை மகிழ்ச்சியாக செய்ய வேண்டும். இஸ்திரி போடுவது,ஷூ பாலிஷ் செய்தல் போன்ற கணவரின் வேலைகளை விருப்பமுடன் நாம் செய்ய வேண்டும். 
 
• கணவருக்கு பிடித்தமான உடைகளை தேர்வு செய்ய வேண்டும். மேலும் கணவருக்கு பிடித்த உடைகளை அணிந்து கொள்ள வேண்டும். அவ்வபோது கணவருக்கு சிறு சிறு பரிசுகள் கொடுக்கலாம். மேற்கண்டவற்றை செய்து வந்தாலே கணவன்மார்கள் நம் வசம் ஆவது உறுதி. 
 
ஆண்களுக்கு: 
 
• உங்களின் விடுமுறை நாட்களில் மனைவியை சந்தோஷமாக வெளியே அழைத்து போங்க. 
 
• விடுமுறை நாட்களில் மனைவியுடன் கிச்சன் வேலைகளை பகிர்ந்துக்கொண்டால் மனைவி படும் குஷிக்கு அளவே இல்லை. மனைவிக்கு வீட்டு வேலைகளில் சின்ன சின்ன உதவிகள் செய்யலாம். உரிமையுடன் கணவரிடன் இந்த காய்கறிகளை நறுக்கி கொடுங்க, கொஞ்சம் வீட்டை கீளின் பண்ணுங்க என்று அன்பாக சொல்லும் மனைவியிடம் கோபப்படாமல் சிறு சிறு உதவி செய்யுங்கள்... 
 
• கணவர்மார்கள் மனைவி செய்யும் சமையலை பாராட்டவேண்டும். உப்பு, காரம் கூட இருந்தாலும் அதை பக்குவமாக எடுத்துச் சொல்லுங்க. • சின்ன சின்ன கிப்ட் வாங்கி சர்ப்ரைஸ் கொடுங்க.மனைவியிடம் தனி திறமை இருந்தால் அதை ஊக்குவிக்க மறக்காதீங்க. 
 
இருவருக்கும் : 
 
• இருவருக்குள்ளும் எந்த ஒரு சந்தேக பேயும் உள்ளே நுழையாமல் பார்த்துக்கொள்ளவும். அப்படியே ஏதாவது சந்தேகம் வந்தாலும் மனம் விட்டு ஒளிவு மறைவில்லாமல் பேசி தீர்த்துக்கொள்ளுங்க.எந்த விஷயங்கள் நடந்தாலும் 4 சுவருக்குள் மட்டுமே இருக்கட்டும்.. இருவருக்குள்ளே பகிர்ந்துக்கொள்ளுங்க. சிறு தவறுகள் நடந்தாலும் சகிப்பு தன்மையுன் ஏற்றுக்கொள்ளுங்க. 
 
• ஷாப்பிங் போகும் பொழுது கலந்து பேசி பொருட்கள் வாங்குங்க. டிரெஸ் எடுத்தாலும் உங்கள் துணையுடைய விருப்பம் கேட்டு எடுங்க. 
 
• இருவீட்டரையும் மதிக்க வேண்டும். உறவினர்கள் எந்த நேரத்தில் வீட்டுக்கு வந்தாலும் முகம் சுழிக்காமல் அவர்களை கவனிக்க வேண்டும். 
 
• இருவருக்கும் மகிழ்ச்சி கொடுக்கும் சின்ன சின்ன அன்புகளை அப்ப அப்ப பகிர்ந்துக்கொள்ளனும்.. 
 
• விடுமுறை நாட்களை சந்தோஷமாக செலவிடுங்க.. 
 
• சின்ன சின்ன சண்டைகள் இல்லற வாழ்க்கையில் வருவது இயல்பு தான். ஒருவர் கோபமாக இருக்கும் பொழுது மற்றவர் எதிர்த்து பேசாமல் மொளனமாக இருப்பது மேல்.. பேச பேச கோபம் தான் அதிகமாகும். நிம்மதி குறைந்துவிடும். 
 
• கணவர் மனைவியினை பிரிந்து வெளியூர் சென்று இருந்தாலும் தினமும் ஒரு முறை போனில் சந்தோஷமாக பேசுங்கள்.

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்