Paristamil Navigation Paristamil advert login

கணவரை எரிச்சலடைய செய்யும் விஷயங்கள்

கணவரை எரிச்சலடைய செய்யும் விஷயங்கள்

30 ஐப்பசி 2013 புதன் 07:56 | பார்வைகள் : 10409


இல்லறத்தில் கணவன் - மனைவிக்கு இடையே ஆயிரம் விசயங்கள் பேசுவதற்கு இருக்கும். கணவரிடம் நடந்து கொள்வதற்கும் சில வழிமுறைகள் உண்டு. இவற்றை கடைபிடித்தால் குடும்ப பயணம் சிக்கலின்றி இருக்கும். 
 
* காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ கணவன் மனைவிக்கு இடையேயான அன்பிற்கும் ஒரு அளவு உண்டு. அடிக்கடி போன் செய்து நச்சரித்தால் வேலை கெடும். அந்த எரிச்சலில் கணவர் ஏதாவது கத்துவார் பின்னர் பிரச்சினை பெரிதாகும். எனவே அன்பாயிருக்கிறேன் என்று போன் பண்ணி டிஸ்டர்ப் செய்வது பிடிக்காதாம். 
 
* சொல்ல வந்த விசயத்தை நேரடியாக சொல்லுங்கள். எதையாவது சொல்ல வந்து பின்னர் அதை விடுங்க என்று பொடி வைத்து பேசுவது கணவரை எரிச்சல் படுத்துமாம். எந்த விசயமென்றாலும் தனியாக சமாளித்து பழகுங்கள். சின்ன சின்ன விசயத்திற்கெல்லாம் கணவரை துணைக்கு அழைப்பது பிடிக்காதாம். 
 
* சம்பளப் பணத்தைப் பற்றி எதற்கெடுத்தாலும் கணக்கு கேட்காதீங்க. பெரும்பாலான கணவர்களுக்கு மனைவி மேல் வெறுப்பு வர அதுதான் காரணமாக உள்ளது. வேலை விசயமாக வெளியே அலைந்து விட்டு கணவன் வீட்டுக்கு திரும்பும் போது முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு பேசுவது கணவனுக்கு பிடிக்காதாம். முக்கியமாக ஏன் இவ்வளவு நேரம்? எங்கே ஊர் சுத்திட்டு வர்ரீங்க என்று கேட்க கூடாதாம். 
 
* ஏதாவது ஒரு செயலை செய்வதற்கு முன்னால் அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்று நினைத்து பயப்படுவது தேவையற்றது. தனக்கென வாழாமல் சமூகத்திற்காக பயந்து வாழும் பெண்களை கணவருக்கு அறவே பிடிக்காதாம். எதையும் அழுது சாதிக்கலாம் என்று நினைக்கும் மனைவியை கணவருக்கு அறவே பிடிக்காதாம். அழுது வடியும் அழுமூஞ்சி பெண்களை கண்டாலே காத தூரம் ஓடிவிடுவார்களாம். 
 
* கணவருக்கு என்று சில கொள்கைகள் இருக்கலாம். ஆனால் தனக்கு பிடித்த மாதிரிதான் இருக்க வேண்டும் என்று கணவரை மாற்ற முயற்சி செய்வது கூடாதாம். அது சிக்கலில் கொண்டு போய் விடும். அதேபோல் சாப்பிடும் நேரத்தில் சந்தோசமாக சாப்பிடாமல் குடும்ப பிரச்சினைகளை கிளறுவது சுத்தமாக பிடிக்காத விசயமாம். கணவருக்காக காத்திருக்கிறேன் என்று இரவில் சாப்பிடாமல் காத்து கொண்டிருப்பது பிடிக்காத விசயமாம். 
 
* வேலைக்குப் போகும் பெண்ணாக இருந்தால் கணவரிடம் பாதி வேலைகளை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துவது, ரூல்ஸ் பேசுவது பிடிக்காத விசயமாம். அதேபோல் வீட்டை அலங்கோலமாக போட்டு வைப்பது பிடிக்காதாம். முக்கியமாக அவரது நண்பர்களைப் பற்றி தவறாக பேசுவது, மட்டம் தட்டிப்பேசுவது பிடிக்கவே பிடிக்காதாம். 
 
* என் தங்கை வீட்டுக்காரர் அந்தமாதிரி இருக்கார். பக்கத்து வீட்டுக்காரர் தன்னோட மனைவிக்கு இதெல்லாம் செய்து கொடுக்கிறார் என உங்கள் கணவரை யாருடனும் ஒப்பிட வேண்டாம். இது கணவரை எரிச்சலடைய செய்யும்..

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்