Paristamil Navigation Paristamil advert login

பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் செஞ்சுக்கணுமா?

பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் செஞ்சுக்கணுமா?

23 ஐப்பசி 2013 புதன் 11:33 | பார்வைகள் : 9945


 இன்றைய இளம் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான், பெற்றோர்கள் காதலை சம்மதிக்காமல் இருப்பது. பொதுவாக வாழ்க்கை என்பது நமக்கு பிடித்தவாறு அமைந்தால், அதை விட பெரிய பாக்கியம் எதுவும் இல்லை. அப்படி தனக்கு வாழ்க்கைத்துணையாக இளம் பெண்கள் தங்களுக்கு பிடித்தவரை தேர்ந்தெடுத்தால், அதனை பெற்றோர்கள் மறுக்கிறார்கள். இதனால் பலர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். மேலும் பலர் மனதை கல்லாக்கி, வேறொருவரை திருமணம் செய்து கொண்டு, பிடிக்காத வாழ்க்கை வாழ்கின்றனர். 

 
உண்மையிலேயே பெற்றோர்கள் காதலுக்கு எதிரிகள் அல்ல. அவர்களுக்கு தங்கள் குழந்தைகள் எவ்வளவு தான் பெரிய பெண்ணாக இருந்தாலும், சிறு குழந்தைகளாகவே தெரிவார்கள். ஆனால் பெற்றோர்களிடம் தம்முள் இருக்கும் காதலைப் பற்றி வெளிப்படையாகவும், புரியுமாறும் பேசினால், நிச்சயம் பெற்றோர்களிடம் காதல் திருமணத்திற்கு சம்மதம் வாங்கிவிடலாம். இப்போது அப்படி பெற்றோர்களிடம் காதலை சொல்லும் போது மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்களைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை மனதில் கொண்டு நடந்து கொள்ளுங்கள். நிச்சயம் உங்கள் காதல் வெற்றியடையும். 
 
* பெற்றோர்களிடம் காதல் திருமணத்திற்கு சம்மதம் வாங்கும் போது, ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டியதென்றால், உங்கள் காதலரைப் பற்றியும், அவர் உங்களை எப்படியெல்லாம் சந்தோஷமாக வைத்துக் கொள்வார் என்பதையும், இருவரும் ஒருவரை ஒருவர் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதையும் தெளிவாக பெற்றோர்களிடம் சொல்ல வேண்டும். 
 
* நிச்சயம் பெற்றோர்கள் இதனால் அதிக அளவில் கோபமடையலாம். இதனால் அவர்கள் உங்கள் மனதை மாற்றுவதற்கு, உங்கள் காதலரைப் பற்றி பலவாறு சொல்வார்கள். அப்படி சொல்லும் போது, நீங்கள் கோபப்படாமல், அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்க வேண்டும். இதனால் அவர்களது மனதில் உள்ள எண்ணத்தை நன்கு புரிந்து கொண்டு, பின் அதற்கேற்றவாறு பேசி, சம்மதம் வாங்க முடியும். 
 
* சிலர் பெற்றோர்களிடம் தங்கள் காதலை பற்றி சொல்லும் போது, பெற்றோர்கள் ஒப்புக் கொள்ளவில்லை என்றால், மரியாதை இல்லாமல் நடந்து கொள்வார்கள். ஆனால் இப்படி நடப்பதால் மட்டும் ஒன்றும் மாறப்போவதில்லை. ஆகவே காதலைப் பற்றி சொல்லும் போது, பெற்றோர்களுக்கு மதிப்பு கொடுத்து, உங்கள் சம்மதம் இல்லாமல் நான் எதையும் செய்யமாட்டேன் என்று அவர்களுக்கு கொடுத்து நடந்து கொண்டால், பதிலுக்கு அவர்களும் சந்தோஷப்பட்டு, திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள வாய்ப்பு உள்ளது. ஆகவே எந்நேரத்திலும் மரியாதையுடன் நடந்து கொள்ளுங்கள். 
 
* முக்கியமாக காதலை பெற்றோர்களிடம் சொல்லும் போது பொறுமையை கையாள வேண்டும். காதல் வேகத்தில் பொறுமையை இழந்தால், பின் காதலையும் இழக்க நேரிடும். ஆகவே நீங்கள் பெற்றோர்களிடம் காதலை சொல்லும் போது அவர்கள் அடித்தாலும் சரி, உங்களிடம் பேசாமல் இருந்தாலும் சரி, சற்று பொறுமையாக இருக்க வேண்டும். ஏனெனில் பெற்றோர்கள் நீங்கள் எடுத்த முடிவு சரியா என்று யோசிக்க சிறிது நாட்கள் வேண்டுமல்லவா? 
 
* இறுதியாக பெற்றோர்களை வற்புறுத்த வேண்டாம். இதனால் அவர்களது கோபம் மட்டும் தான் அதிகரிக்குமே தவிர, நீங்கள் சொல்லும் வார்த்தை அவர்களது மனதை எட்டாது. ஆகவே அவர்களை வற்புறுத்தாமல், அவர்களிடம் மனதில் இருக்கும் அனைத்தையும் பேசிவிட்டு, அமைதியாக இருங்கள்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்