Paristamil Navigation Paristamil advert login

கணவன்- மனைவி உறவுக்குள் இடைவெளி விழுந்திருச்சா?

கணவன்- மனைவி உறவுக்குள் இடைவெளி விழுந்திருச்சா?

19 ஐப்பசி 2013 சனி 11:21 | பார்வைகள் : 9310


 திருமணமான புதிதில் தம்பதியர் இடையே காற்று கூட புக முடியாத அளவுநெருக்கம் ஏற்படுவது இயல்பு. தம்பதியர் இடையேயான காதல் உணர்வுகள் ஒருகட்டத்திற்குப் பின்காணமல் போய்விடுகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அவை என்னவென்று சிலவற்றை பார்க்கலாம். 

 
• தம்பதியரை முதலில் தாக்குவது மன அழுத்தம். அது பணிச்சூழல்பற்றியதாகவும் இருக்கலாம். பணம் தொடர்புடையதாகவும் இருக்கலாம். இந்த மனஅழுத்தமே தம்பதியரிடையேயான நெருக்கத்தை பிரிக்கும் முக்கிய எதிரியாக உள்ளது. 
 
எனவே மன அழுத்தத்தின் அளவை தெரிந்து கொண்டு அது குடும்பத்தைபாதிக்காத அளவு மருத்துவர்களிடமோ, உளவியலாளர்களிடமோ ஆலோசனை பெற வேண்டும்.மன உளைச்சல் காரணமாகவும் தம்பதியரிடையே இடைவெளி ஏற்பட காரணமாகிறது. 
 
உறவுகளிடையே ஏற்படும் சிக்கல்கள் தம்பதியரிடையேயான உறவுக்கு வேட்டுவைக்கும். தகவல் பரிமாற்றத்தில் புரிந்து கொள்ள இயலாத நிலைதேவையற்ற விவாதங்களும் குடும்ப உறவுகளை பாதிக்கும். 
 
• மது குடித்துவிட்டு போதையில் மிதப்பது கண்ட போதை வஸ்துக்களை உபயோகித்துவிட்டு உறங்கிப் போவது தம்பதியரிடையே நெருக்கத்தை குறைக்கிறது. பணிச் சூழல்>அதிகாலையில் எழுந்து அலுவலகம் சென்றுவிட்டு இரவு வீடு திரும்புவது>உடலில் சோர்வை அதிகப்படுத்திவிடுகிறது. 
 
நேரங்கெட்ட நேரத்தில்தூங்கி எழுவது அசதியை ஏற்படுத்துவதால் தம்பதியரிடையே இடைவெளி ஏற்படுகிறது.எனவே சரியான அளவில் பணி நேரத்தையும்>ரொமான்ஸ்க்கான நேரத்தையும்திட்டமிடவேண்டும். 
 
* சிறு குழந்தைகள் பிறந்த சமயமாக இருந்தால் அது தம்பதியரிடையே இடைவெளிஏற்படும் காலமாகும். எனவே குழந்தைக்கு அதிக நேரம் ஒதுக்குவதோடு, ரொமான்ஸ்சுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். திருமணத்தில் பார்த்ததை விட இப்ப ரொம்ப குண்டாயிட்டோமோ என்ற எண்ணம் உளரீதியான பாதிப்பை ஏற்படுத்தும். 
 
எனவே இதுவும் கூட இடைவெளிக்குகாரணமாகிறது. உடல் பருமன் காரணமாக ஆண்களுக்கு டெஸ்டோஸ்ட்டிரான் சுரப்புகுறைவதும் தம்பதியரின் இடைவெளிக்கு காரணமாகிறது. 
 
பெண்களுக்கு மெனோபாஸ் காலம் வந்தாலே வசந்த காலமே முடிந்துவிட்டதைப் போலஉணர்வர். எனவே தம்பதியர் இருவரும் கலந்து ஆலோசித்து பிரச்சினையின் உண்மை தன்மையைபுரிந்து கொண்டு இடைவெளியை குறைக்க முயல வேண்டும். அப்பொழுதுதான் வாழ்க்கைஎன்னும் பூந்தோட்டத்தில் மகிழ்ச்சிப் பூக்கள் பூக்கும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்