Paristamil Navigation Paristamil advert login

எந்த மாதிரியான ஆண்களை காதலிக்கக் கூடாது என்று உங்களுக்கு தெரியுமா?

எந்த மாதிரியான ஆண்களை காதலிக்கக் கூடாது என்று உங்களுக்கு தெரியுமா?

11 ஐப்பசி 2013 வெள்ளி 13:17 | பார்வைகள் : 12631


 ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு மாதிரியான ஆண்களை பிடிக்கும். தாங்கள் நினைத்த மாதிரி இருக்கும் ஆண்களையே பெண்கள் காதலிக்கின்றனர். இந்நிலையில் எந்த மாதிரி ஆண்களை காதலிக்கக் கூடாது என்று பார்ப்போம்.

பெண் போன்று பழகும் ஆண்களை காதலிப்பது கூடாது. அவர்களிடம் பெண்மைக்கு உரிய குணங்கள் இருந்தால் தள்ளி இருப்பது நல்லது.பெண்கள் பற்றி அவர்களாக முடிவுக்கு வந்துவிட்டு எதற்கெடுத்தாலும் நீ இப்படித் தான் என்று பேசும் ஆண்கள் பக்கமே போகக் கூடாது.

கையில் இருந்து பைசா செலவழிக்க ஆயிரம் முறை யோசிக்கும் ஆண்களை காதலித்தால் பிரச்சனை தான். உங்கள் கைக் காசை தான் செலவழிக்க வேண்டி இருக்கும். அவரின் கஞ்சத்தனத்தாலேயே சண்டை ஏற்படும்.

என்ன ஆடை உடுத்தியிருக்க, இது என்ன ஹேர்ஸ்டைல், ஏன் இப்படி நடக்கிறாய் என்று எதற்கெடுத்தாலும் குறை கூறும் ஆண்கள் வேண்டவே வேண்டாம்.உங்களுக்கு சுதந்திரம் அளிக்காமல் தனது கைக்குள் அடக்கி வைக்க நினைக்கும் ஆண்களை காதலித்தாலும் பிரச்சனையே.எதற்கெடுத்தாலும் சந்தேகப்படும் ஆண்களை காதலித்தால் வாழ்க்கை நரகம் தான்.

உங்களை காதலித்துக் கொண்டு ஊரில் உள்ள பெண்களிடம் எல்லாம் கடலை போடுபவரும் வேண்டாம்.

 

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்