சின்னச் சின்ன சண்டைகள் கணவன் மனைவிக்கு இடையே இருந்தால்தான் மணவாழ்க்கை மகிழ்ச்ச
1 ஐப்பசி 2013 செவ்வாய் 05:42 | பார்வைகள் : 9477
உண்ணும் உணவில் கூட உப்பு, புளிப்பு, கசப்பு, இனிப்பு, துவர்ப்பு என அறுசுவைகளும் வேண்டும் என்று நினைக்கின்றோம். அப்பொழுதுதான் உண்ணும் உணவு சுவைப்பதோடு சத்துக்களும், நோய் எதிர்ப்பு சக்திகளும் உடம்பில் அதிகரிக்கும். மண வாழ்க்கையிலும் அதுபோலத்தான் சந்தோசம் மட்டுமே இருந்தால் அதில் சுவையேதும் இல்லை. வாழ்க்கை போராடித்து விடும். எனவே வாரத்திற்கு ஒருநாளைக்காவது சின்னச் சின்ன சண்டைகள் கணவன் மனைவிக்கு இடையே இருந்தால்தான் சுவாரஸ்யமாக இருக்கும் என்கின்றது சமீபத்திய ஆய்வு ஒன்று. இதில் புதுமணத்தம்பதிகள் முதல் திருமணமாகி 20 ஆண்டுகள் ஆன தம்பதிகளும் பங்கேற்றனர்.
தம்பதிகளுக்கு இடையே உணர்வுரீதியாகவும், மனரீதியாகவும் ஒத்துப்போவது பிணைப்பை அதிகரிக்கும். என்றாலும் சின்னச்சின்ன கருத்து மோதல்கள் அவசியம் என்று சில தம்பதிகள் கூறியுள்ளனர்.
20 முதல் 25 வயது தம்பதியரை ஒப்பிடும் போது 40 வயதுக்கு மேற்பட்ட தம்பதியர் மாதம் ஒருமுறை மட்டுமே சின்னச் சின்ன வாக்குவாதங்களில் ஈடுபடுகின்றனர். வயதாக வயதாக புரிந்து கொள்ளும் தன்மை அதிகரிப்பதையே இது உணர்த்துகிறது.
ஆண்களில் 8 சதவிகிதம் பேர் தினசரி மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக கூறியுள்ளனர். அதேசமயம் 12 சதவிகித பெண்கள் தங்களின் கணவருடன் தினசரி வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக கூறியுள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் விவாகரத்து செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது இதற்குக் காரணம் தம்பதியரிடையே ஒருவருக்கொருவர் மதிக்காததும், அன்பு, பாசம், பேச்சுவார்த்தை போன்றவைகளிடையே ஏற்பட்ட இடைவெளியும்தான் என்கின்றனர் நிபுணர்கள்.
கணவன் மனைவி இடையே புரிந்து கொள்ளாமல் பிரிவதை விட வாரம் ஒருமுறையாவது சின்னச் சின்ன செல்லச் சண்டைகள் போட்டால் உறவுப் பிணைப்பு அதிகரிக்கும் என்கின்றனர் ஆய்வை மேற்கொண்டவர்கள்.