Paristamil Navigation Paristamil advert login

மழலை

 மழலை

23 பங்குனி 2023 வியாழன் 10:00 | பார்வைகள் : 9607


நின் சிரிப்பலையில்
 
சிலிர்த்து போனேன்...
 
உன் சில்லுவண்டு பேச்சினிலே
 
இமை மூடாமல் திகைத்து போனேன்...
 
என் அருகில் நீ இருந்தால்
 
கடிகார நேரம் போதவில்லை...
 
உன் கண்ணக்குழி அழகிற்கு
 
இப்பாரினில் ஏதும் ஈடில்லை...
 
ஈசனும் தோற்று போவான்
 
வாயாடி உன் முன்னால்...
 
தேவியும் திகைத்து போவாள் கவிமகளே
 
உன் செயல்தன்னால்

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்