பச்சைப் புல்வெளிகள்
18 பங்குனி 2023 சனி 07:24 | பார்வைகள் : 6691
சேவல் கூட ஆழ்ந்த நிலையில்,
ஆத்துகாரி அணைத்து எழுப்புகிறாள்,
அடுத்த வேலை சாப்பாட்டிற்கு!
முப்போகம் விளைவித்த காலம் போய்,
ஒரு போகமாவது விளைவிப்போம் என்று
இளங்குளிர் பனியில் எருபூட்டி உளிக்கலப்பையோடு,
சற்றே சிறிதூரத்தில் வயலை அடைந்தேன்.
நிலத்தை இருகூறாக இருமுறை உழுது,
பின்! இருநாள் கழித்து மீண்டும் ஓர் முறை
ஓரடிவரை உழுவிட்டு, தண்ணீரில் சேறுகளயாக்கி,
மட்டப்பளவையில் சமதளமாக்கினேன்.
வருணனை நினைத்து வாரி இறைந்தேன்,
வயலில் விதைநெல்லை, மாதம் கழிய!
நாத்து பிடிங்கி கட்டி வைத்தேன்,
கட்டியவள் முதல் நாற்று நட வேண்டும் என்று!
சாண உரமிட்டு, பின் நாலுமங்கையர், நாலாபுரமும் ,
நாவிசையில் நட்டு வித்தால் முதல் நாற்றிணை.
நாள் கழிய, தவளைகள் துள்ளி விளையாட,
உர மருந்துகளை தூவி வரப்பிலமர்த்தேன்.
பச்சை புல்வெளிகள் என்னை சூழ்ந்திருக்க,
இளந்துளிர் காற்றுடன், நெற்கதிர் வாசமும் பிணைந்து
தன் மனை திரும்ப, என் மனமில்லை, எம்மனதில்!
மங்கிய மஞ்சள் நிற கதிர்களை அறுவடை முடித்து,
அரை நிர்ணய விலையில் விற்று,
கடைத்தெருவில் ஒரு ஆளாக்கரிசிக்கு அதிவிலையில்
பெற்று, மனம் கனத்து மனை வந்தேன்.
மாதம் கழிய!
சேவல் கூட ஆழ்ந்த நிலையில்,
ஆத்துகாரி அணைத்து எழுப்புகிறாள்,
அவள் அரவணைப்பில்